Home
News

புது ரூல்ஸ்.. இனி ஆதார் OTP கட்டாயம்.. வருமான வரித்துறை இ-ஃபைலிங் போர்ட்டலில் முக்கிய மாற்றம் அமல்!

வருமான வரித்துறை (Income Tax Department) ஆனது அதன் இ-ஃபைலிங் போர்ட்டல் (e-Filing Portal) தொடர்பான சேவைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்து உள்ளது. என்னென்ன சேவைகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

வருமான வரித்துறை ஆனது தங்கள் மின்னஞ்சல் முகவரி (Email Address) அல்லது மொபைல் எண்ணை (Mobile Number) இ-போர்ட்டல் வழியாக புதுப்பிக்க விரும்பும் வரி செலுத்துவோருக்கு ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பை (Aadhaar-based OTP verification) கட்டாயமாக்கி உள்ளது.

வருமான வரித்துறை இ-ஃபைலிங் போர்ட்டலில் முக்கிய மாற்றம் அமல்!

இந்த புதிய விதி, வரி செலுத்துவோர்களின் ப்ரொபைல்களில் (Taxpayer profiles) அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைத் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ஆக இனிமேல் சரியான அக்கவுண்ட் ஹோல்டர்கள் மட்டுமே தங்களுடைய காண்டாக்ட் விவரங்களை மாற்ற முடியும். இந்த நடவடிக்கை அக்கவுண்ட் ஹைஜாக்கிங் செய்யப்படுவது அல்லது அக்கவுண்ட் தவறாக பயன்படுத்தப்படுவது போன்ற சிக்கல்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு புதிய பான் விண்ணப்பங்களுக்கு (New PAN Application) ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் மற்றும் ஆன்லைன் ஓடிபி சரிபார்ப்பை முடிக்க வேண்டும். இது இல்லாமல், புதிய பான் கார்டு வழங்கப்படாது. முன்னதாக, வரி செலுத்துவோர்கள் பிறப்பு சான்றிதழ் போன்ற பிற அடையாள சான்றுகளைப் பயன்படுத்தி பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் விருப்பம் இருந்தது. அந்த விருப்பம் இப்போது நீக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே பான் கார்டு வைத்திருக்கும் வரி செலுத்துவோர்கள் டிசம்பர் 31, 2025 க்குள் அதை ஆதார் உடன் இணைக்க வேண்டும். இதை செய்ய தவறினால் இணைக்கப்படாதவர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும் என்றும், தாமதமாக இணைப்பதற்கு ரூ 1,000 அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes - CBDT) கூற்றுப்படி, வரி ஏய்ப்பு மற்றும் நகல் பான் கார்டுகளை தடுப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் கேஒய்சி விதிமுறைகளை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் இலக்கையும் இது ஆதரிக்கிறது.

வருமான துறை கொண்டுவந்துள்ள இந்த புதிய மாற்றங்கள் மற்றும் விதிகள் ஆனது அரசாங்கத்தின் "டிஜிட்டல் இந்தியா" உந்துதலின் கீழ், வரி தாக்கல் மற்றும் பணத்தை திரும்பப்பெறும் செயல்முறையை மிகவும் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த மாற்றம் - வரி செலுத்துவோர் இப்போது எந்தவொரு பான் கார்டு விண்ணப்பம் அல்லது ப்ரொபைல் அப்டேட் செயல்முறைக்கும் ஆதார் விவரங்களை தயாராக வைத்திருக்க என்பதை அப்பட்டமாக அறிவுறுத்துகின்றன. ஆக ஆதார் ஒடிபி இல்லாமல், வருமான வரித்துறைக்கு நீங்கள் வைக்கும் எந்த கோரிக்கைகளுமே செயல்படுத்தப்படாது.

இதேபோல சமீபத்தில் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்களை பொறுத்தவரை.. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில், இனிமேல் வாடிக்கையாளர்கள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் இ-கேஒய்சி செயல்முறையை பயன்படுத்தி ஆர்டி எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் மற்றும் பிபிஎப் என்கிற பப்ளிக் ப்ரொவிடென்ட் ஃபண்ட அக்கவுண்ட்களை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு முக்கிய மாற்றமாக - பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் ஆனது தங்கள் வங்கிகளில் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கான கட்டாய நடைமுறை (Compulsory Practice) ஒன்றை நீக்கி உள்ளன.

அதாவது மேற்கண்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளில் சராசரி மாதாந்திர இருப்பை (Average Monthly Balance - AMB) வைத்திருக்கும் கட்டாயம் இனி இருக்காது. சராசரி மாதாந்திர இருப்பு என்றால் ஒரு காலண்டர் மாதம் முழுவதும் தனிநபர்கள் தங்கள் சேவிங்ஸ் அல்லது கரண்ட் அக்கவுண்டில் பராமரிக்க வேண்டிய சராசரி பேலன்ஸ் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Income Tax Rules Now Aadhaar OTP Mandatory To Update Email ID Mobile Number in E Filing Portal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X