சோனமுத்தா போச்சா! AI வச்சிக்கிட்டு ஆட்டம் போட்டீங்களே.. இப்போ ஆப்படிச்சு விட்டாங்களா.. வருகிறது புது கெடுபிடி!
உண்மையை விட பொய் தான் வேகமாக பரவும் என்கிற கருத்துக்கு "வயிறு நிறைய தீனி போடுவது" நம்ம வாட்ஸ்அப் (WhatsApp) தான். இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்மான வாட்ஸ்அப், தற்போது போலியான மற்றும் தவறான தகவல்கள், செய்திகள் மற்றும் வீடியோக்களை பரப்புவதற்கான முக்கிய தளமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பமானது, அனைவருக்கும் எளிமையாக கிடைக்கத் தொடங்கிய பின்னர் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படங்கள், டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் அதன் வழியாக பரவும் தவறான தகவல்கள் - நாளுக்கு நாள் - பெருகிக்கொண்டே போகின்றன.

அதற்கெல்லாம் வேட்டு வைக்க வேண்டும் என்று நோக்கத்தின் கீழ் எம்சிஏ (MCA) என்கிற மெட்டா அண்ட் மிஸ்இன்ஃபர்மேஷன் காம்பாட் கூட்டணி (Meta மற்றும் Misinformation Combat Alliance) உருவாக்கப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது தவறான மற்றும் போலியான தகவல்கள், செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எதிரான கூட்டணியாகும்.
இந்த கூட்டணி, வாட்ஸ்அப்பில் புதிய ஹெல்லைன் அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஹெல்ப்லைன் அம்சாமானது ஒரு சாட்போடாக இருக்கும். இதன்கீழ் எந்தவொரு பயனரும் தவறான தகவலை பரப்பும் அல்லது டீப்ஃபேக் மெசேஜை பற்றி புகாரளிக்க முடியும். அதாவது ஏஐ-ஜெனெரேட்டட் மிஸ்இன்ஃபர்மேஷன் மற்றும் டீப்ஃபேக் தொடர்பான எல்லா நிகழ்வுகளையும் புகாரளிக்க முடியும்.

இந்த சாட்போட் ஆங்கில மொழியில் மட்டுமின்றி தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மூன்று பிராந்திய மொழிகளிலும் அணுக கிடைக்கும். இது இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் தவறான தகவல்களை தவிர்க்க உதவும் ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக்குகளால் உருவாக்கப்பட்டவைகளை தவிர்க்க உதவும். மெட்டா, அமேசான், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 20 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தீங்கு விளைவிக்கும் ஏஐ கன்டென்ட்டை கண்டறிந்து எதிர்கொள்வதாக உறுதியளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் தொடர்பான மற்ற மாற்றங்களை பொறுத்தவரை, வாட்ஸ்அப் நிறுவனம் அதன் வாட்ஸ்அப சேனல்களுக்கான டிரான்ஸ்பர் ஓனர்ஷிப் (Transfer Ownership) என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது சேனலுக்கான உரிமையை வேறொருவருக்கு மாற்ற அனுமதிக்கும். இன்னும் எளிமையாக கூறவேண்டும் என்றால், ஒரு சேனலின் உரிமையாளர், தன் சேனலில் உள்ள தகுதியான பயனர் ஒருவரை புதிய உரிமையாளராக தேர்ந்தெடுத்து, சேனலுக்கான முழு உரிமையையும் ஒப்படைக்கலாம்.
ஒரிஜினல் உரிமையாளர் அனுப்பிய கோரிக்கையை புதிய உரிமையாளர் ஏற்றுக்கொண்டால், செட்டிங்ஸ் மற்றும் இன்ஃபர்மேஷனை நிர்வகித்தல் உட்பட சேனலின் முழு நிர்வாக உரிமைகளையும் அவர்கள் பெறுவார்கள். தற்போது வரையிலாக ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.4.22 வெர்ஷனில் அணுக கிடைக்கும் இந்த அம்சம் கூடிய விரைவில் அனைவருக்கும் வந்து சேரலாம்.
மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் அதன் ஸ்டேட்டஸ் அப்டேட் மெனுவிற்கான புதுப்பிக்கப்பட்ட யூஸர் இன்டர்பேஸையும் சோதித்து வருகிறது. இது தொடர்பாக பகிரப்பட்டுள்ள ஸ்க்ரீன்ஷாட்டில், ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் மெனுவை திறந்ததும், யாரெல்லாம் ஸ்டேட்டஸ் வைத்து உள்ளார்களா.. அது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போன்ற வடிவமைப்பில் காட்சியளிக்கும்.
தற்போது வரையிலாக அப்டேட்ஸ் மெனுவில் ஸ்டேட்டஸ் என்கிற டேப்பின் கீழே, புதிய ஸ்டேட்டஸ்-ஐ சேர்ப்பதற்கான பிளஸ் பட்டனும், அதனை தொடர்ந்து யாரெல்லாம் ஸ்டேட்டஸ் வைத்து உள்ளார்களா அவர்களுடைய ப்ரொபைல் பிக்சரும், அதற்கு பின்னால் அவ்ரகளுடைய ஸ்டேட்டஸும் காணப்படுகிறது. ஆனால் இந்த வடிவமைப்பு கூடிய விரைவில் மாற உள்ளது.
ஸ்டேட்டஸ் அப்டேட் மெனுவிற்கான புதுப்பிக்கப்பட்ட யூஸர் இன்டர்பேஸ் ஆனது விரைவில் ஆண்ட்ராய்டு-ன் ஸ்டேபிள் வெர்ஷனுக்கு வரக்கூடும் என்று டபள்யூஏபீட்டாஇன்ஃபோ தெரிவித்துள்ளது. தற்போது வரையிலாக இந்த மாற்றம் ஆண்ட்ராய்டு 2.24.4.2 வெர்ஷனில் மட்டுமே காணப்படுகிறது. இதற்கிடையில் தான் ஐ-ஜெனெரேட்டட் மிஸ்இன்ஃபர்மேஷன் மற்றும் டீப்ஃபேக்கிற்கு எதிரான ஹெல்ப்லைன் சாட்பாட்டும் வருகிறது.


Click it and Unblock the Notifications