பிப்.15 முதல் புது ரூல்ஸ்.. இனி ரூ.25,000 லிமிட்.. பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு வருது மாற்றங்கள்!
பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வருகிற பிப்ரவர் 1ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 15ஆம் தேதியில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி (HDFC) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) பேங்க் கஸ்டமர்களுக்கு நேரடி மாற்றங்கள் அமல் செய்யப்பட உள்ளன. மேலும், ஃபாஸ்டேக் உள்ளிட்ட இந்திய அரசின் விதிகளும் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகளால் என்னென்ன மாற்றப்பட உள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக்களுக்கு (FASTag) விதிக்கப்படும் கேஒய்வி (KYV) என்கிற உங்கள் வாகனத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் (Know Your Vehicle) செயல்முறை நிறுத்தப்பட இருக்கிறது. கார், ஜீப் மற்றும் வேன் ஆகிய வாகனங்களின் உரிமையாளர்களுக்கு இந்த விதிகள் அமலுக்கு வர இருக்கிறது. இந்த விதிகளை என்எச்ஏஐ (NHAI) அமலுக்கு கொண்டுவருகிறது.

ஆனால், இது கார், ஜீப் மற்றும் வேன் உரிமையாளர்களுக்கு மட்டும் அமலுக்கு வருகிறது. ஆனால், பேங்க் அக்கவுண்ட்களுக்கு அமலுக்கு வரும் விதிகள் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது. பிப்ரவரி 1ஆம் தேதியில் ஐசிஐசிஐ, எச்டிஎப்சி பேங்க் கஸ்டமர்களுக்கு புதிய விதிகள் வருகின்றன. பிப்ரவரி 15ஆம் தேதி எஸ்பிஐ கஸ்டமர்களுக்கு புதிய விதிகள் வருகின்றன.
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ பேங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு (Credit Cards) புக்மைஷோ (BookMyShow) வழியாக வழங்கப்படும் இலவச டிக்கெட் சலுகை (Complimentary Tickets Offer) நிறுத்தப்பட உள்ளது. ஆகவே, இலவச டிக்கெட்களை இனிமேல் ரிடீம் செய்ய முடியாது. இருப்பினும், டிரான்ஸ்போர்ட் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் கிடைக்கும் ரிவார்ட் பாய்ன்ட்கள் தொடர்ந்து கிடைக்கும்.
எச்டிஎப்சி பேங்கிலும் பிப்ரவரி 1 ஆம் முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இன்ஃபினியா மெட்டல் கிரெடிட் கார்டுக்கு (Infinia Metal Credit Card) கிடைக்கும் ரிவார்டு பாய்ன்ட்களில் விதிகள் வருகின்றன. இனிமேல் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 5 முறை மட்டுமே ரிவார்டு பாய்ன்ட்களை பயன்படுத்திக்கொள்ள லிமிட் விதிக்கப்படுகிறது. ஆகவே, 5 முறைக்கு மேல் ரிவார்டு பாய்ன்ட்களை பயன்படுத்த முடியாது.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் எஸ்பிஐ கஸ்டமர்களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இதில் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை கட்டணங்கள் (IMPS Transactions Charges) மாற்றப்பட உள்ளன. அதாவது, ஆன்லைன் அல்லது கிளை சேனல் வழியாக ரூ.1,000 வரையில் செய்யப்படும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு வழக்கம் போல கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது.
அதேபோல ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையிலான ஆன்லைன் வழியான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது. ஆனால், கிளை சேனல் வழியாக செய்யப்படும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கப்படும். இதில் ஜிஎஸ்டி கட்டணமும் செலுத்த வேண்டும். மேலும், ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது.
ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 கட்டணம் இருக்கும். அதேபோல கிளை சேனல் வழியான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கும் ரூ.4 கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும். ரூ.1,00,000 முதல் ரூ.2,00,000 வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.6 கட்டணம் இருக்கும்.
அதுவே, கிளை சேனல் வழியாக செய்யப்படும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.12 கட்டணம் இருக்கும். அதோடு ஜிஎஸ்எடி கட்டணமும் இருக்கும். மேலும், ரூ.2,00,000 முதல் ரூ.5,00,000 லட்சம் வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.10 கட்டணம் மற்றும் கிளை சேனல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 கட்டணம் இருக்கும். கூடுதலாக ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








