அடங்காத அம்பானி.. 4-வது தீபாவளி ஆபர் அறிவிப்பு.. அடுத்த 3 மாசத்துக்கு இந்த Jio சேவை இலவசம்!
ஜியோ (Jio) நிறுவனமானது, 2024 தீபாவளி பண்டிகைக்கான தனது 4வது சலுகையை அறிவித்து உள்ளது. முதலில் - ஜியோ தீபாவளி தமாகா சலுகையின் (2024 Diwali Dhamaka Offer) கீழ் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) வாடிக்கையாளர்களுக்கு 1 ஆண்டு இலவச சந்தா அறிவிக்கப்படது.
இரண்டாவதாக - ஜியோவின் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது ரூ.3350 மதிப்புள்ள இலவச வவுச்சர்கள் / கூப்பன்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாவதாக - 2 ஜியோபார்த் 4ஜி ஃபீச்சர் போன்கள் மீது ரூ.300 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டு, அவைகள் ரூ,999 க்கு பதிலாக வெறும் ரூ.699 க்கு வாங்க கிடைக்கிறது.

தற்போது ஜியோ நிறுவனம் தனது நான்காவது தீபாவளி ஆபரை அறிவித்துள்ளது. இது ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான ம்யூசிக்-ஸ்ட்ரீமிங் தளமான ஜியோசாவன் சேவை தொடர்பான சலுகையாகும். இதன் கீழ் ஜியோசாவன் ப்ரோ சந்தாவானது (JioSaavn Pro Individual Subscription) 3 மாத காலத்திற்கு, எந்த கட்டணமும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோசாவன் ப்ரோ சாந்தாவின் கீழ் விளம்பரம் இல்லாத ம்யூசிக் ஸ்ட்ரீமிங் மற்றும் மிக உயர்ந்த தரத்தில் அன்லிமிட் டவுன்லோட்கள் ஆகிய முக்கிய நன்மைகள் கிடைக்கும். இந்த சலுகையை பெற, புதிய பயனர்கள் ஜியோசாவன் ப்ரோவில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன், அவர்கள் 3 மாதங்களுக்கு எந்த தடையும் இல்லாமல் ம்யூசிக்கை கேட்கலாம். ஜியோசாவனின் கீழ் 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, ஜியோவின் தீபாவளி தமாகா ஆபரின் கீழ், ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி (JioBharat K1 Karbonn 4G) மற்றும் ஜியோபாரத் வி2 4ஜி (JioBharat V2 4G) ஆகிய 2 மாடல்களும் வெறும் ரூ.699 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது இவ்விரு மாடல்களுமே ரூ.300 விலை குறைப்பை பெற்று ரூ.999 க்கு பதிலாக (ஒரு குறிப்பிட்ட கால சலுகையின் கீழ்) ரூ.600 க்கு வாங்க கிடைக்கும்.
இதற்கும் முன்பாக ஜியோவின் தீபாவளி தமாக்கா ஆபரின் கீழ்.. 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.899 திட்டம் மற்றும் 1 ஆண்டுக்கு செல்லுபடியாகும் ரூ.3,599 திட்டம் ஆகிய ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,350 மதிப்புள்ள கூப்பன் / வவுச்சர் நன்மைகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் கீழ் ஹோட்டல்கள் மற்றும் விமானப் பயணங்களுக்கான ரூ.3000 மதிப்புள்ள ஈஸ்மைட்ரிப் EaseMyTrip) வவுச்சர், ரூ.999 அல்லது அதற்கு மேலான பர்சேஸ்களுக்கு ஏஜியோவின் (Ajio) ரூ.200 மதிப்புள்ள கூப்பன், ரூ.150 மதிப்புள்ள ஸ்விக்கி (Swiggy) வவுச்சர் ஆகியவைகள் அடங்கும். இந்த கூப்பன்களை உங்கள் போனில் இருக்கும் மைஜியோ (MyJio) ஆப் வழியாக ரீடீம் செய்து , பயன்படுத்தலாம்
இதை செய்ய மைஜியோ ஆப்பில் உள்ள ஆபர்ஸ் (Offers) செக்ஷனுக்கு செல்லவும். பின்னர் 'மை வின்னிங்ஸ் (My winnings) என்கிற விருப்பத்தை கிளிக் செய்து திறந்து, நீங்கள் ரிடீம் செய்ய விரும்பும் கூப்பனை கிளிக் செய்யவும். கடைசியாக கூப்பன் கோட்-ஐ காப்பி செய்து, பார்ட்னர் இணையதளத்திற்கு சென்று பணம் செலுத்தும் நேரத்தில் கூப்பனை பயன்படுத்தவும்.
ரூ.899 திட்டத்தின் வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை இது ட்ரூ அன்லிமிடெட் 5ஜி நன்மைகள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 2 ஜிபி டேட்டா + கூடுதலாக 20 ஜிபி டேட்டா என மொத்தம் 200ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட நன்மைகள் 90 நாட்களுக்கு வழங்குகிறது.
மறுகையில் உள்ள ரூ.3,599 திட்டமானது, ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 912.5 ஜிபி டேட்டா, ட்ரூ அன்லிமிடெட் 5ஜி நன்மைகள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களுக்கான இலவச அணுகல் ஆகிய நன்மைகளை மொத்தம் 365 நாட்களுக்கு அல்லது 1 ஆண்டுக்கு வழங்கும்.


Click it and Unblock the Notifications








