Home
News

புது சேஞ்ச்.. இனி ரீசார்ஜ் செஞ்சா.. ஆக்டிவ் வேலிடிட்டி வராது.. Jio-க்கு மாற்றம்.. டேட்டா திட்டத்துல வச்சாச்சு!

வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு (SMS) தனியாக ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுவர டிராய் (TRAI) என்றழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது, டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தை அடுத்து முன்னணி டெலிகாம் நிறுவமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) டேட்டா திட்டங்களில் புது மாற்றத்தை செய்துள்ளது. இனிமேல் டேட்டா திட்டங்களை ரீசார்ஜ் செய்யும்போது, அதன் வேலிடிட்டியை பார்க்கும்படி இந்த மாற்றம் இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவுக்கு பிறகு வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய திட்டங்களை ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் கொடுக்க திட்டமிட்டிருக்கின்றன. இதனால், ஏற்கவே அதிக சலுகைகளுடன் கிடைக்கும் டேட்டா திட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.

புது சேஞ்ச்.. இனி ரீசார்ஜ் செஞ்சா.. ஆக்டிவ் வேலிடிட்டி வராது Jio-க்கு!

அப்படி, ஜியோ நிறுவனத்தின் டேட்டா வவுச்சர்களில் (Data Vouchers) மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இது முதல்கட்டம்தான். வரும் நாட்களில் ஒட்டுமொத்த டேட்டா திட்டங்களிலும் மாற்றங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. இப்போது, ரூ.19 மற்றும் ரூ.29 விலையில் கிடைத்துவந்த ஜியோ டேட்டா வவுச்சர்களின் வேலிடிட்டி (Jio Data Vouchers Validity) குறைக்கப்பட்டுள்ளது.

ஜியோ ரூ.19 மதிப்பிலான டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. அதாவது, உங்களது பேஸ் திட்டத்தின் வேலிடிட்டி எத்தனை நாட்களுக்கு இருக்கிறதோ, அதுவரையில் இந்த டேட்டா வவுச்சருக்கும் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 90 நாட்கள் திட்டம் இருந்தால், 90 நாட்கள் வேலிடிட்டி இருக்கும்.

ஆனால், இனிமேல் இந்த டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 1 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்க இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல ரூ.29 மதிப்பிலான டேட்டா திட்டத்துக்கும் ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது 2 நாட்களாக வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இப்படி, ஒட்டுமொத்த டேட்டா வவுச்சர்களுக்கும் வேலிடிட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த டேட்டா வவுச்சர்களுக்கும் ஆக்டிவ் வேலிடிட்டி கொடுக்கப்படவில்லை. வரும் நாட்களில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்களில் சிம் கார்டு ஆக்டிவ் கிடைக்க போகிறது.

இதனால், இதுபோன்ற கூடுதல் டேட்டா திட்டங்களின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே, டேட்டா தேவைப்படும்பட்சத்தில் வேலிடிட்டி முடிய முடிய ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். பேஸ் திட்டத்தின் வேலிடிட்டி வரையில் டேட்டா வவுச்சர்களும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. இது டேட்டா தேவைப்படும் கஸ்டமர்களுக்கு கடுப்பாக இருக்கலாம்.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமானது, டேட்டா தேவைப்படாத கஸ்டமர்களுக்கு மலிவான விலையில் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், டேட்டா வேண்டாம் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டும் போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு திட்டங்களை கொடுக்கவும் டெலிகாம் நிறுவனங்களுக்கு புது உத்தரவை கொடுத்துள்ளது.

இந்த உத்தரவின்படி டேட்டா அல்லாமல், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கொண்ட திட்டங்களை கொடுக்க வேண்டும். இந்த திட்டங்கள் அதிகபட்சம் 365 நாட்கள், அதாவது ஒரு வருடத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்படி திட்டங்கள் வர இருக்கின்றன. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஏற்கனவே இதுபோன்ற டேட்டா அல்லாத திட்டங்களை வைத்திருக்கிறது.

இதனாலேயே டெலிகாம் கட்டண உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பக்கம் கஸ்டமர்களின் படையெடுப்பு அதிகரித்தது. ஆனால், இதுபோன்ற திட்டங்கள் இப்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவிலும் கிடைக்க இருக்கிறது. இதனால், கஸ்டமர்களுக்கு ஒரே மாதிரியான சேவைகள் உறுதி செய்யப்படும். இந்த சேவைகளிலேயே இனிமேல் போட்டிகள் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Jio Changes For Data Voucher Base Active Plan Validity Changed Of Rs 19 Rs 29 Plans Must We Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X