Home
News

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. இனி ரூ.25,000 மேல கட்டணம்.. முக்கிய மாற்றங்கள் அமல்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) ஆனது பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணங்களை விதித்துள்ளது. ரூ.25,000 மேல் பணத்தை அனுப்பும்போது கூடுதலாக கட்டணத்தை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட அக்கவுண்ட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

எஸ்பிஐ அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டும் இந்த கட்டணம் பொருந்தும். ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை (IMPS Transactions) செய்யும்போது மட்டுமே புதிய கட்டணம் இருக்கும். இதிலும் மத்திய அரசு ஊழியர்கள், குடும்ப அக்கவுண்ட்கள் போன்றவற்றுக்கு விலக்கு இருக்கிறது. பொதுத்துறை பேங்கில் கட்டணம் வந்ததால், தனியார் பேங்குகளுக்கும் வரலாம்.

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. ரூ.25,000 மேல?

1. புதிய ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை கட்டணங்கள் (New IMPS Transactions Charges)

* ஆன்லைன் அல்லது கிளை சேனல் வழியாக ரூ.1,000 வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் ஆன்லைன் வழியான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. ஆனால், கிளை சேனல் வழியாக செய்தால் ரூ.2 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

* ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையில் ஆன்லைன் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்தால் கட்டணம் கிடையாது. ஆனால், கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.4 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

* ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளில் ஆன்லைன் வழியாக பணத்தை அனுப்பினால் ரூ.2 கட்டணம் மற்றும் ஜிஎஸ்எடி செலுத்த வேண்டும். மேலும், கிளை சேனல் வழியாக பணத்தை அனுப்பினால் ரூ.4 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. ரூ.25,000 மேல?

* ரூ.1,00,000 முதல் ரூ.2,00,000 வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்தால் ரூ.6 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.12 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.

* ரூ.2,00,000 முதல் ரூ.5,00,000 லட்சம் வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்தால் ரூ.10 கட்டணம் மற்றும் ஜிஎஸ்எடி செலுத்த வேண்டும். கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.20 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

2. புதிய ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை கட்டணங்களில் விலக்கு

* பாதுகாப்பு சம்பள தொகுப்பு (Defence Salary Package), மத்திய ஆயுத காவல் சம்பள தொகுப்பு (Central Armed Police Salary Package), மத்திய அரசு சம்பள தொகுப்பு (Central Government Salary Package), காவல்துறை சம்பள தொகுப்பு (Police Salary Package), ரயில்வே சம்பள தொகுப்பு (Railway Salary Package) ஆகிய அக்கவுண்ட்களுக்கு புதிய ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் கிடையாது.

* சௌர்யா குடும்ப பென்சன் அக்கவுண்ட்களுக்கு (Shaurya Family Pension Accounts) புதிய ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் கிடையாது. மேலும், கார்ப்பரேட் சம்பள தொகுப்பு (Corporate Salary Package), மாநில அரசு சம்பள தொகுப்பு (State Government Salary Package), ஸ்டார்ட் அப் சம்பள தொகுப்பு (Start Up Salary Package) ஆகிய அக்கவுண்ட்களுக்கும் புதிய ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் கிடையாது.

* மேலும், எஸ்பிஐ ரிஷ்தே (SBI RISHTEY) என்கிற பேமிலி சேவிங் அக்கவுண்ட்களுக்கும் (Family Savings Account) இந்த புதிய ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் பொருந்தாது. ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் வழியாக ரூ.5,00,000 வரையில் பணத்தை அனுப்பி கொள்ளலாம். இது நெப்ட் (NEFT) பரிவர்த்தனையை போல்லல்லாமல் உடனடியாக பணத்தை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும். தனியார் பேங்குகளுக்கு கட்டணம் இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New IMPS Transactions Rules For SBI Account Holders Above Rs 25000 Need To Pay New Charges
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X