Jio களமிறக்கிய புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்.. OTT.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. பட்டியல் இதோ..
ஜியோ நிறுவனம் கடந்த வாரம் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த திட்டங்கள் எக்கச்சக்க நன்மைகளுடன் வெளிவந்துள்ளன. இப்போது கடந்த வாரம் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 459 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் கூடுதலாக 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே இந்த ஜியோ திட்டம் மொத்தமாக 61ஜிபி டேட்டா வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்திலும் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஸ்னாப்சாட்+ சந்தா (Snapchat+ subscription), ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile), ஃபேன்கோட் (FanCode) போன்றவற்றின் அணுகலும் கிடைக்கும். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud)போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.
ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா ஜியோ ரூ.459 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதனுடன் Nano Banana அம்சத்தையும் பயன்படுத்த முடியும். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பல நன்மைகள் இந்த புதிய திட்டத்தில் உள்ளன.
ஜியோவின் ரூ.200 மெகா கன்டென்ட் ஆட்-ஆன் பேக் (Jio Rs 200 Mega Content Add-on Pack) என்பது ஒரு டேட்டா திட்டம் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்காது. ஆனால் திட்டத்தில் 5ஜிபி டேட்டா கிடைக்கும்.
யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் +Hollywood, அமேசான் பிரைம், சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி +, சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி (Planet Marathi),ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (Fancode), சாவ்பால் (Chaupal) போன்ற ஓடிடி நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.200 மெகா கன்டென்ட் ஆட்-ஆன் பேக்.
ஜியோ ரூ.200 மெகா கன்டென்ட் ஆட்-ஆன் பேக் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த ரூ.200 திட்டம் ஆனது டேட்டா பேக் என்பதால், இதைப் பயன்படுத்த உங்களிடம் பின்னணியில் மற்றொரு செயலில் உள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும்.

ஜியோவின் ரூ.111 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 111 prepaid plan) ஆனது ஒரு டேட்டா பேக் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தில் 2 ஆப்களில் சலுகைகள் கிடைக்கும். இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். அதன்படி முதல் விருப்பத்தில் 56 நாட்களுக்கு ஜியோகேம் மொபைல்(JioGame Mobile) பயன்படுத்தலாம்.
இரண்டாவது விருப்பத்தில் 28 நாட்களுக்கு ஜியோகேம் மொபைல், பேன்கோட் (Fancode) ஓடிடி , ஸ்னாப்சாட் (Snapchat) போன்றவற்றைப் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த ரூ.111 திட்டம் டேட்டா பேக் என்பதால், இதைப் பயன்படுத்த உங்களிடம் பின்னணியில் மற்றொரு செயலில் உள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications