ICICI வங்கியின் IMPS சேவையில் திடீர் மாற்றம்.. மே 1 முதல் அமல்!
2024 மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்படி.. இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) ஆனது தனது ஐஎம்பிஎஸ் (IMPS - Immediate Payment Service) சேவையில் முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டு வருகிறது.
அதென்ன மாற்றம்? ஐசிஐசிஐ வங்கியானது ஐஎம்பிஎஸ் சேவைக்கான சேவை கட்டணத்தில் (IMPS Service Charge) திருத்தும் செய்துள்ளது. இதன்கீழ் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஐஎம்பிஎஸ் சேவையை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ரூ.15 வரை கட்டணம் செலுத்த வேண்டும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த மாற்றம் மே 1, 2024 முதல் அமலுக்கு வரும்.

யாரெல்லாம் சிக்குவார்கள்? ஐஎம்பிஎஸ் சேவைக்கான ரூ.15 கட்டணம் என்பது.. ஐசிஐசிஐ வங்கி வழியாக நடக்கும் அனைத்து வகையான பணப்பரிமாற்றத்திற்கும் பொருந்தாது. மாறாக ரூ.25,000 - ரூ.5 லட்சம் வரையிலான தொகையை.. ஐஎம்பிஎஸ் சேவை வழியாக பரிமாற்றம் செய்யும் போது மட்டுமே வசூலிக்கப்படும். இந்த கட்டணம் ஒவ்வொரு முறையும் ரூ.25,000 - ரூ.5 லட்சம் வரையிலான தொகை அனுப்பும் போதும் வசூலிக்கப்படும்.
ரூ.1000 - ரூ.25,000 க்குள் அனுப்பினால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்? ஒருவேளை நீங்கள் ரூ.1,000 - ரூ.25,000 க்குள் என்கிற வரம்பிற்குள் ஐசிஐசிஐ ஐஎம்பிஎஸ் சேவை வழியாக பணப்பரிமாற்றம் செய்தால் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். இதுவும் ஒவ்வொரு முறையும் பணப்பரிமாற்றம் செய்யும் போதும் வசூலிக்கப்படும்.
ரூ.1,000 வரையிலான தொகையை அனுப்பினால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்? கடைசியாக நீங்கள் ரூ.1,000 என்கிற வரம்பிற்குள் ஐசிஐசிஐ ஐஎம்பிஎஸ் சேவை வழியாக பணப்பரிமாற்றம் செய்தால் ரூ.2.50 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணமும் கூட, நீங்கள் ஒவ்வொரு முறையும் ரூ,.1000 வரை பணப்பரிமாற்றம் செய்யும் போதும் வசூலிக்கப்படும்.
வேறு என்னென்ன மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன? ஐஎம்பிஎஸ் சேவைக்கான சேவை கட்டணத்தில் மட்டுமின்றி ஐசிஐசிஐ வங்கியானது ஹோம் பிரான்ச் பணப்பரிமாற்றம், நான்-ஹோம் பிரான்ச் பணப்பரிமாற்றம், டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர கட்டணம் தொடங்கி லாக்கர் வாடகை வரையிலாக.. பல வகையான சேவை கட்டணங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இவைகள் எல்லாமே மே 1 முதல் அமலுக்கு வருகின்றன.
ஹோம் பிரான்ச் பணப் பரிமாற்றம் (Home Branch Cash Transaction): மாதத்திற்கு முதல் 3 இலவச பணப் பரிமாற்றங்கள் கிடைக்கும். அதன் பிறகு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் மாதத்திற்கு ரூ.1 லட்சம் என்கிற இலவச வரம்பைத் தாண்டி ரூ.1,000 வரையிலான பணப் பரிமாற்றங்களுக்கு ரூ.5, மற்றும் ரூ.1000 க்கு மேலான பணப் பரிமாற்றங்கள் ரூ.150 சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்.
நான் ஹோம் பிரான்ச் பணப் பரிமாற்றம் (Non Home Branch Cash Transaction): ஒரு நாளைக்கு ரூ.25,000 வரையிலான பணப் பரிமாற்றங்களுக்கு ரூ.5 மற்றும் ரூ.25,000 க்கு மேலான பணப் பரிமாற்றங்கள் ரூ.150 சேவை கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றாம் தரப்பு பணப் பரிவர்த்தனைகளை (Third Party Cash Transaction) பொறுத்தவரை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்; இதற்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.25,000 ஆகும்.
இது தவித்து டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர கட்டணமானது வழக்கமான இடங்களுக்கு ரூ.200, கிராமின் இருப்பிடங்களுக்கு ரூ.99 என்றும், டிடி (DD,) பிஓ கேன்சலேஷன் (PO Cancellation), டூப்ளிகேட் (Duplicate), ரீவேலிடேஷன் (Revalidation) போன்ற சேவைகளுக்கு ஒரு நிகழ்வுக்கு ரூ.100 என்றும். புகைப்படம் மற்றும் கையொப்பம் சான்றளிப்புக்கு ஒரு விண்ணப்பம் / கடிதத்திற்கு ரூ.100 என்றும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
லாக்கர் வாடகையை (Locke Rent) பொறுத்தவரை, லாக்கரின் அளவு (Locker Size) மற்றும் நீங்கள் எந்த வங்கியில் உள்ள லாக்கர் சேவையை பயன்படுத்த விரும்புகிறீர்களோ.. அந்த வங்கியின் இருப்பிடத்தின் (Bank Location) அடிப்படையில் வருடாந்திர லாக்கர் வாடகைகள் மாறுபடும்படிஐசிஐசிஐ வங்கி தனது லாக்கர் வாடகைக்கான சேவை கட்டணங்களையும் திருத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








