Home
News

GST ரேட் கட்.. செப்.22 முதல் எந்தெந்த பொருட்களின் விலை எவ்வளவு குறையும்?

2025 செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி விகிதங்கள் (GST Rates) குறையள்ளன. இதன்கீழ் பல வகையான பொருட்களின் விலைகள் குறைய உள்ளன. இந்த நடவடிக்கை - 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்கிற இரண்டு பரந்த அடுக்குகள் மட்டுமே இருக்கும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் வரி விகித திருத்தங்களுக்கு பின் வருகிறது.

சின் குட்ஸ் (Sin Goods) என்று குறிப்பிடப்படும், அதாவது பொதுவாக சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படும் பொருட்கள் அல்லது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என்று கருதப்படும் அல்லது தார்மீக பார்வையில் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40 சதவீதம் என்கிற மற்றொரு அடுக்கும் உருவாக்கப்பட்டு உள்ளது.

GST ரேட் கட்.. செப்.22 முதல் எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

இந்த எல்லா புதிய ஜிஎஸ்டி விகிதங்களுமே 2025 ஆம் ஆண்டு நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. பல நிறுவனங்கள் ஏற்கனவே அன்றாட பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளன, இதற்கிடையில் வேறு என்னென்ன பொருட்கள் எவ்வளவு விலை குறைப்பை காணலாம் என்கிற கண்ணோட்டம் இதோ:

ஹோம் அப்ளையன்சஸ் (HomeAppliances): முன்னணி அப்ளையன்சஸ் உற்பத்தியாளர்கள், ரூம் ஏர் கண்டிஷனர்களின் விலையை ரூ.4,500 வரையிலும், டிஷ் வாஷர் மெஷின்களின் விலையை ரூ.8,000 வரையிலும் குறைத்துள்ளனர். புதிய விலைகள் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

வோல்டாஸ், டைகின், கோத்ரேஜ் அப்ளையன்சஸ், பானாசோனிக் மற்றும் ஹேயர் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆனது ஏற்கனவே திருத்தப்பட்ட விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளன. திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் "புதிய விலைகளும்" அமலுக்கு வரும்

சரியான நேரத்தில், 2025 நவராத்திரி தொடங்கும் நேரத்தில் இந்த திருத்தங்கள் வந்துள்ளதால், இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு நடக்கும் விற்பனையில் நல்ல வியாபாரம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி டிஷ் வாஷர் உற்பத்தியாளர்களும் விலைகளை குறைத்து, ஜிஎஸ்டி சலுகைகளை நுகர்வோருக்கு விரிவுபடுத்தி உள்ளனர். இதன் மூலம் டிஷ் வாஷரை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்ளையன்சஸ் தவிர்த்து வேறு என்னென்ன பொருட்களின் விலைகள் குறையும்? பால் பொருட்களின் விலைகள் குறையும். பால் பிராண்டான அமுல் ஆனது நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பேக்கரி பொருட்கள் மற்றும் உறைந்த சிற்றுண்டிகள் உட்பட 700 க்கும் மேற்பட்ட தயாரிப்பு பொதிகளின் சில்லறை விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது

இதேபோல பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தண்ணீரின் விலையும் குறையும். ரயில்வே அமைச்சகம் ஆனது தனது பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குடிநீர் ஆன "ரயில் நீரின்" அதிகபட்ச விற்பனை விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, 1 லிட்டர் ரயில் நீர் பாட்டிலின் விலை ரூ15 இல் இருந்து ரூ.14 ஆகவும், 500 மில்லி பாட்டிலின் விலை ரூ.10 இல் இருந்து ரூ.9 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank) ஆனது, ஜிஎஸ்டி போர்ட்டலில் யுபிஐ அடிப்படையிலான ஜிஎஸ்டி கட்டண வசதியை (UPI-based GST payment facility) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய சேவை ஆனது, இந்தியா முழுவதும் வரி செலுத்துவோர்கள், க்யூஆர் குறியீடுகள் மற்றும் விபிஏ (VPA) ஐடிகள் மூலம், யுபிஐ சேவையை பயன்படுத்தி தடையின்றி ஜிஎஸ்டி பணம் செலுத்த உதவும் என்று சவுத் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் சவுத் இந்தியன் வங்கிக்கு - ஒரு ஏஜென்சி வங்கி (Agency Bank) ஆக, அரசு வணிகத்தை மேற்கொள்ள ஆர்பிஐ அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளதையும் சவுத் இந்தியன் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. இது மறைமுக வரிகளை வசூலிப்பதற்காக, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (Central Board of Indirect Taxes & Customs - CBIC) வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New GST Rate Cut Come to Effect From September 22 Check Out Price Changes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X