ஒரு குழப்பமும் வேணாம்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம்- புதிய ஐடி விதிகள் இப்படிதான்!
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மே 26, 2021 முதல் நடைமுறைக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் இடைநிலை வழிகாட்டுதல்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் வெளியிடப்பட்டுள்ளது. பதிவு அகற்றம், எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் தகர்ப்பு மற்றும் பிற செயல்முறைகள் உட்பட பல கேள்விகளை தெளிவுப்படுத்தும் விளக்க பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து உள்ளடக்கத்தை அகற்றுவது உட்பட இடைத்தரகர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை ஆவணம் வெளியிட்டுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பிப்ரவரி 25, 2021-ல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது சமூக வலைதள நிறுவனங்கள், ஓடிடி தளங்கள் மற்றும் செய்தி இணையதளங்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த விதிகளை பின்பற்ற மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களை கொண்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு தலைமை இணைக்கம், குறை தீர்ப்பு அணுகல் மற்றும் நோடல் அதிகாரி நியமனம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அரசாங்க முறையாக புகார் செய்யும் பட்சத்தில் 36 மணி நேரத்துக்குள் அந்த உள்ளடக்கத்தை நிறுவனங்கள் அகற்ற வேண்டும் அல்லது முடக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஐடித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
விதிகளை அறிவித்த அப்போதைய ஐடித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், போலி செய்திகள் மற்றும் நிதி மோசடிகள் உள்ளிட்ட சவாலான விஷயங்கள் எதிர்கொள்ளும் வகையில் சாதாரண பயனர்களுக்கும் அதிகாரம் அளிக்க விதிகளில் கவனம் செலுத்தி அறிவித்தார்.36 மணி நேரத்துக்குள் சரியான விதிகள் அரசு அல்லது அதன் ஏஜென்சியிடம் இருந்து வரும் போது, இடைத்தரகர் உள்ளடக்கத்திற்கான அணுகலை அகற்ற வேண்டும் அல்லது முடக் வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தனி புகார் மையம் மற்றும் இணைக்க அதிகாரி
ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தனி புகார் மையம் மற்றும் இணைக்க அதிகாரி நியமிக்க வேண்டும். அதேபோல் அவர்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த விவரங்களையும் தளத்தில் தனித்தனியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் ஒரு தாய் நிறுவனத்துக்கு கீழ் பல தளங்கும் இருந்தால் ஒரே அதிகாரிகளை அந்த கிளை தளங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவர்களின் பெயர்கள் தனிப்பட்ட ஒவ்வொரு தளத்திலும் குறிப்பிட வேண்டும்.

15 நாட்களில் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்
இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் 15 நாட்களில் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். நீதிமன்றங்கள் அல்லது அரசு நிறுவனங்களிடம் இருந்து உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில், 36 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 72 மணி நேரத்துக்குள் அவர்கள் குறித்த தகவலை அரசு கேட்கும் போது வழங்க வேண்டும்.

என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன்
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் முக்கியமான தகவல்களை பதிவுசெய்தவரின் விவரங்களையும் பகிர்ந்த கொள்ள வேண்டும் என்பது முக்கியம். இது என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷனை தகர்க்கும் செயல் என வாட்ஸ்அப் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

சட்டப்பூர்வ உத்தரவு
அரசாங்கம் அதன் FAQ-ல் இதை தெளிவுப்படுத்தியிருக்கிறது. இந்த விதியின் நோக்கம் எந்த விதத்திலும் குறியாக்கத்தை தகர்க்கவோ அதை பலவீனப்படுத்துவதோ நோக்கம் அல்ல. இதன் மூலம் இந்திய தோற்றுவிப்பாளர்களின் பதிவு விவரங்களை பெறுவது மட்டுமே. இது சட்டப்பூர்வ உத்தரவுடன் நிறுவனத்தால் பகிரப்படக் கூடிய செயல் எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

சொந்த பயன்பாட்டு விதிமுறைகள்
இந்த தேவையின் சாராம்சம் என்னவென்றால், தளங்கள் அதன் பயன்பாட்டு விதிமுறைகளின் படி ஒரு குறிப்பிட்ட வகை உள்ளடக்கத்தை பதிவேற்றவோ அல்லது பகிரவோ வேண்டாம் என அதன் பயனர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் சொந்த பயன்பாட்டு விதிமுறைகளை தீர்மானிக்கும் திறனையும் தளங்கள் கொண்டிருக்க வேண்டும். குறிப்பிடப்படும் குறியாக்கமானது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு சட்ட விரோதமானத உள்ளடக்கத்தையும் பகிர்வதற்கு தளங்களை பயன்படுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications