Home
News

ஏப்ரல் 1 முதல் புதிய Income Tax விதிகள்.. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு குட் நியூஸ்!

சிபிடிடி (CBDT) என்கிற மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) ஆனது 2026 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விதிகளை (New Income Tax Rules) அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டமைப்பு ஆனது 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் கீழ் - வீட்டு வாடகை தொடர்ட்பான விதிமுறைகள் உட்பட 3 முக்கியமான விஷயங்கள் கவனிக்கதவைகளாக உள்ளன.

நினைவூட்டும் வண்ணம் 60 ஆண்டுகள் பழமையான 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய வருமான வரி மசோதாவிற்கு, நாடாளுமன்றம் ஆனது கடந்த ஆகஸ்ட் 12, 2025 அன்று ஒப்புதல் அளித்திருந்தது. குறிப்பிடத்தக்க வண்ணம் இந்த சட்டம் எந்தவொரு புதிய வரி விகிதத்தையும் அறிமுகப்படுத்தவில்லை; மாறாக, சிக்கலான விதிகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

புதிய Income Tax விதிகள்.. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு குட் நியூஸ்

1. ஹவுஸ் ரென்ட் அலவன்ஸ் கட்டமைப்பு மற்றும் தகுதி விதிமுறைகள்: அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி விதிகள் ஆனது, சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு பொருந்தக்கூடிய ஹவுஸ் ரென்ட் அலவன்ஸ் (House rent allowance - HRA) விலக்குகளுக்கான முன்மொழியப்பட்ட கட்டமைப்பை தக்கவைத்து கொள்கின்றன.

புதிய கட்டமைப்பின் கீழ், மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை, ஹைதராபாத், புனே, அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய 8 நகரங்கள், சம்பளத்தில் 50 சதவீதம் என்ற உயர் விலக்கு வரம்பிற்கு தகுதி பெறும், அதே நேரத்தில் மற்ற அனைத்து இடங்களிலும் 40 சதவீத விலக்கு உச்சவரம்பு தொடரும்.

தற்போது, ​​மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னையில் வசிக்கும் சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 50 சதவீதம் வரை எச்ஆர்ஏ விலக்கு (HRA exemption) கோர அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற இடங்களில் வசிப்பவர்கள் 40 சதவீதம் என்ற குறைந்த வரம்பிற்கு தகுதி பெறுகிறார்கள் என்று பிடிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த புதிய விதிகள், ஹவுஸ் ரென்ட் அலவன்ஸ் உடன் தொடர்புடைய வருமான வரி விலக்குகளை (Income tax deduction) கோருவதற்கு, நில உரிமையாளர்-குத்தகைதாரர் உறவை (landlord tenant relationship) டிஸ்க்ளோஸ் செய்வதை கட்டாயம் ஆக்குகின்றன, இதன் மூலம் வரி செலுத்துவோருக்கான இணக்க தேவைகளை வலுப்படுத்துகின்றன.

2. 5.12 லட்சத்தில் இருந்து 2.6 லட்சமாக குறைப்பு: புதிய வருமான வரி சட்டம் ஆனது, தேவையற்ற விதிகளையும் காலாவதியான மொழிநடையையும் நீக்குகிறது. மேலும், 1961 ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்தின் கீழ் 819 ஆக இருந்த பிரிவுகளின் எண்ணிக்கையை 536 ஆக குறைக்கிறது. அதே நேரத்தில், அத்தியாயங்களின் எண்ணிக்கை 47 இல் இருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள மொத்த வார்த்தைகளின் எண்ணிக்கை 5.12 லட்சத்திலிருந்து 2.6 லட்சமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக, இந்த புதிய கட்டமைப்பு, வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு தெளிவை மேம்படுத்தவும், எளிதாக புரிந்துகொள்ளவும், அடர்த்தியான உரை விதிகளை மாற்றி 39 அட்டவணைகளையும் 40 சூத்திரங்களையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த அறிவிப்பு, பரந்த அளவிலான வரி தொடர்பான செயல்பாடுகள் மற்றும் நடைமுறை தேவைகளை உள்ளடக்கிய, படிவம் 33 முதல் எண்ணிடப்பட்ட 150 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ படிவங்களையும் அறிமுகப்படுத்துகிறது.

3. முக்கிய பகுதிகளில் இணக்கத்தை இறுக்குதல்: மேலும் இந்த புதிய விதிகள், மூலதன ஆதாய வரிவிதிப்பு (capital gains taxation), பங்கு சந்தை பரிவர்த்தனைகள் (stock exchange dealings) மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான வரிவிதிப்பு (non-resident taxation) ஆகியவற்றில் கடுமையான விதிமுறைகளை உருவாக்குகின்றன.

அதே நேரத்தில் நேரடி வரி அமைப்பில் (Direct Tax System) உள்ள மற்ற வெளிப்படுத்தல் வழிமுறைகளையும் (Disclosure mechanisms) எளிதாக்குகின்றன. இந்த கட்டமைப்பு, வெளிநாட்டு வருமானம் தொடர்பான வரி சலுகை கோரிக்கைகளுக்கான தணிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பை அதிகரிக்கிறது. இதன்கீழ் பான் (PAN) நகல் நிகழ்வுகளை சரிபார்க்கவும், பாதகமான தணிக்கை கண்டுபிடிப்புகளால் எழும் வரி பொறுப்புகளை மதிப்பிடவும் தணிக்கையாளர்களுக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, ஆதாயங்கள் குறுகிய காலமா அல்லது நீண்ட காலமா என வகைப்படுத்தப்படுவதை தீர்மானிக்க, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சொத்துக்களை வைத்திருக்கும் காலம் எவ்வாறு கணக்கிடப்படும் என்பதையும் இந்த விதிகள் தெளிவுபடுத்துகின்றன. பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் போன்ற மாற்றப்பட்ட பத்திரங்களை பொறுத்தவரை, அசல் பத்திரம் - பத்திரங்கள், கடன் பத்திரங்கள் அல்லது வைப்பு சான்றிதழ்கள் உட்பட - மாற்றத்திற்கு முன்பு எவ்வளவு காலம் வைத்திருக்கப்பட்டது என்பதும் வைத்திருக்கும் காலத்தில் அடங்கும். இது மூலதன ஆதாயங்களை கையாள்வது குறித்த தெளிவை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Income Tax Rules From April 1 HRA house rent allowance exemptions Retained But What are Changing
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X