Jio-வின் அடுத்த சிக்ஸர்.. 2 நாள் வேலிடிட்டி உடன் புதிய திட்டம்.. என்ன விலை.. என்ன நன்மை?
ரூ.19 மற்றும் ரூ.29 க்கு 2 புதிய டேட்டா-ஒன்லி பேக்குகளை அறிமுகம் செய்த கையோடு, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), தனது பயனர்களுக்கு 2 புதிய ஐஆர் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. கூடவே தனது ஐஆர் திட்டங்களில் இருந்த குழப்பங்களையும் தெளிவுபடுத்தி உள்ளது.
அறியாதோர்களுக்கு, ஐஆர் திட்டங்கள் என்றால் இன்டர்நேஷனல் ரோமிங் (International Roaming) திட்டங்களாகும். முன்னதாக மிகவும் குழப்பமான முறையில் அணுக கிடைத்த ஜியோவின் ஐஆர் திட்டங்கள், தற்போது மிகவும் தெளிவான முறையில் 5 வகைகளாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு நன்மைகளை வழங்கும்படி தயார் செய்யப்பட்டுள்ளன.

தற்போது ஜியோவின் ஐஆர் திட்டங்களானது டிராவல் பாஸ் (Travel Pass), ரோம் மோர் பேக்ஸ் ( Roam More Packs), இன்டர்நேஷனல் வைஃபை காலிங் (International Wi-Fi Calling), குளோபல் பேக்ஸ் (Global Packs) மற்றும் ஐஆர் டேட்டா-ஒன்லி பேக்ஸ் (IR Data-Only Packs) என மொத்தம் 5 வகைகளாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு நன்மைகளை வழங்கி, பயனர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன.
மேற்கண்ட 5 வகைகளில் ஒன்றான இன்டர்நேஷனல் வைஃபை காலிங்கின் கீழ் தான் 2 புதிய திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவைகள் ரூ.121 மற்றும் ரூ,521 ஆகும். இந்தியாவிற்கான சர்வதேச அழைப்புகளை வழங்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள இவ்விரு திட்டங்களில், ரூ.121 ஆனது 2 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.
நன்மைகளை பொறுத்தவரை ரூ.121 ஐஆர் திட்டமானது 100 நிமிடங்களுக்கான இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் வைஃபை அழைப்புகளை வழங்கும். மறுகையில் உள்ள ரூ.521 திட்டமானது 10 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 500 நிமிடங்களுக்கான இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் வைஃபை அழைப்புகளை வழங்கும்.
டிராவல் பாஸ் (Travel Pass) தொகுப்பின் கீழ் வெவ்வேறு வகையான செல்லுபடியாகும் காலத்தை வழங்கும் 3 திட்டங்கள் உள்ளன. அவைகள் ரூ.499, ரூ.2,499 மற்றும் ரூ.4,999 ஆகும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த மூன்று டிராவல் பாஸ் ஐஆர் திட்டங்களுமே 32 நாடுகளில் செல்லுபடியாகும்
குளோபல் பேக்ஸ் தொகுப்பின் கீழ் இரண்டு திட்டங்கள் உள்ளன: ரூ.1101 மற்றும் ரூ.1102. இந்த திட்டங்கள் 130 நாடுகளுக்கு மேல் செல்லுபடியாகும். அடுத்ததாக உள்ள ரோம் மோர் (Roam More) தொகுப்பின் கீழ் மூன்று திட்டங்கள் உள்ளன: ரூ.1,499, ரூ.3,999 மற்றும் ரூ.5,999. இந்த திட்டங்கள் 44 நாடுகளுக்கு செல்லுபடியாகும்.
கடைசியாக உள்ள டேட்டா ஒன்லி தொகுப்பின் கீழ் மொத்தம் நான்கு திட்டங்கள் உள்ளன: ரூ.999, ரூ.2,999, ரூ.4,499 மற்றும் ரூ.5,899. இதில் ரூ.999 திட்டமானது 1ஜிபி டேட்டாவை 7 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது ரூ.2,999 திட்டமானது 5ஜிபி டேட்டாவை (7 நாட்கள்) வழங்குகிறது. ரூ.4,999 திட்டமானது 8ஜிபி டேட்டாவை (14 நாட்கள்) வழங்குகிறது. ரூ.5,899 திட்டமானது 10ஜிபி டேட்டாவை (21 நாட்கள்) வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








