TV, AC-க்கு GST ரேட் கட்.. இனிமே 28 சதவீதம் இல்ல.. 18 சதவீதம் தான்.. எவ்வளவு சீப்பாக கிடைக்கும்?
ஜிஎஸ்டி (GST) என்று சுருக்கமாக அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) கவுசினலானது புதிய 2 அடுக்கு வரி அமைப்பை அங்கீகரித்துள்ளது. இதனால், டிவிகள், ஏசிகள் மற்றும் டிஷ் வாஷ் மெஷின்களின் வரியும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே, மலிவான விலைக்கு மின்னனு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்க இருக்கிறது. இந்த புதிய ஜிஎஸ்டி விதிப்பு எப்போது அமலுக்க வருகிறது, டிவிகள், ஏசிகள் போன்றவற்றில் எவ்வளவு விலை குறையும், உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடைமுறையில் இருக்கும் 5%, 12%, 18% மற்றும் 28% என்னும் 4 அடுக்கு வரி அமைப்பை மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை 5% மற்றும் 18% என்ற 2 அடுக்கு அமைப்பாக மாற்றவும் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆடம்பரப் பொருட்களுக்கு 40% என்னும் தனி வரியும் விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட வரி விதிகங்கள் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. இதனால், சமானிய மக்கள் படுகுஷியில் இருக்கின்றனர். ஏனென்றால், மின்னனு மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் வரியும் இதில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றுக்கான வரி விதிகம் முன்பு 28% ஆக இருந்தது. இப்போது 10% குறைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பிறகு 18% மட்டுமே வரி விதிக்கப்படும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், ஏர் கண்டிஷனர்களுக்கான (Air Conditioners) வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டெலிவிஷன்களுக்கான (Televisions) வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் எல்இடி (LED) டிவிகள் அடங்கும்.
அதேபோல எல்சிடி (LCD) டிவிகளுக்கும் பொருந்தும். ஆனால், 32 இன்ச் டிஸ்பிளேவுக்கு மேல் கிடைக்கும் மாடல்களுக்கு மட்டுமே இந்த வரி குறைப்பு பொருந்தும். அதற்கும் கீழ் டிஸ்பிளே கொண்ட மாடல்களுக்கு பொருந்தாது. ஏனென்றால், அதுபோன்ற மாடல்கள் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. ஆகவே, இதில் மேலும் விலை குறைக்கப்பட வாய்ப்புகள் கிடையாது.
மானிட்டர்கள் & புரொஜெக்டர்களில் (Monitors & Projectors) வரியும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், டிஷ் வாஷிங் மெஷின்கள் (Dish wash Mechine) மீதான வரியும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட மின்னனு மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலை ரூ.1,500 முதல் ரூ.2,500 வரையில் குறைய வாய்ப்புள்ளது.
ஆகவே, 40 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவிகள் மேலும் மலிவாக கிடைக்கும். அதேபோல வீட்டுகளுக்கு வாங்கப்படும் மானிட்டர்களும் மலிவாக வாங்க கிடைக்க இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக தெரிவித்திருந்தார். அதன்படியே இப்போது ஜிஎஸ்எடி கவுன்சில் கூட்டத்தில் வரி குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56ஆவது ஜிஎஸ்எடி கவுன்சில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திலேயே மின்னனு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இந்த குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால், தீபாவளிக்கு மலிவான விலைக்கு பொருட்களை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications