ஏப்ரல் 1 முதல்.. இந்த இடங்களில் பான் கார்டு அவசியம்.. ரெடியா வச்சுக்கோங்க.. வெளியானது புதிய விதிகள்..
இந்தியாவில் புதிய வருமான வரி சட்ட வரைவு 2025-படி பான் கார்டு (PAN card) விதிகளில் சில மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி பண வைப்பு, சொத்து மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான பான் கட்டாய வரம்புகள் மாற்றப்பட உள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
2025-2026 நிதியாண்டு வருகின்ற மார்ச் 31-ம் தேதி முடிவடையும் நிலையில் 2026-2027 நிதியாண்டுக்கான வருமான வரி வரைவு விதிகளை தற்போது வெளியிட்டுள்ளது வருமான வரித்துறை. மேலும் 2026 ஏப்ரல் 1 (April 1) முதல் இவை அமலுக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது.

1.முன்பு ஒரே நாளில் ரூ.50,000-க்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுத்தால் பான் கார்டு தேவை. ஆனால் புதிய வருமான வரி விதியின் படி, ஒரு நபர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது ரூ.10 லட்சத்திற்கும் மேல் பணத்தை எடுத்தாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டும்.
அதேசமயம் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான பரிவர்த்தனைகள் மேற்கொண்டால், பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இனிமேல் இருக்காது.
2. குறிப்பாக ரூ.5 லட்சத்திற்கும் மேலான இருசக்கர வாகனங்களை வாங்கினால் பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். அதேபோல் கார் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம் ஆகும். இதற்கு டிராக்டர்கள் மட்டும் விதிவிலக்கு.
3. புது வருமான வரிச் சட்டத்தின் படி, ஹோட்டல், உணவகங்கள், அரங்குகள் அல்லது ஈவென்ட் மேனேஜர்களுக்குக் கொடுக்கும் பேமென்ட் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நடைமுறையில் பேமென்டில் ரூ.50,000 தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது.
4. புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ரியல் எஸ்டேட்டில் ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீட்டை வாங்கினாலோ, பரிசாகப் பெற்றாலோ பான் கார்டு தேவைப்படும். முன்பு இந்த லிமிட் ரூ.10 லட்சமாக இருந்தது.
5.இனிமேல் அனைத்து காப்பீட்டுத் திட்டங்களுக்கும் பான் கார்டு கட்டாயம் தேவைப்படும்.

அதுவும் இப்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எனவே தான் தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் வருமான வரிச் சட்டங்களைப் புதுப்பிக்கக் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக மக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்பதற்காக, புதிய வருமான வரி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இப்போது வரைவு விதிகள் வெளியாகி உள்ள நிலையில் வரும் 2026 ஏப்ரல் 1 முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வருமான வரிச் சட்டத்தில் உள்ள 511 விதிகள் 333 ஆக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர 399 படிவங்கள் 190 படிவங்களாகக் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பான் கார்டு புதிய விதிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








