புதிய ஹூவாய் ஹானர் ஸ்மார்ட்போன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

புதிய ஹூவாய் ஹானர் ஸ்மார்ட்போன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

By Siva
|

ஹூவாய் ஹானர் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நிலையில் இந்த நிறுவனத்தின் இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் சீனாவின் டெல்காம் நிறுவனமான TENAA வின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. நோவா மற்றும் நோவா 2பிளஸ் என்னும் இந்த இரண்டு போன்கள் அடுத்த தலைமுறைக்கான போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது

புதிய ஹூவாய் ஹானர் ஸ்மார்ட்போன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

உலகம் முழுவதும் தற்போது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று வரும் ஹூவாய் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் புதிய ஹானர் மாடல் DLI-AL10 என்ற மாடல் எண்ணை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிசைனை வைத்து பார்க்கும்போது இதுவொரு பட்ஜெட் போன் போல் தெரிகிறது. மேலும் TENAA இந்த போனின் சிறப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது அவற்றை தற்போது பார்க்கலாம்

சைஸ் மற்றும் டிஸ்ப்ளே:

சைஸ் மற்றும் டிஸ்ப்ளே:

இந்த புதிய மாடல் ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் 5 இன்ச் TFT டிஸ்ப்ளேவுடன் 1080Px720 பிக்சல் தன்மை கொண்டது. மேலும் 143.7×70.95×8.2mm அளவில் 143 கிராம் எடையை கொண்டது இந்த போன் என்பதால் இது ஒரு ஸ்லிம் மாடல் போன் ஆகும்

ஹார்வேரில் என்னென்ன உள்ளது?

ஹார்வேரில் என்னென்ன உள்ளது?

இந்த ஸ்மார்போனின் பிராஸசர் என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் இல்லை எனினும், DLI-AL10 என்ற மாடல் கொண்ட இந்த போனில் ஆக்டோகோர் பிராஸசர் 1.4 GHz அம்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 32 GB இன்னர் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனில் 3GB ரேம் உள்ளது.

மேலும் ஸ்டோரேஜை நீட்டிக்க இந்த போனில் வழிவகை உள்ளதா? என்பது குறித்த தகவல்கள் இல்லை. ஆனால் அதே நேரத்தில் பேட்டரியின் தரம் 2920 mAH மட்டுமே உள்ளது என்பது ஒரு குறைபாடாக தெரிகிறது.

மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் ஹை-எண்ட் அனுபவம் வழங்கும் எப்3.!மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் ஹை-எண்ட் அனுபவம் வழங்கும் எப்3.!

சாப்ட்வேர் மற்றும் கேமிரா குறித்து பார்ப்போமா!

சாப்ட்வேர் மற்றும் கேமிரா குறித்து பார்ப்போமா!

இந்த ஹானர் போனின் சாப்ட்வேர் பக்கம் சென்று பார்த்தால், இந்த போன் ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் வகை ஓஎஸ் கொண்டது. மேலும் 13MP பின் கேமிரா, 5MP செல்பி கேமிராவும் இதில் உள்ளது.

மேலும் என்னென்ன வசதிகள்?

மேலும் என்னென்ன வசதிகள்?

TENAA வின் கூற்றுப்படி பார்க்கும்போது இந்த ஸ்மார்ட்போன் மூன்று வித வண்ணங்களில் அதாவது சில்வர், பிங்க் மற்றும் கோல்ட் ஆகிய வண்ணங்களில் வெளிவரவுள்ளது. இந்த போனின் பின்பக்க இமேஜை பார்க்கும்போது இந்த போனில் பிங்கர்பிரிண்ட் சென்சார் அமைந்திருப்பது தெரிகிறது.

Via

Best Mobiles in India

Read more about:
English summary
A new Huawei phone with the Honor branding has been spotted on TENAA.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X