ரயில்வே அமைச்சர் முக்கிய அறிவிப்பு.. ஜூலை 15-க்குள் புதிய IRCTC இணையதளம்.. இனி அந்த சிரமம் இருக்காது..
இந்திய ரயில்வே (Indian Railways) அமைப்பு அவ்வப்போது புதிய வசதிகளைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ரயில்வே அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதியும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
கேப்ட்சா (CAPTCHA) சிக்கல்
அதாவது ரயில் பயணங்களை முன்பதிவு செய்ய தினமும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ ரயில்வே இணையதளத்தில் உள்ள கேப்ட்சா (CAPTCHA) சிக்கல் குறித்து ஏராளமான புகார்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதுவும் அதிகபட்ச பயன்பாட்டு நேரங்களில் ஏற்படும் செயலிழப்புகள் மற்றும் தடங்களுக்காக ஐஆர்சிடிசி இணையதளம் நீண்ட காலமாகவே பாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஓடிபி பிரச்சனைகள் மற்றும் தட்கல் முன்பதிவுகளின் போது ஏற்படும் சர்வர் நெரிசல்கள் ஆகியவை பயணிகளின் முக்கிய புகார்களில் ஒன்றாகும். இந்நிலையில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆகவே கேப்ட்சா சிக்கல், ஓடிபி பிரச்சனை, சர்வர் நெரிசல்கள் போன்ற எந்த சிரமமும் இனி இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் இந்திய ரயில்வே அமைப்பு (Indian Railways) பல்வேறு புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது. குறிப்பாக இந்த புதிய விதிமுறைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
போர்டிங் ஸ்டேஷன் மாற்றும் வசதி
தற்போது ரயில் பயணிகள் தங்கள் ரயில் ஏறும் நிலையத்தை (Boarding Point) மாற்றிக் கொள்வதில் இருந்த கடினமான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதாவது புதிய விதிமுறைப்படி, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நீங்கள் ஏறும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம்.
குறிப்பாக இது உறுதிசெய்யப்பட்ட மற்றும் RAC டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த வசதி இருக்கும். ஒரு டிக்கெட்டிற்கு ஒரே ஒரு முறை மட்டுமே மாற்ற அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணம்
ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான பணம் திரும்ப அளிப்பது தொடர்பான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
நீங்கள் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு திட்டத்தை மாற்றி டிக்கெட்டை ரத்து செய்தால் உங்களுக்கு அதிகபட்ச ரீஃபண்ட் கிடைக்கும்.
குறிப்பாக ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் உங்கள் டிக்கெட் தொகையில் 25 சதவீதம் அபராதமாகப் பிடிக்கப்படும். மீதமுள்ள 75 சதவீதம் தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும்.

பயணத்திற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்யும் பட்சத்தில், டிக்கெட் கட்டணத்தில் சரிபாதி அதாவது 50 சதவீதம் பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது. அதாவது 100 சதவீதத் தொகையும் ரத்து கட்டணமாகவே கருதப்படும். தற்போது ரயில் புறப்படும் 8 மணி நேரத்துக்கு முன்பே சார்ட் போடப்படுகிறது. சார்ட் போட்ட பிறகு நீங்கள் கேன்சல் செய்தால் ஒரு ரூபாய் கூட ரீஃபண்ட வராது.


Click it and Unblock the Notifications