புதிய GST வரம்பு.. UPI வேணாம் பணமா கொடுங்கனு கேட்டதால் வந்த விளைவு.. இனிமேல் இதுதான் லிமிட்?
டிஎப்எஸ் (DFS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நிதி சேவைகள் துறை (Department of financial services) ஆனது வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான தற்போதைய ஜிஎஸ்டி வரம்பு (GST Limit) குறித்து வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆகியவற்றிடமிருந்து கருத்துகளை கேட்டு வருகிறது.
இந்த கருத்துக்கேட்பின் போது, சில வங்கிகள், வணிகர்களுக்கான ஜிஎஸ்டி வரம்பை ரூ.1 கோடி ஆக அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதாக இந்த விஷயத்தை அறிந்த மூன்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக டிஜிட்டல் பேமண்ட், யுபிஐ மற்றும் ஜிஎஸ்டி ஆகியவைகளில் 2 முக்கியமான மாற்றங்கள் நடக்கலாம்.

முதல் மாற்றம் - இந்த கருத்துக்கேட்பின் கீழ் கிடைக்கும் தரவுகள் ஆனது யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கான வணிகர் தள்ளுபடி விகிதத்தை (Merchant discount rate - MDR) செயல்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. அறியாதோர்களுக்கு டிஜிட்டல் வழியிலான கட்டணங்களை எளிதாக்குவதற்கான செலவை செலுத்த, பேமண்ட் செய்ய உதவும் நிறுவனங்கள் ஆனது வணிகர்கள் மீது விதிக்கும் கமிஷனே எம்டிஆர் (MDR) ஆகும்.
இரண்டாவது மாற்றம் - கர்நாடக வணிக வரித் துறை ஆனது ஆண்டுக்கு ரூ.40 லட்சத்திற்கு மேல் வருவாய் உள்ள வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல வணிகர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை கைவிட்டு பணப்பரிவர்த்தனைக்கு மாறி உள்ளனர்.
வங்கி வட்டாரங்களில் உள்ள பலர் இதை வணிக பணப்பரிவர்த்தனைகளை முறைப்படுத்தும்நம் நாட்டின் நோக்கத்திற்கு எதிர்மறையானதாக உள்ளது என்று கருதினர். ஆக ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான வருடாந்திர விற்றுமுதல் வரம்பை ரூ.1 கோடியாக உயர்த்துவது சிறு வணிகர்கள் மீண்டும் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை ஏற்க உதவும்.
யுபிஐ சேவையானது முழுக்க முழுக்க சிறு வணிகங்களை மாற்றம் சிறிய கடைகளை நம்பித்தான் இருக்கிறது. சமீபத்தில் என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India) வழியாக கிடைத்த தரவுகளே அதற்கு சாட்சி.
என்பிசிஐ தரவுகளை அடிப்படையாக கொண்டு பிஸ்னஸ் லைன் வலைத்தளம் வழியாக வெளியான அறிக்கையானது, கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஆப்களின் வழியாக எங்கெல்லாம்.. அதாவது எந்தெந்த கடைகளில், எந்தெந்த விஷயங்களுக்காக யுபிஐ சேவையின் கீழ் பயனர்கள் அதிகமாக பணம் செலுத்தி உள்ளனர் என்கிற விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது.
அதன்படி மளிகைப் பொருட்கள் (Groceries), உணவகங்கள் (Restaurants), மொபைல் நெட்வொர்க் பில்கள் (Mobile network bills) மற்றும் சேவை நிலையங்கள்), கேமிங் ஆப்கள் (Gaming apps) மற்றும் சிகரெட் கடைகளில் (Cigarette shops) பணம் செலுத்துவதற்காகவே பெரும்பாலான யுபிஐ பரிவர்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
என்பிசிஐ ஆனது முதன்முறையாக, வணிகர் வகை வாரியாக யுபிஐ தரவை (UPI data by Merchant category) வெளியிட்டுள்ளது. அந்த தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் மளிகைப் பொருட்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் ரூ.64,882 கோடி மதிப்புள்ள 3 பில்லியனுக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் துரித உணவு உணவகங்களில் 1.22 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன; அதே நேரத்தில் மற்ற உணவகங்களில் 1.15 பில்லியன் பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மதிப்பு வாரியாக, பெரும்பாலான பயனர்கள் தங்கள் லோன்கள், கிரெடிட் கார்டு மற்றும் பை நொவ் பே லேட்டர் வசதியின் கீழ் தங்கள் பில்களை செலுத்த யுபிஐ சேவையை பயன்படுத்துகின்றனர். இதன்கீழ் கடந்த ஜூலை மாதத்தில், யுபிஐ சேவையை பயன்படுத்தி ரூ.93,857 கோடி நிலுவைத் தொகைகள் தீர்க்கப்பட்டுள்ளன
தற்போதைய ஜிஎஸ்டி விதியின் படி, பொருட்களுக்கு ஆண்டுக்கு ரூ.40 லட்சத்திற்கும் அதிகமாகவும், சேவைகளுக்கு ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாகவும் வருவாய் ஈட்டும் வணிகர்கள் ஜிஎஸ்டி போர்ட்டலில் தங்களை பதிவு செய்து ஆண்டுதோறும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








