புது ஆஃபர்.. 2025-க்கு 200 நாட்கள்.. புது வருடத்துக்கு அம்பானி ஆஃபர்.. அன்லிமிடெட் கால்கள்.. 2.5 ஜிபி டேட்டா!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, புத்தாண்டு ரீசார்ஜ் திட்டங்களை (New Year Recharge Plans) களமிறக்கி இருக்கிறது. அடுத்த வருடத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் சலுகைகளை 200 நாட்களுக்கு கொடுக்கும்படி இந்த ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதனால் கஸ்டமர்கள் அறக்க பறக்க ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஏனென்றால், இந்த 200 நாட்கள் திட்டமானது, ஜனவரி 11ஆம் தேதிக்குள் முடிந்து போக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும்?
ஜியோ ரூ 2025 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 2025 Prepaid Recharge Plan): இந்த ஜியோ திட்டத்தில் 200 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் ஜியோ கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகைகள் கிடைக்கும்.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கும். இந்த போஸ்ட் டேட்டாவானது, 2.5 ஜிபிக்கு பிறகு கொடுக்கப்படும். ஆனால், இந்த திட்டத்தை பெற்ற கஸ்டமர்கள் 5ஜி சலுகையை பெற்றுள்ளபட்சத்தில், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆகவே, டேட்டாவில் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்தவித கவலையும் கிடையாது. அதேபோல வாய்ஸ் கால்களும் இருக்கின்றன. அதாவது, டேட்டாவை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) கால்கள் இருக்கிறது. மேலும், எஸ்டிடி (STD) கால்களையும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகைகளை ஜியோ கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.
மேலும், தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். இந்த மூன்று சலுகைகளும் போக புத்தாண்டுக்கான பிரத்யேகமாக கொடுக்கப்படும் சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. ஆகவே, ஆன்லைன் ஷாப்பிங், ஃபுட் ஆர்டர், டிக்கெட் புக்கிங்கிங் போன்றவற்றில் ரூ.2150 மதிப்பிலான கூப்பன்கள் ஜியோ கஸ்மர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
ஆகவே, இந்த திட்டத்தில் அஜியோ (Ajio) ஆப் மூலம் ரூ.2999-க்கு மேல் ஷாப்பிங் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். அதேபோல ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) ஆப் மூலம் ஃபிலைட் டிக்கெட் புக்கிங் செய்தால், ரூ.1500 சலுகை வழங்கப்படும். ஸ்விக்கி (Swiggy) ஆப் பயன்படுத்தி ரூ.499-க்கு மேல் ஆர்டர் செய்தால் சலுகை கிடைக்கிறது.
அதாவது, ரூ.150 சலுகை கொடுக்கப்படும். இப்படி ஜியோ நிறுவனம் சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. ஆனால், ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், அதை ஜனவரி 11ஆம் தேதிக்குள் செய்து முடித்துவிடுங்கள். அதற்கு பிறகு இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது. இதே போல ஏர்டெல் நிறுவனமும் புது திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
ஏர்டெல் ரூ 398 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 398 Prepaid Recharge Plan): இந்த திட்டம் புத்தாண்டை முன்னிட்டு கொண்டுவரப்படவில்லை. ஆனால், ஜியோ நிறுவனம் புத்தாண்டு திட்டத்தை கொண்டுவரும் நேரத்தில் இதுவும் வந்திருக்கிறது. இந்த திட்டத்தில் ஓடிடி பிரியர்களுக்கான சலுகைகளை எதிர்பார்க்க முடிகிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது.
முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பேக் செய்துள்ளது. அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு செய்து கொள்ள கிடைக்கின்றன. ரூ.149 விலை கொண்ட டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மொபைல் சந்தாவை பெற்று கொள்ளலாம். இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








