Home
News

பிப்.20 முதல் புது ரூல்ஸ்.. பேஸ்புக், இன்ஸ்டா.. இனி 3 மணி நேரம் கெடு.. உடனடியாக இத பண்ணனும்.. என்னென்ன மாறுது?

இந்திய அரசின் கீழ் செயல்படும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (IT Ministry) ஆனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியா ஆப்கள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட வீடியோ பிளாட்பார்ம்களுக்கு புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர உள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி முதல் இந்த புதிய ஐடி விதிகள் (New IT Rules) அமலாக இருக்கின்றன. இதுகுறித்த ஒட்டுமொத்த சோஷியல் மீடியா யூசர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

ஏஐ வழியாக உருவாக்கப்பட்ட கன்டென்ட்களுக்கு லேபிள் கொடுப்பது, டீப்ஃபேக்குகள் (Deepfakes) உள்ளிட்ட சட்டவிரோத கன்டென்ட்களை உடனடியாக நீக்குவது உள்ளிட்டவைக்கு ஏற்றவாறு, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2021 இன் கீழ் இந்திய அரசு விதிகளை திருத்தி இருக்கிறது. இந்த திருத்தப்பட்ட விதிகள் வருகிற பிப்ரவரி 20 முதல் அமலுக்கு வர இருக்கின்றன. இது சோஷியல் மீடியாவுக்கு பொருந்தும்.

பிப்.20 முதல் புது ரூல்ஸ்.. பேஸ்புக், இன்ஸ்டா.. இனி 3 மணி நேரம் கெடு!

ஆகவே, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விதிகளுக்கு ஏற்ப ஏஐ கன்டென்ட்களுக்கு லேபிள் கொடுக்க வேண்டும். சட்டவிரோத கன்டென்ட்களை உடனடியாக நீக்க வேண்டும். அதாவது, போலியாக உருவாக்கப்பட்ட வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்களை நீக்க அரசு அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும்.

முன்னதாக நீதிமன்றத்தால் அல்லது அரசாங்கத்தால் சட்டவிரோதமாக கருத்தப்படும் கன்டென்ட்களை நீக்க 24 மணி நேரம் முதல் 36 மணி நேரம் வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இப்போது, 2 முதல் 3 மணி நேரங்களுக்குள் நீக்க விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம், அரசாங்கம் உத்தரவிட்டால் சட்டவிரோத கன்டென்ட்களை 3 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும்.

அதுவே, தவறாக சித்தரிப்பது, டீப்பேக் செய்வது உள்ளிட்ட சென்சிடிவ் கன்டென்ட்களாக இருந்தால் 2 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும். இதுபோன்ற வீடியோ மற்றும் ஆடியோ கன்டென்ட்கள் ஆர்டிபிசியலி (செயற்கையாக)உருவாக்கப்பட்டாலும் சரி, அல்கோரிதமிகலி (வழிமுறையாகவே) உருவாக்கப்பட்டாலும் சரி இந்த விதிகள் பொருந்தும்.

மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட, ஜெனரேட் செய்யப்பட்ட, திருத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ கன்டென்ட்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். ஆகவே, எந்தவொரு தனிநபரையோ அல்லது நிகழ்வையோ பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டும் சட்டவிரோத ஏஐ கன்டென்ட்களை நீக்க இந்த விதிகள் வழிவகை செய்துள்ளது.

அதேபோல ஏஐ வழியாக உருவாக்கப்பட்ட சட்டவிரோதமற்ற கன்டென்ட்களையும் எளிதில் தெரிந்து கொள்ளும்படி, இது ஏஐ வழியாக உருவாக்கப்பட்டது என்னும் லேபிளை சேர்க்க வேண்டும் என்பதையும் இந்த புதிய விதிகள் உறுதி செய்துள்ளன. ஆகவே, சட்டவிரோத ஏஐ கன்டென்ட்கள் குறித்த புகார்கள் எழுந்தால், அது 3 மணி நேரத்துக்குள் சோஷியல் மீடியாவில் இருந்து நீக்கப்படும்.

இது தனிநபரின் பாதுகாப்பை உறுதி செய்யும். இதுபோன்ற கன்டென்ட்களை நீக்க சோஷியல் மீடியா தளங்களை வைத்திருக்கும் மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு உத்தரவு விதிக்கப்படும். இது புகார் எழுப்பப்பட்டு, நீதிமன்றம் அல்லது அரசாங்கம் தலையிட்டால் மட்டுமே, இந்த நீக்கும் விதிகள் பொருந்தும். ஆகவே, மற்ற கன்டென்ட்கள் வழக்கம்போல பதிவு செய்யப்படலாம். ஆகவே, ஒட்டுமொத்த கிரியேட்டர்கள் இதை தெரிந்து கொண்டு, கன்டென்ட்களை உருவாக்க வேண்டும்.

அதேபோல பிரபலங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரும்புள்ளிகளுக்கு எதிராக உருவாக்கப்படும் ஏஐ கன்டெட்களும் சட்டவிரோதமாக இருக்கும்பட்சத்தில் அதை நீக்கவும் பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற நிறுவங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டி இருக்கும். இதற்கு மறுக்கும்பட்சத்தில் தனியுரிமை கொள்கை மீறப்படுவதாக சொல்லப்படும். இதனால், 3 மணி நேரத்துக்குள் சட்டவிரோத கன்டென்ட்கள் கட்டயமாக நீக்கப்படும் என்பதில் சந்தேகம் கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New IT Rules Come Into Effect From 2026 February 20 Every Social Media Users Need To Know This
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X