Home
News

இன்று அறிமுகமான புதிய வருமான வரி இணையதளம்.! முழு விவரம்.!

தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் மக்களுக்கு பயன்படும் வகையில் சில சேவைகளை மிகவும் எளிமையாக கொணடுவருகிறது மத்தியஅரசு. இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு புதிய www.incometax.gov.in இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 வரி செலுத்தும் மக்களுக்கு

வருமான வரி செலுத்தும் மக்களுக்கு எளிமையாகவும், உடனடியாக ரீபண்டு வழங்குவதற்கு ஏதுவாகவும், ஆன்லைன் வாயிலாக கணக்கு தாக்கல் செய்ய ஏதுவாகவும் www.incometax.gov.in என்ற புதிய இணையதளம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பல்வேறு மக்கள்

இந்த புதிய இணையதளத்தில் பல்வேறு மக்கள் எளிதாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவும், பல முக்கியமான பணிகள் அனைத்தையும் எளிதாக கண்காணிப்பு செய்யவும் முடியும் என்று கூறப்படுகிறது.

பக்கத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் புதிய இணை

அதேபோல் பழைய இணைய பக்கத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் புதிய இணைய பக்கத்திற்கு மாற்றும் பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக தான் பழைய வருமானவரி இணையதள பக்கம், www.incometaxindiaefiling.gov.in ஜூன் 1 முதல், 6ம் தேதிவரை செயல்படாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இணையதளம் அறிமுகம்

தற்போது புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், கணக்கு தாக்கல் செய்ய விரும்பும் மக்கள் புதிய இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என்று வருமான வரி அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், வருமான வரி அறிக்கை அப்லோடு செய்ய வேண்டிய பணிகள், வருமான வரி அறிக்கை ஸ்டேட்டஸ் உள்ளிட்ட அனைத்தும் ஒரே டேஷ்போர்ட்-ல் மக்களுக்கு காண்பிக்கப்படும். பின்பு இதன் மூலம் எளிதாக வருமான வரி சார்ந்த அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.

இணையதளத்தில்

குறிப்பாக வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் புதிய சில அம்சங்களும் இந்த இணையதளத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுறது. கண்டிப்பாக அனைத்து மக்களும் இந்த தளத்தை எளிமையாகபயன்படுத்த முடியும்.

 வசதியும் அறிமுகம் செ

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், அனைத்து கலந்துரையாடல்கள், பதிவேற்றம், நிலுவையில் இருக்கும் செயல்கள் அனைத்தும் ஒரே பக்கத்தில் தெரியும்படி இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் வருமான வரித்தளத்தில் புதிய மொபைல் ஆப் வசதியும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
New Income Tax Website Launched Today.! Full details.!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X