இந்திய அரசு அதிரடி.. பென்ஷன் வாங்குறீங்களா? இல்ல வாங்கப்போறீங்களா? இனி இந்த ஆன்லைன் போர்ட்டல் தான் எல்லாமே..
தற்போது பென்ஷன் (Pension) வாங்குவோருக்கும், இனி எதிர்காலத்தில் பென்ஷன் வாங்கவிருக்கும் எதிர்கால ஓய்வூதியதாரர்களுக்கும் (Retirees) ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. பென்ஷன் சேவையை மேம்படுத்த இந்திய அரசாங்கம் தற்போது புதிதாக ஒரு போர்ட்டலை திறந்துவைத்துள்ளது.
இனி பென்ஷன் தொடர்பான அணைத்து சேவைகளும் இந்த ஆன்லைன் போர்ட்டல் (Pensioner online portal) வழியாக ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரட்டலின் பெயர் என்ன? இதை எப்படி அணுகுவது? இதன் மூலம் என்னென்ன சேவைகளை எல்லாம் நாம் பெற முடியும்? ஒவ்வொரு ஓய்வூதியதாரருக்கும் (Pensioners) இந்த போர்டல் ஏன் மிக முக்கியமானது? என்பது போன்ற தகவலை இப்போது பார்க்கலாம்.

ஒருங்கிணைந்த ஓய்வுதியதாரர் போர்ட்டல் (Integrated Pensioners' Portal):
இந்தியன் வங்கியுடன் இணைந்து, இந்திய அரசாங்கம் (Government of India) புதிதாக 'ஒருங்கிணைந்த ஓய்வுதியதாரர் போர்ட்டல்' (Integrated Pensioners' Portal) என்ற ஆன்லைன் சேவை போர்ட்டலை தற்போது திறந்துவைத்துள்ளது. இந்த போர்டல் இனி அணைத்து வகையான பென்ஷன் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, முதலில் ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர் போர்டல் (Online pension portal) என்றால் என்ன? என்பதை தெளிவுபடுத்திவிடலாம்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்களின் போர்டல் என்பது ஓய்வூதிய செயலாக்கம் மற்றும் கட்டணச் சேவைகளை சீரமைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான டிஜிட்டல் (digital) தளமாகும். ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலன் துறை (DoPPW) போர்ட்டல் ஓய்வூதிய சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பல்வேறு ஓய்வூதியம் தொடர்பான வசதிகளை அணுக ஒரு எளிமையான யூசர் பிரெண்ட்லி இடைமுகத்தை (user friendly interface) வழங்குகிறது.
இந்த புதிய ஓய்வூதியதாரர் போர்டல் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு என்ன நன்மைகள் (benefits of using Integrated pensioners portal) கிடைக்கும்? இந்த புதிய போரட்டலில் ஐந்து வங்கிகளின் ஓய்வூதிய செயலாக்கம் (pension processing) மற்றும் கட்டணச் சேவைகளை ஒரே இடத்தில் அணுக செய்கிறது. இதனால், ஒரே இடத்தில் ஓய்வூதியதாரர்கள் அவர்களுக்கு தேவையான தகவலை பெற முடிகிறது. இது பென்ஷனர் சேவையை மிகவும் எளிமையாக்கியுள்ளது.

பென்ஷன் தொடர்பான எல்லா சேவைகளும் ஒரே இடத்தில்:
இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வுதியதாரர் போர்ட்டலின் (Integrated Pensioners' Portal) மூலம் ஓய்வு பெற்றவர்கள் தங்களின் மாதாந்திர ஓய்வூதியச் சீட்டுகளை வசதியாக அணுக முடியும். அதேபோல், லைஃப் சர்ட்டிஃபிகேட் என்ற வாழ்க்கைச் சான்றிதழ்களின் நிலையைச் சரிபார்க்கவும், அணுகவும் இந்த போர்டல் அனுமதிக்கிறது. அதேபோல், படிவம் 16 (Form 16) சமர்ப்பிக்கவும் இந்த போர்டல் அனுமதிக்கிறது. பென்ஷனர்கள் செலுத்தப்பட்ட நிலுவைத் தொகையின் அறிக்கைகளைப் பார்க்கவும் இந்த போர்டல் அனுமதிக்கிறது.
இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வுதியதாரர் போர்ட்டலின் மூலம் கிடைக்கும் மற்றொரு சிறந்த சேவை என்றால், அது இந்த போரட்டலுடன் இணைக்கப்பட்டுள்ள பவிஷ்யா போர்டல் சேவை (Bhavishya portal) தான் என்று கூட கூறலாம். காரணம், இது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) அல்லது எஸ்பிஐ (SBI), பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda), பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank),
மற்றும் கனரா வங்கி (Canara Bank) போன்ற முக்கிய வங்கிகளின் ஓய்வூதிய இணையதளங்களை பவிஷ்யா போர்ட்டலுடன் இணைக்க இந்த ஒருங்கிணைந்த ஓய்வுதியதாரர் போர்ட்டல் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிலருக்கு பவிஷ்யா போர்ட்டல் என்றால் என்ன என்பது தெரிந்திருக்காது. பவிஷ்யா இயங்குதளம் போர்ட்டலின் ஒருங்கிணைந்த ஒரு அங்கமாகும். இது ஓய்வூதிய செயலாக்கம் (pension sanction process) மற்றும் பணம் செலுத்தும் நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டலைசேஷன் செய்து எளிதாக்குகிறது.
மின்னணு வடிவத்தில் ஓய்வூதியக் கொடுப்பனவு ஆணை (PPO) வழங்குவதற்கு ஓய்வூதியப் படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதை உள்ளடக்கிய வெளிப்படையான ஓய்வூதிய அனுமதி செயல்முறைக்காக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. லைஃப் சர்டிபிகேட் போன்ற பல ஓய்வூதியப் படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதை உள்ளடக்கிய வெளிப்படையான ஓய்வூதிய அனுமதி செயல்முறைக்காக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி பென்ஷன் வாங்கும் மக்கள் எந்த டென்ஷனும் இல்லாமல் இந்த ipension.nic.in புதிய போரட்டலை பயன்படுத்தி பயன்பெறலாம்.


Click it and Unblock the Notifications








