அப்படியே விடமுடியாது "எல்லை மீறும் காட்சிகள்"- ஓடிடி படைப்புகளுக்கு விரைவில் கட்டுப்பாடு: மத்திய அமைச்சர்!

|

ஓடிடிகளில் வெளியாகும் படைப்புகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தளங்கள்

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தளங்கள்

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட தளங்களில் வெளியாகும் தொடர்கள் மக்களிடைய பலத்த வரவேற்பு பெற்றன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலின்காரணமாக தியேட்டர்கள் மூடும்நிலை ஏற்பட்டது. இதையடுத்து திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாக தொடங்கின. ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரைபர்களும் அதிகரிக்கத் தொடங்கின.

ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகள்

ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகள்

தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் திட்டங்களோடு இலவசமகா ஓடிடி அணுகலை வழங்கி வருகின்றன. ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளியாகின. இதனால் பல புகார்களும், சர்ச்சைகளும் எழுந்து வந்தது.

அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களில் பிரத்யேகமாக வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகின்றன. ஆபாச காட்சிகள், மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலான கதை களம் இடம்பெறுவதாக ஓடிடிகளில் வெளியாகும் படைப்புகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மெரினா கடற்கரையில் செல்பி புள்ளையா மாறுங்க: மெரினா கடற்கரையில் செல்பி புள்ளையா மாறுங்க: "நம்ம சென்னை" செல்பி மேடை- பொதுமக்கள் ஆர்வம்!

சர்ச்சைகளை கிளப்பிய தொடர்கள்

அந்த வகையில், அண்மையில் அமேசான் பிரைமில் வெளியான தாண்டவ் மற்றும் மிர்சாபூர் ஆகிய இந்தி தொடர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. தாண்டவ் தொடரில் இந்து கடவுள்கள் கேலி செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளதாகவும், மிர்சாபூர் தொடரில் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

இந்தநிலையில், இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஓடிடி தளங்களில் வெளியாகும் சில தொடர்கள் மீது பல புகார்கள் வந்துள்ளன.

விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்

விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள், டிஜிட்டல் செய்தித்தாள்கள் பத்திரிகை கவுன்சில் சட்டம், கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்ஸ் (ஒழுங்குமுறை) சட்டம் அல்லது தணிக்கை வாரியத்தின் கண்காணிப்பின் கீழ் வருவதில்லை. இதனால், ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

Source: india.com

Best Mobiles in India

English summary
New Guidelines Announcing Soon for Functioning of OTT Platforms in India: Union Minister Prakash Javadekar

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X