மறுபடியும் ரூ.300 பட்ஜெட்டுக்கு இறங்கிய அம்பானி.. முழுசா 1 மாதம்.. Jio புது திட்டம்.. எவ்ளோ GB, என்ன விலை?
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்காக ரூ.339 என்கிற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio New Rs.339 Prepaid Plan ) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.339 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நண்மைகள்: ஜியோவின் புதிய ரூ.339 ப்ரீபெய்ட் திட்டமானது டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய "வழக்கமான? நன்மைகளை வழங்குகிறது.

"கூடுதல்" நன்மைகளை பொறுத்தவரை இது ஜியோடிவி, ஜியோடிவி ஏஐ கிளவுட் ஆப் சந்தா போன்ற பிற நன்மைகளையும் வழங்குகிறது. ஆனால் ஓடிடி (OTT) நன்மை எதுவும் இல்லை. 5ஜி டேட்டாவும் இல்லை. ஏனெனில், இந்த திட்டம் டெய்லி 1.5ஜிபி டேட்டாவுடன் வருகிறது. ஜியோ தனது 5ஜி சேவையை, டெய்லி 2ஜிபி அல்லது அதற்கும் அதிகமான டேட்டாவை வழங்கும் திட்டங்களில் மட்டுமே வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஒரு மாத திட்டமானது, ஒரு மாதத்தில் ஒரு பயனர் ரீசார்ஜ் செய்யும் நாட்களின் எண்ணிக்கையை பொறுத்து, ஒரு நாளைக்கு சுமார் ரூ.10.93 முதல் ரூ.11.30 வரை என்கிற தினசரி செலவை வழங்குகிறது. மாதாந்திர திட்டத்தில், பயனர்கள் அடுத்த மாதமும் அதே தேதியில் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.339 திட்டம் மட்டுமே மாதாந்திர செல்லுபடியுடன் வரும் ரோய் திட்டம் அல்ல, ஜியோ நிறுவனம் இதே போன்ற பலன்களுடன் ரூ.319 திட்டத்தையும் வழங்குகிறது. அப்படியென்றால் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதிய ரூ.339 திட்டத்தில் ரூ.14.95 மதிப்புள்ள டாக் டைம் வழங்கப்படுகிறது. இது பெரும்பாலும் பயனுள்ளதாக இருக்காது, ஆனால் ஒரு சிறிய பிரிவினர் இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ரீசார்ஜ் செய்யக்கூடும்.
ஜியோவின் வேலிடிட்டி குறைப்பு: சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 90 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வந்த ஒரு திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை செய்து, அதன் வேலிடிட்டியை வெறும் 30 நாட்களாக குறைத்து உள்ளது. அது ரூ.195 கிரிக்கெட் டேட்டா பேக் (Jio Rs.195 Cricket Data Pack) ஆகும். இதன்கீழ் கிடைத்த டேட்டா பலன்களை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, ஜியோ நிறுவனம் இதன் செல்லுபடியாகும் காலத்தை கணிசமாக குறைத்துள்ளது.
ஜியோ ரூ.195 கிரிக்கெட் டேட்டா பேக்கின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இதன் வேலிடிட்டி புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும், நன்மைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த திட்டத்தை ரீசாஜ் செய்யும் சந்தாதாரர்கள் மொத்தம் 15 ஜிபி டேட்டாவை பெறுவார்கள். இது அனைத்தும் அதிவேகஇண்டர்நெட் ஸ்பீடின் கீழ் கிடைக்கும்.
ஒதுக்கப்பட்ட டேட்டா தீர்ந்த உடன், அதாவது 15ஜிபி டேட்டா காலி ஆனவுடன் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் ஆகா குறைக்கப்படும்; இதே ஸ்பீடின் கீழ் இண்டர்நெட்டை தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த பேக் - டேட்டா நன்மையை மட்டுமே கொண்டுள்ளது, இதில் வாய்ஸ் அல்லது எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால் - டேட்டாவுடன் கூடுதலாக, கிரிக்கெட் மற்றும் பிற கன்டென்ட்களை ஸ்ட்ரீம் செய்ய விரும்பும் பயனர்களுக்காக, ஜியோவின் ரூ.195 ஆனது 90 நாட்களுக்கு இலவச ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் (Free JioHotstar mobile subscription) தொடர்ந்து வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








