Home
News

2025-ன் முதல் ஆபர்.. அடுத்த 2 வருஷத்துக்கு FREE.. Jio அறிவித்துள்ள புதிய ஆபர்.. எந்தெந்த திட்டங்களில்?

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவானது (Jio) ஒரு அட்டகாசமான இலவச ஆபரை அறிவிக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. 2025 புத்தாண்டிற்காக ஜியோ ப்ரீபெய்ட் சேவையின் கீழ் ரூ.2025 மதிப்புள்ள புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட, அதுவொரு புதிய திட்டம் என்கிற கணக்கின் கீழ் தான் வருமே தவிர இலவச ஆபரின் கீழ் வராது!

ஜியோ கஸ்டமர்கள் சந்தித்த இந்த ஏமாற்றத்தை சரிசெய்யும் அளவில், ஜியோ நிறுவனம் ஒரு புதிய இலவச ஆபரை அறிவித்துள்ளது. அதுவும் 24 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் ஒரு இலவச ஆபரை அறிவித்துள்ளது. அதென்ன ஆபர்? இது எந்தெந்த திட்டங்களின் கீழ் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

அடுத்த 2 வருசத்துக்கு FREE.. Jio அறிவித்துள்ள புதிய ஆபர்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் ஏர்ஃபைபர் / ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கான இலவச யூடியூப் பிரீமியம் சந்தாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது ஜியோவின்போஸ்ட்பெய்டு பிராட்பேண்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே இந்த இலவச சலுகை னகிடைக்கும்

இதுபோன்ற இலவச யூடியூப் பிரீமியம் சந்தா இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பது இதுவே முதல் முறையாகும். இது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் யூடியூப் நிறுவனத்திற்கு இடையேயான கூட்டாண்மையை குறிக்கிறது. நினைவூட்டும் வண்ணம் தற்போது இந்தியாவில் யூடியூப் பிரீமியம் சந்தாவிற்கான ஒரு மாத கட்டணம் ரூ.159 ஆகும்.

ஒருவேளை நீங்கள் 12 மாத திட்டத்தை தேர்வு செய்தால் ரூ.1490 செலவாகும். இருப்பினும், ஜியோஃபைபர் /ஏர்ஃபைபர் போஸ்ட்பெய்ட் பிராட்பேண்ட் திட்டங்களின் வழியாக 1 ஆண்டு அல்ல, மொத்தம் 2 ஆண்டுகளுக்கு யூடியூப் பிரீமியம் சந்தாவை இலவசமாக பெறலாம். இது எந்தெந்த திட்டங்களின் கீழ் கிடைக்கும் என்கிற பட்டியல் இதோ:

ஜியோஃபைபர் / ஏர்ஃபைபர் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் பின்வரும் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2 ஆண்டு கால இலவச யூடியூப் பிரீமியம் சந்தா சலுகைக்கு தகுதி பெறுவார்கள்: அவைகள் ரூ.888, ரூ.1199, ரூ.1499, ரூ.2499 மற்றும் ரூ.3499 ஆகிய 5 திட்டங்கள் ஆகும்,

அறியாதோர்களுக்கு யூடியூப் பிரீமியம் சந்தாவின் கீழ் பயனர்கள் விளம்பரமில்லா வியூவிங் எக்ஸ்பீரியன்ஸ் (Ad-free viewing experience), ஆப்லைனில் பார்ப்பதற்காக வீடியோக்களை பதிவிறக்கும் திறன் (Ability to download videos for offling watching), பேக்கிரவுண்ட் பிளே (Background play) ஆதரவு மற்றும் யூடியூப் மியூசிக் பிரீமியமிற்கான (YouTube Music Premium.) அணுகல் போன்றவைகளை பெறுவார்கள்.

இலவச யூட்யூப் பிரீமியத்தை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முதலில், நீங்கள் ஜியோஃபைபர் அல்லது ஏர்ஃபைபர் சேவையில் இருந்து தகுதியான போஸ்ட்பெய்டு பிராட்பேண்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு, உங்கள் மைஜியோ (MyJio) அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்து. ஆப்ஸ் அல்லது இணையதளத்தில் காட்டப்படும் யூட்யூப் பிரீமியம் பேனரை கிளிக் செய்யவும்

பின்னர் உங்கள் யூட்யூப் அக்கவுண்ட்டிற்குள் லாக்இன் செய்யவும். உங்களிடம் ஏற்கனவே ஒரு அக்கவுண்ட் இல்லை என்றால், புதிதாக ஒன்றை உருவாக்கவும். பின்னர் நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு, நீங்கள் ஜியோஃபைபர் அல்லது ஏர்ஃபைபர் சேவையின் கீழ் இருக்கும் வரை இலவச யூட்யூப் பிரீமியம் சந்தாவை பெறுவீர்கள்

ஒருவேளை நீங்கள் ஜியோ போஸ்ட்பெய்டு பிராட்பேண்ட் சந்தாதாரராக இருந்தால், உங்களுக்கு இலவச ஜியோ செட்-டாப் பாக்ஸ் (STB) வழங்குமாறு ஜியோ நிறுவனத்திடம் கோரலாம். அதைப் பயன்படுத்தி உங்கள் பழைய டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம், அதன் வழியாக ஓடிடி தளங்களை அணுகலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

ஜியோவின் புதிய ரூ.2025 மதிப்புள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜின் நன்மைகளை பொறுத்தவரை, இது 200 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 500ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். அதாவது இது டெய்லி 2.5ஜிபி என்கிற அளவிலான டேட்டாவை கொடுக்கும். டெய்லி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Jio Offer Free YouTube Premium Offer for 2 Years on 5 JioFiber and AirFiber Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X