Home
News

தூள் கிளப்பும் தமிழ்நாடு அரசு கேபிள் TV.. HD பாக்ஸ் வினியோகம் துவங்கியது.. உற்சாகத்தில் மக்கள்..

தமிழ்நாட்டில் 14 லட்சமாக உள்ள அரசு கேபிள் இணைப்புகளை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 25 லட்சம் இணைப்புகளாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் இணைப்புகளின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என அரசு கேபிள் டிவி (cable TV) ஆபரேட்டர் மற்றும் தொழிலாளர் வாரிய தலைவர் ஜீவா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தஞ்சாவூர் காவேரி சிறப்பு அங்காடியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலகத்தில், கேபிள் ஆபரேட்டர்களுக்கு, புதிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ் (TACTV HD Set Top Box) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அரசு கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் தொழிலாளர் நல வாரியத் தலைவர் ஜீவா, அரசு கேபிள் டிவி பொது மேலாளர் ம.துரை, துணை மேலாளர் கவுதம், கேபிள் டிவி தனி வட்டாச்சியர் ரத்தினவேல் ஆகியோர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ்களை வழங்கினர்.

தூள் கிளப்பும் தமிழ்நாடு அரசு கேபிள் TV.. உற்சாகத்தில் மக்கள்..

அதன்பின்னர் வாரியத் தலைவர் ஜீவா செய்தியாளர்களிடம் கூறியது என்வென்றால், தமிழ்நாட்டில் 50 லட்சம் செட்டாப் பாக்ஸ் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் தற்போது 14 லட்சம் அரசு கேபிள் டிவி இணைப்புகள் உள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 25 லட்சம் இணைப்புகளாக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

மேலும் ஓராண்டுக்குள் அரசு கேபிள் டிவி இணைப்புகளை 50 லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களாக இருந்த பலர், ஹெச்டி செட்டாப் பாக்ஸ் இல்லாத சூழலில், அரசு கேபிளில் இருந்து வெளியேறி தனியார் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது தொழில்நுட்ப மேம்பாடு செய்யப்பட்டு அரசு கேபிள் டிவி ஹெச்டி செட்டாப் பாக்ஸ்களை விநியோகம் செய்து வருகிறது. எனவே அரசு கேபிளில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அரசு கேபிள் டிவியை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர், திருப்பூர் போன்ற பகுதிகளிலும் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வினியோகம் துவங்கியுள்ளது. குறிப்பாக தனியார் நிறுவனங்களை விட மிகவும் குறைந்த கட்டணம், துல்லியமான படக்காட்சி மற்றும் எச்டிஎம்ஐ கேபிள் மூலம் அனைத்து புதிய மாடல் 'டிவி'க்களிலும் இணைக்கும் வசதி காரணமாக, பழைய எஸ்.டி. பாக்ஸிற்கு பதிலாக, ஹெச்டி செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்த மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூள் கிளப்பும் தமிழ்நாடு அரசு கேபிள் TV.. உற்சாகத்தில் மக்கள்..

மேலும் தற்போது அரசு கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்கள் கட்டணம் செலுத்தி ஹெச்டி செட்டாப் பாக்ஸ்களை பதிவு செய்ய துவங்கியுள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்த ஆப்ரேட்டர்களுக்கு ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வழங்கும் பணி துவங்கியுள்ளது. பின்பு ஹெச்டி பாக்ஸ் தேவைப்படும் ஆப்பரேட்டர்கள், https://www.tactv.in/ என்ற தளத்தில், கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது 200 க்கும் மேற்பட்ட சேனல்களுடன் சேவைக்கு ரூ.140 + GST வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த ஹெச்டி சேவையின் கட்டணங்கள் 20 முதல் 50 ரூபாய்க்குள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வதந்திகள் வெளியாகியுள்ளது. இருந்தபோதிலும் அரசு கேபிள் டிவி
ஹெச்டி செட்டாப் பாக்ஸ் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New HD Set Top Box Distribution Begins for Government Cable Operators: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X