Home
News

புது Income Tax ரூல்ஸ்.. ரூ.50,000-க்கு மேல்.. TDS விலக்கு.. ரூ.10 லட்சம் டெபாசிட்.. ஒரே நேரத்தில் மாற்றங்கள்!

மத்திய அரசின் புதிய வருமான வரி விதிகள் 2026 (New Income Tax Rules 2026) அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய விதிகளின்படி, அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு (PAN Card) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான் கார்டு இல்லாதவர்களுக்கான மாற்று வழிமுறைகள் மற்றும் டிடிஎஸ் (TDS) வரி பிடித்தம் இல்லாததற்கான புதிய ஒற்றைப் படிவம் வந்துள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்கள் இதோ:

எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு (PAN) கட்டாயம்: இனிவரும் காலங்களில் அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களின் பெரும்பாலான முக்கிய நிதிப் பரிவர்த்தனைகளுக்கு பான் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாகும். குறிப்பாக, புதிய கணக்குகளைத் தொடங்குதல் மற்றும் கணக்குகளை இயக்குதல், பல்வேறு அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தல் ஆகிவற்றுக்கு கட்டாயமாகும்.

புது Income Tax ரூல்ஸ்.. ரூ.50,000-க்கு மேல்.. TDS விலக்கு.!

மேலும், ஒரு நிதியாண்டில், ஒரு நபரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் மொத்தமாக ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் (Cash Deposit) செய்தால், ஒரு நிதியாண்டில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் இருந்து மொத்தமாக ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாகப் பணம் எடுத்தால் (Cash Withdrawal) இது பொருந்தும். இதுபோக ஒரு நிதியாண்டில், ரூ. 50,000-க்கு மேல் அல்லது மொத்தமாக ரூ. 5 லட்சத்திற்கு மேல் கால வைப்புத்தொகை (Time Deposit / FD) முதலீடு செய்தால் பொருந்தும்.

பான் கார்டு இல்லையென்றால் 'படிவம் 97' கட்டாயம்: பான் கார்டு இல்லாத தனிநபர்கள், இந்து கூட்டுக்குடும்பங்கள் (HUF) மற்றும் சங்கங்கள் (Associations of Persons) மேலே குறிப்பிட்ட பரிவர்த்தனைகளைச் செய்ய வேண்டுமானால், இனி 'படிவம் 97' (Form 97) சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இது முன்பு புழக்கத்தில் இருந்த 'படிவம் 60'-க்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த படிவம் 97-ல் பின்வரும் பகுதிகள் கட்டாயமாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும்,
பகுதி ஏ: பரிவர்த்தனையின் தன்மை (Nature of transaction).
பகுதி பி: வாடிக்கையாளரின் சுயபிரகடனம் (Declaration).
பகுதி சி: அடையாளம் மற்றும் முகவரி விவரங்கள் (பெயர், பிறந்த தேதி, பான் கார்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்ற விவரம், ஆதார் எண், வீட்டு மற்றும் அலுவலக முகவரி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி).
பகுதி டி: பரிவர்த்தனை குறித்த முழு விவரங்கள்.
பகுதி இ: அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்றுகளாக இணைக்கப்படும் துணை ஆவணங்களின் விவரங்கள்.
பகுதி எப்: வாடிக்கையாளரின் கையொப்பத்துடன் கூடிய சரிபார்ப்பு (Verification).

படிவம் 15ஜி மற்றும் 15ஹெச் கிடையாது, டிடிஎஸ் விலக்கு பெற இனி ஒரே படிவம் 121: அஞ்சலகத்தில் இருந்து பெறப்படும் வருமானங்களான பிராவிடண்ட் ஃபண்ட் (PF) எடுத்தல், பென்ஷன், இன்சூரன்ஸ் கமிஷன், வாடகை மற்றும் வைப்புத்தொகை மீதான வட்டி வருவாய் போன்றவற்றிற்கு டிடிஎஸ் (TDS) வரி பிடித்தம் செய்யப்படுவதை தவிர்க்க புதிய வழிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட படிவம் 121: இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த படிவம் 15ஜி (60 வயதுக்குட்பட்டவர்கள்) மற்றும் படிவம் 15எச் (மூத்த குடிமக்கள்) ஆகிய இரு படிவங்களும் நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக 'படிவம் 121' (Form 121) என்ற ஒரே பொதுவான படிவம் அறிமுகமாகியுள்ளது. ஒரு நிதியாண்டில் தங்களின் மொத்த மதிப்பிடப்பட்ட வருமானம் 'பூஜ்யம்' (Nil) ஆக இருக்கும் மற்றும் வரி பிடித்தத்தை விரும்பாத தகுதியுள்ள அனைத்துப் பிரிவினரும் (60 வயதுக்கு கீழ் மற்றும் மேல் உள்ளவர்கள்) இந்த ஒரே படிவத்தைப் பயன்படுத்தலாம்.

எப்போது சமர்ப்பிக்க வேண்டும்: ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலோ அல்லது முதல் வருமானம் (வட்டி) வழங்கப்படுவதற்கு முன்போ இந்த படிவத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள்/நபர்களிடம் இருந்து வருமானம் பெற்றால், தனித்தனியாக படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அஞ்சலகங்கள் இதற்கு ஏற்ப ஆவண பராமரிப்பு செய்து கொள்ளும்.

Best Mobiles in India

English summary
New Income Tax Rules 2026 including PAN Submission TDS Deduction Post Office Customers Should Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X