மூஞ்சிலே பூச்சி வுட்ருவேன்!சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும் "காக்ரோச் சேலஞ்" சைக்.!
டிக் டாக், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மோமோ சேலஞ், கீக்கி சேலஞ், ஐஸ் சேலஞ் போன்ற பல பதிவுகள் கொண்ட சவால்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்துகொண்டிருந்தது நாம் அனைவரும் அரித்த ஒன்றே. தற்பொழுது நெட்டிசன்கள் கவனம் காக்ரோச் சேலஞ் பக்கம் திசைமாறியுள்ளது.

என்னப்பா சொல்ற காக்ரோச்சா?
என்னப்பா சொல்ற காக்ரோச்சா? பல திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயினை கட்டிபுடிக்க பயன்படுத்துவாரே அந்த கரப்பான்பூச்சியா என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அதே கரப்பான்பூச்சி தான், அதை வைத்துத் தான் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் காக்ரோச் சேலஞ் வைரல் ஆகி வருகிறது.

#cockroachchallenge
இந்த சேலஞ்சை செய்வதற்கு நீங்கள் உங்கள் முகத்தின் மேல் கரப்பான்பூச்சியை ஓடவிட்டு செல்ஃபீ போட்டோ அல்லது செல்ஃபீ வீடியோவாக பதிவு செய்து #cockroachchallenge என்று டேக் செய்து உங்கள் அக்கௌன்ட்டில் போஸ்ட் செய்ய வேண்டும்.

முகஞ்சுளிக்க வைக்கும் சவால்
அலெக்ஸ் ஆங் (Alex Aung) என்ற பேஸ்புக் பயனர், கரப்பான்பூச்சியை தன் முகத்தின்மீது வைத்து செல்ஃபி எடுத்து அதை தன் முகநூல் பக்கத்தில் "புதிய சவால், உங்களால் இதைச் செய்ய முடியுமா?" ("New challenge, can you do this?") என்று கேட்டுப் பதிவு செய்திருக்கிறார். அவரை தொடர்ந்து பலரும் தற்பொழுது முகஞ்சுளிக்க வைக்கும் இந்த சவாலைச் செய்து வருகின்றனர்.

துணிச்சலுக்கு அளவே இல்லை
தற்பொழுது இளசுகள் முதல் பெருசுகள் வரை கரப்பான்பூச்சி வேட்டையைத் துவங்கியுள்ளனர். என்னதான் சவாலாக இருந்தாலும் ஒரு எல்லை வேண்டாமா? சும்மா போரப் பூச்சியை எடுத்து மூஞ்சி மேலயாவிடணும்? ஆனாலும் நம்மாளுங்க துணிச்சலுக்கு அளவே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.


Click it and Unblock the Notifications