இந்தியாவில் இன்று ரிலீசாகும் நியூ ஐபேட்!

Posted By: Staff
இந்தியாவில் இன்று ரிலீசாகும் நியூ ஐபேட்!

அனைவரின் எதிர்பார்ப்பினையும் எகிற வைத்த ஆப்பிள் நிறுவனத்தின் நியூ ஐபேட் டேப்லட் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-2 டேப்லட்டை தொடர்ந்து வெளியான இந்த டேப்லட்டின் பெயர் ஐபேட்-3 என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூ ஐபேட் என்ற புதிய பெயருடன் வெளியான இந்த டேப்லட் இன்று இந்தியாவில் வெளியாகும்.

நியூ ஐபேட் அறிமுகமாவதற்கு முன்னரே வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சாதனம் நியூ ஐபேட் டேப்லட். இது இன்று இந்தியாவில் மின்னனு சாதன மார்கெட்டில் அறிமுகமாக உள்ளது என்ற இந்த செய்தி நிச்சயம் அனைவருக்கும் அதிக சந்தோஷத்தை ஏற்படுத்தும் ஒன்று. அதிலும் இந்த நியூ ஐபேட்டில் 6 வித மாடல்கள் உள்ளன.

இதில் வைபை தொழில் நுட்பம் கொண்ட 16 ஜிபி மாடலை ரூ.30, 500 விலையில் பெறலாம். அடுத்ததாக 32ஜிபி மாடலை ரூ.36,500 விலையில் பெறலாம். நியூ ஐபேடில் 64 ஜிபி மெமரியை வழங்கும் மாடலும் உள்ளது. இந்த மாடல் ரூ.42,500 விலை கொண்டதாக இருக்கும்.

வைபை தொழில் நுட்பத்துடன், 4ஜி நெட்வொர்க தொழில் நுட்பத்திற்கும் சப்போர்ட் செய்யும் நியூ ஐபேடில் 3 வகை உள்ளது. அதாவது இதில் 16 ஜிபி மாடலை ரூ.38,900 விலையிலும், 32 ஜிபி மாடலை ரூ.44,900 விலையிலும், 64 ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.50,900 விலையிலும் பெறலாம்.

டேப்லட்டில் 64 ஜிபி வரை கொண்ட மெமரியினை வழங்கும் இந்த புதிய நியூ ஐபேட் உண்மையில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டது தான். ஆனால் இதில் புதுமையான தொழில் நுட்பமாக ரெட்டினா திரையின் மூலம் 2048 X 1536 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.

இந்தியாவில் மட்டும் அல்லாது தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல், லித்துவேனியா, தாய்லாந்து உள்ளி்ட்டு 8 நாடுகளில் வெளியாக உள்ளது. இந்த ஆப்பிள் நியூ ஐபேட் ரூ.24,500 ஆரம்ப விலையை கொண்டது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்