Home
News

2026 ஜனவரி முதல் எல்லாமே மாறுது.. IT Returns தாக்கல் புது Form, புது ரூல்ஸ்.. வருமான வரி சட்டம் திருத்தம்!

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பழமையான 1961 வருமான வரிச் சட்டத்தில் (Income Tax Act of 1961) திருத்தத்தை கொண்டுவந்ததன் மூலம், இந்தியாவின் வருமான வரி செயல்முறை ஆனது வருகிற 2026 ஆம் ஆண்டு ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

புதுப்பிக்கப்பட்ட வருமான வரிச் சட்டம் 2025-இன் கீழ் புதிய வருமான வரி ரிட்டர்ன்ஸ் படிவங்கள் (New ITR Forms) மற்றும் அது தொடர்புடைய புதிய விதிகளை (New ITR Rules) இந்திய அரசாங்கம் ஆனது ஜனவரி 2026 க்குள் அறிவிக்கும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தலைவர் ஆன ரவி அகர்வால் தெரிவித்துள்ளார்.

IT Returns தாக்கல் புது Form, புது ரூல்ஸ்!

இந்த விதிகள் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐடிஆர் படிவங்கள் ஆனது வரி செலுத்துவோர் பின்பற்றுவதற்கு எளிமையாகவும், தெளிவாகவும் இருக்கும்படியாக உருவாக்கப்படும் என்றும் ரவி அகர்வால் கூறி உள்ளார். மேலும் இந்த புதிய முறைக்கு மக்கள் எந்த குழப்பமும் இல்லாமல் மாறக்கூடிய வகையில் ஐடிஆர் விதிகள் மற்றும் மாற்றங்கள் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சம்பந்தப்பட்ட துறை ஆனது, புதிய படிவங்கள் மற்றும் விதிகளை வடிவமைத்து வருவதாகவும், வரி செலுத்துவோர் தங்கள் அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை சரிசெய்ய போதுமான நேரம் கிடைக்கும் வகையில் 2026 ஜனவரி மாதத்திற்குள் புதிய விதிகள் அறிவிக்கப்படும் என்றும் ரவி அகர்வால் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரிய திருத்தம்: கடந்த 2025 ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வருமான வரிச் சட்டம் 2025 ஆனது கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பழமையான 1961 வருமான வரிச் சட்டத்தை மாற்றுகிறது. வரி விகிதங்களை மாற்றுவது அல்ல, மாறாக சட்டத்தைப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதாக்குவதே இதன் யோசனை ஆகும்.

இந்த புதிய சட்டம் பழைய மற்றும் தேவையற்ற விதிகளை நீக்குகிறது, நீண்ட மற்றும் காலாவதியான மொழியை குறைக்கிறது மற்றும் முழு கட்டமைப்பையும் நெறிப்படுத்துகிறது. பிரிவுகளின் எண்ணிக்கை 819 இல் இருந்து 536 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாயங்கள் 47 இல் இருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளன.

இன்னும் எளிமையாகச் சொன்னால், வருகிற 20256 ஆம் ஆண்டு புதிய விதிகள் அமலுக்கு வருவதால், குழப்பத்தை குறைப்பதற்கும் இணக்கத்தை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட மிகவும் நெறிப்படுத்தப்பட்ட அமைப்பை வரி செலுத்துவோர்கள் காண்பார்கள். அது என்ன மாதிரியான மாற்றங்களாக இருக்கும்? என்பதை அறிய இன்னும் சில வாரங்கள் (2026 ஜனவரிக்காக) நாம் காத்திருக்க வேண்டும்.

இதுவொரு பக்கம் இருக்க புதிய வருமான வரி விதிமுறைகளின் விளைவாக, இந்தியாவில் பண பரிவர்த்தனைகளானது கூடிய விரைவில் கடுமையான செலவில் முடிவடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு வங்கியாளர் சர்தக் அஹுஜாவின் கூற்றுப்படி, சோதனையின் போது கண்டுபிடிக்கப்படும் விவரிக்கப்படாத ரொக்கம் இப்போது அபராதங்கள், கூடுதல் கட்டணங்கள் மற்றும் செஸ் உட்பட 84% வரியை ஈர்க்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்.

அஹுஜாவின் பதிவின்படி, இந்தியாவின் திருத்தப்பட்ட ரொக்க கையாளுதல் விதிகளின் முக்கிய விதிகளையும், அவற்றை மீறும் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு இப்போது பொருந்தும் கடுமையான அபராதங்களையும் கோடிட்டு காட்டுகிறது. வருமான வரித் துறையின் சோதனை அல்லது பறிமுதல் செய்யும் போது ஒருவரின் வளாகத்தில் விவரிக்கப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டால் 84% வரி பொறுப்பு பொருந்தும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்கள் குறித்து வரித்துறைக்கு தானாகவே அறிவிக்கப்படும் என்றும் அஹுஜா குறிப்பிடுகிறார்: அதாவது ஒரு நிதியாண்டில் நீங்கள் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணத்தை எடுத்தால், உங்கள் வங்கி அதை வருமான வரித் துறையிடம் தெரிவிக்கும். நீங்கள் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தால், வங்கி அந்த தொகைக்கு டிடிஎஸ் கழிக்கும்.

மீண்டும் மீண்டும் பெரிய அளவிலான பணத்தை எடுத்தால், குறிப்பாக ஆதாரம் தெளிவாக இல்லாவிட்டால், துறை வாரியான சோதனை அல்லது பறிமுதல் செய்ய தூண்டப்படலாம். சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகளுக்கு எந்த சகிப்புத்தன்மையும் இல்லை என்றும் அஹுஜா குறிப்பிட்டுள்ளார். சில பரிவர்த்தனைகளுக்கு இப்போது 100% அபராதம் விதிக்கப்படுகிறது - அதாவது மொத்த தொகையை விட இரண்டு மடங்கு தொகையை நீங்கள் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New ITR Forms and Rules From Indian Government Will be Release By January 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X