iOS 17 Update: எந்தெந்த iPhone-களுக்கு கிடைக்கும்? எதற்கெல்லாம் கிடைக்காது? செக் செய்வது எப்படி?
ஆப்பிள் (Apple) தனது ஐபோன்களுக்கான ஐஓஎஸ் 17 அப்டேட்டை (iOS 17 Update) நேற்று, அதாவது செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் வெளியிடத் தொடங்கியுள்ளது. நினைவூட்டும் வண்ணம், ஐபோன் பயனர்களுக்கான இந்த புதிய சாஃப்ட்வேர் அப்டேட் ஆனது கடந்த ஜூன் மாதம் நடந்த டபுள்யூடபுள்யூடிசி 2023இல் (WWDC 2023) வெளியிடப்பட்டது.
கடந்த சில வாரங்களாக பீட்டா வெர்ஷனில் (Beta Version) கிடைத்த ஐஓஎஸ் 17 ஓஎஸ் - பல மாத சோதனைகளுக்கு பிறகு - உலகளவில் வெளியிட தொடங்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 17 அப்டேட் ஆனது எந்தெந்த ஐபோன் மாடல்களுக்கு கிடைக்கும்? எந்தெந்த மாடல்களுக்கு கிடைக்காது? இதோ விவரங்கள்:

இந்திய பயனர்களுக்கு ஐஓஎஸ் 17 ஓஎஸ் அப்டேட் எப்போது முதல் கிடைக்கும்? ஐஓஎஸ் 17 சாஃப்ட்வேர் அப்டேட்டின் சரியான வெளியீட்டு நேரத்தை (Launch Time) ஆப்பிள் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் கூட, இது செப்.18 ஆம் தேதி இரவு அல்லது செப்.19 ஆம் தேதி முதல் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
எந்தெந்த ஐபோன்கள் ஐஓஎஸ் 17 அப்டேட்டை பெறாது? புதிய ஐஓஎஸ் 17 ஆனது ஏ12 பயோனிக் சிப் அல்லது புதிய வெர்ஷனை கொண்ட ஐபோன்களை ஆதரிக்கிறது. அதாவது 2017 இல் வெளியிடப்பட்ட ஐபோன் எக்ஸ் (iPhone X), ஐபோன் 8 (iPhone 8) மற்றும் ஐபோன் 8 பிளஸ் (iPhone 8 Plus) ஆகிய அனைத்தும் இந்த ஆண்டுக்கான ஓஎஸ் அப்டேட்டிற்கு தகுதி பெறாது.
எந்தெந்த ஐபோன்கள் ஐஓஎஸ் 17 அப்டேட்டை பெறும் (iOS 17 Update Eligible iPhones)? ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro), ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max).
ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus), ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro), ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max), ஐபோன் 13 (iPhone 13), ஐபோன் 13 மினி (iPhone 13 Mini), ஐபோன் 13 ப்ரோ (iPhone 13 Pro), ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் (iPhone 13 Pro Max).
ஐபோன் 12 (iPhone 12), ஐபோன் 12 மினி (iPhone 12 Mini), ஐபோன் 12 ப்ரோ (iPhone 12 Pro), ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் (iPhone 12 Pro Max), ஐபோன் 11 (iPhone 11), ஐபோன் 11 ப்ரோ (iPhone 11 Pro), ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் (iPhone 11 Pro Max).
ஐபோன் எக்ஸ்எஸ் (iPhone XS), ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் (iPhone XS Max), ஐபோன் எக்ஸ்ஆர் (iPhone XR) மற்றும் ஐபோன் எஸ்இ (iPhone SE) ஆகிய மாடல்கள் ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 17 ஓஎஸ் அப்டேட்டை பெறும் என்று ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உங்கள் ஐபோனிற்கு ஐஓஎஸ் 17 அப்டேட் வந்துள்ளதா என்பதை எவ்வாறு சரிபார்ப்பது? உங்கள் ஐபோனுக்கு லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் கிடைக்கும்போது, அதுகுறித்த தகவலை ஆப்பிள் வழக்கமாக தன் பயனர்களுக்கு தெரிவிக்கும். இருப்பினும் நீங்கள் செட்டிங்ஸ் > ஜெனரல் > சாஃப்ட்வேர் அப்டேட் (Settings > General > Software Update) என்பதற்கு சென்று நீங்கள் கைமுறையாகவும் சரிபார்க்கலாம்.
புதிய ஐஓஎஸ் 17 அப்டேட் வழியாக என்னென்ன புதிய அம்சங்கள் உங்களுடைய ஐபோனிற்கு வரும்? ஐஓஎஸ் 17 அப்டேட் உடன் பல புதிய அம்சங்கள் வரும். அவைகளில் மிகவும் முக்கியமான அம்சங்களை பொறுத்தவரை லைவ் வாய்ஸ்மெயில் (Live Voicemail) இன்டர்ஆக்டிவ் ,விட்ஜெட்ஸ் (interactive widgets), போன் கால்களின் போது சிரியை (Siri) பயன்படுத்துதல், ஸ்டேண்ட்பை மோட் (Standby Mode) காண்டாக்ட் போஸ்டர்ஸ் (Contact Posters) மற்றும் பலவற்றை கூறலாம்.


Click it and Unblock the Notifications








