மறுபடியும் கீழ இறக்கியாச்சு.. இனி ரூ.175 இல்ல.. இந்த ரூ.11 போதும்.. பழைய ஆட்டத்தில் அம்பானி.. Jio-க்கு குஷி!
இந்திய டெலிகாம் மார்கெட்டே கனவிலும் நினைக்காதபடி 4ஜி டேட்டாவை இலவமாக கொடுத்து, ஒட்டுமொத்தமாக கஸ்டமர்களையும் வாரித் தூக்கியது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம். ஆனால், அதன்பிறகு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. அடிமட்ட விலைக்கு கிடைத்த திட்டங்களும் மாற்றப்பட்டன. சில திட்டங்கள் அடியோடு தூக்கப்பட்டன. இப்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் தலைத்தூக்கி வருவதால், பழைய ஆட்டத்தில் அம்பானி குதித்துத்தானே ஆக வேண்டும். ஆமாம், ஜியோ கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ப்ரீபெய்ட திட்டம் மீண்டும் களமிறங்கப்பட்டு இருக்கிறது.
சொல்லப்போனால், ஜியோ நிறுவனத்துக்கு மாறுவதற்கான முக்கிய காரணமாக டேட்டா சலுகை மட்டுமே இருந்தது. ஆகவே, டேட்டா சலுகையை வழங்கும் திட்டங்கள் ஜியோவில் அதிகமாக கிடைத்தன. ஆனால், நாளடைவில் சத்தமே இல்லாமல், அந்த திட்டங்கள் தூக்கப்பட்டன. இதில் ஜியோ டேட்டா பேக்குகள் (Jio Data Packs) மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கும் இருந்தன.

ரூ.10-க்கும் டேட்டா திட்டங்கள் கொடுக்கப்பட்டன. இப்போது, இந்த விலையில் மீண்டும் ஒரு திட்டம் களமிறங்கி இருக்கிறது. 10 ஜிபி டேட்டா வேண்டுமானால், இனிமேல் ரூ.175 மதிப்பிலான திட்டத்துக்கு செல்ல வேண்டாம். வெறும் ரூ.11 விலையில் கிடைக்கும் இந்த புதிய டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். ஆனால், வேலிடிட்டியில் கவனமுடன் இருக்க வேண்டும்.
புது ஜியோ திட்டம் ரூ 11 விவரங்கள் (New Jio Plan Rs 11 Details): இந்த திட்டத்தின் விலையை பார்த்தாலே உங்களுக்கு புரிந்திருக்கும், இதில் டேட்டாவை தவிர வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற மற்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. ஆமாம், இந்த திட்டத்தில் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 10 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
இது கிட்டத்தட்ட ரூ.1-க்கு 1 ஜிபி டேட்டா என்ற கணக்கில் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 1 மணி நேரம் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், இதன் விலை அடிமட்ட விலைக்கு இருக்கிறது. உங்களது பேஸ் ப்ரீபெய்ட் திட்டத்தின் டேட்டா தீர்ந்த பிறகு மலிவான விலைக்கு டேட்டா திட்டம் வேண்டுமானால், இப்போது இதைவிட்டால் வேறு நல்ல ஆப்ஷன் கிடையாது.
இந்த 10 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை இதில் பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த திட்டம் பழையபடி டேட்டா விரும்பிகளை தட்டித்தூக்க வாய்ப்புள்ளது. இதே 10 ஜிபி டேட்டாவுடன் கூடுதல் வேலிடிட்டி மற்றும் முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கும் மற்றொரு டேட்டா திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
ஜியோ டேட்டா, ஓடிடி திட்டம் ரூ 175 (Jio Data OTT Plan Rs 175): இந்த டேட்டா திட்டத்திலும் 10 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. ஆனால், 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் பெற்று கொள்ளலாம். ஆனால், இந்த டேட்டா சலுகைகள் போக 10-க்கும் அதிகமான முன்னணி ஓடிடி ஆப்களை கஸ்டமர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஓடிடி ஆப்களில் ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5) மற்றும் சன்நெக்ஸ்ட் (Sun NXT) போன்றவை கிடைக்கின்றன. மேலும், டிஸ்கவரி பிளஸ் (Discovery+), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), டாகுபே (DocuBay), பிளானட் மராத்தி (Planet Marathi), எபிக் ஆன் (EPIC ON), சாவ்பால் (Chaupal), ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications