Instagram-க்கு கும்பிடு.. TIME வெச்ச போதும்.. அப்போ மெசேஜ் போகும்.. ஸ்கெடுள் டூ டிரான்லேஷன்.. புது பீச்சர்கள்!
யாருக்காவது பிறந்த நாள் வாழ்த்து சொல்லனும்னா விடிய விடிய கண் விழித்த காலம் எல்லாம் மாறியாச்சுங்க என்று சொல்லும்படி இன்ஸ்டாகிராம் (Instagram) யூசர்களுக்கு பீச்சர் வரப்போகிறது. இதுபோக மெசேஜ் செய்யும்போது டிரான்ஸ்லேஷன், ஷேரிங் மியூசிக், பின் மெசேஜ், குரூப் சாட் கியூஆர் கோட் போன்ற பல்வேறு பீச்சர்களை மெட்டா (Meta) நிறுவனம் களமிறக்க இருக்கிறது. இந்த பீச்சர்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இன்ஸ்டாகிராம் மெசேஜ் டிரான்லேஷன் (Instagram Message Translation): இன்ஸ்டாகிராம் மூலம் எந்த மொழியில் இருந்து வேண்டுமானாலும் மெசேஜ்களை பெற்று கொள்ளலாம். ஏனென்றால், அதில் டிரான்லேஷன் ஆப்ஷன் கிடைக்கிறது. இதன் மூலம் உங்களது மொழியில் அந்த மெசேஜை மொழி பெயர்த்து பெறலாம். இதேபோல நீங்கள் அனுப்பும் மெசேஜ் அவர்களுது மொழிக்கு மாற்றப்படும்.

இந்த பீச்சரானது, முன்பு சில மொழிகளை மட்டுமே கொடுத்தது. ஆனால், இப்போது 99 மொழிகளில் சேவையை வழங்க இருக்கிறது. இதை பயன்படுத்துவது மிகவும் சுலபமாகும். அதாவது, மாற்று மொழியில் உங்களுக்கு வந்திருக்கும் மெசேஜை ஹோல்டு (Hold) செய்யுங்கள். இப்போது, டிரான்ஸ்லேஷன் டேப் தோன்றும். அதை கிளிக் செய்தால் போதும் மொழி பெயர்த்து கொடுக்கப்படும்.
இன்ஸ்டாகிராம் ஷேர் மியூசிக் (Instagram Share Music): இந்த பீச்சர் மூலம் மேசேஜ் பக்கத்தைவிட்டு வெளியில் செல்லமால், நேரடியாக சாட் பக்கத்தில் இருந்தே மியூசிக் டிராக்குகளை (Music Track) அனுப்பி கொள்ளலாம். அதாவது, சாட்டில் ஸ்டிக்கர் டிரேய் (Sticker Tray) ஆப்ஷனை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். அதில் மியூசிக் டேப் தோன்றும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்,
இப்போது, உங்களது லைப்ரரியில் இருக்கும் மியூசிக் டிராக்குகள் காண்பிக்கப்படும். இதில் நீங்கள் அனுப்ப வேண்டிய டிராக்கை தேர்ந்தெடுத்து அனுப்பலாம். அனுப்புவதற்கு முன்பு 30 செகண்ட்களுக்கு ப்ரிவியூ தோன்றும் அதை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ப்ரிவியூவின் போது, பிளே செய்தல், பாஸ் செய்தல், பார்வேர்டு செய்தல் போன்றவற்றை யூசர்கள் செய்து கொள்ளலாம்.
இன்ஸ்டாகிராம் ஸ்கெடுள் மெசேஜ் (Instagram Scheduled Message): இந்த பீச்சர் மூலம் எந்த நேரத்தில் மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்த நேரத்தை குறிப்பிட்டு முன்கூட்டியே ஸ்கெடுள் செய்து கொள்ளலாம். இதில் தேதியும் அடங்கும். ஆகவே, அந்த நேரத்தில் உங்களிடம் மொபைல் இல்லையென்றாலும், நீங்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தவில்லை என்றாலும் மெசேஜ் அனுப்பப்பட்டுவிடும்.
பிறந்த நாள் வாழ்த்து அல்லது மீட்டிங் நினைவு கூறல் போன்றவற்றை இந்த பீச்சர் மூலம் செய்து கொள்ளலாம். இந்த பீச்சரை பயன்படுத்த வழக்கம்போல அனுப்ப வேண்டிய மெசேஜை டைப் செய்துவிட்டு, செண்ட் (Send) பட்டனை ஹோல்டு செய்யுங்கள். இப்போது உங்களுக்கு ஸ்கெடுள் ஆப்ஷன் தோன்றும். அதில் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு அனுப்பி கொள்ளலாம்.
இன்ஸ்டாகிராம் பின் மெசேஜ் (Instagram Pin Message): இந்த பீச்சர் மூலம் உங்களுக்கு அனுப்பப்பட்ட அல்லது நீங்கள் அனுப்பிய மேசேஜ்களை பின் செய்து வைத்து கொள்ளலாம். இது மெசேஜ், இமேஜ், மீம் அல்லது ரீல் போன்று எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். இப்படி பின் செய்த மெசேஜ்கள் நீங்கள் சாட்டை ஓப்பன் செய்த உடனேயே உங்களுக்கு தோன்றும். ஆகவே, எப்போதும் இருக்கும்.
இன்ஸ்டாகிராம் குரூப் சாட் கியூஆர் கோட் (Instagram Group Chat QR Code): குரூப் சாட் செய்யும்போது, புதிய இன்ஸ்டாகிராம் யூசரை அதில் சேர்க்க வேண்டுமானால், கியூஆர் கோடை அவர்களுக்கு அனுப்பி சாட்டில் சேர்ந்து கொள்ள முடியும். இதை இந்த பீச்சர் செய்கிறது. இந்த அனைத்து பீச்சர்களும் அப்டேட்டில் கொடுக்கப்பட இருக்கின்றன. விரைவில் அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








