Home
News

ஆகஸ்ட் 1-க்கு முன் இதை செஞ்சிடுங்க.. இல்லனா உங்க ஆண்ட்ராய்டு போனில்..? Google-ன் அவசர எச்சரிக்கை!

கூகுள் (Google) நிறுவனமானது ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு அவரச எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில் வருகிற "ஆகஸ்ட் மாதம் தொடங்குவதற்கு முன்னதாக இதை செய்து விடுங்கள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்ன செய்ய வேண்டும்? மீறி செய்யவில்லை என்றால் என்னவாகும்? இதோ விவரங்கள்:

கூகுள் நிறுவனமானது, தனது மிகவும் பழைய ஆண்ட்ராய்டு ஓஎஸ்-களில் (Old Android OS) ஒன்றான கிட்கேட் ஆப்ரேட்டிங் சிஸ்டமிற்கு (KitKat Operating System) இனிமேல் எந்த ஆதரவும், அப்டேட்டும் (Support or Update) வழங்கப்பட மாட்டாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ஆகஸ்ட் 1-க்கு முன் இதை செஞ்சிடுங்க.. Google-ன் அவசர எச்சரிக்கை!

இதனொரு பகுதியாக கிட்கேட் ஓஎஸ்-ஐ பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள் முடிந்த வேகத்தில் புதிய ஓஎஸ் வெர்ஷன்களுக்கு (Latest OS Versions) மாறுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வருகிற 2023 ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய ஆண்ட்ராய்டு ஓஎஸ்-க்கு அப்டேட் ஆகும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூகுளின் இந்த திடீர் நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? சிறந்த யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் (User Experience) மற்றும் மேம்பட்ட பாதுகாப்பிற்காகவும் (Enhanced Security), புதிய ஓஎஸ் வெர்ஷன்களிலும், அதன் பாதுகாப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

கிட்கேட் ஓஎஸ்-இல் இருந்து லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-க்கு அப்டேட் ஆகவில்லை என்றால் என்னவாகும்? ஆண்ட்ராய்டு டெவலப்பர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கூகுள் பிளே சேவைகளின் (Google Play Services) எதிர்கால வெளியீடுகளில் கிட்கேட்டிற்கான ஆதரவு நிறுத்தப்பட உள்ளது; ஆகஸ்ட் தொடங்கியதும் கிட்கேட் ஏபிஐ லெவல்ஸ் 19 & 20-இல் கூகுள் பிளே சேவைகளுக்கான அப்டேட்கள் நிறுத்தப்படும்.

ஆக, நீங்கள் கிட்கேட் ஓஎஸ்-இல் இருந்து லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு ஓஎஸ் வெர்ஷனுக்கு அப்டேட் ஆகவில்லை என்றால் உங்கள் மொபைல் போனில் கூகுள் பிளே சேவைகள் கிடைக்காது. ஆக்டிவ் ஆக உள்ள கிட்கேட் ஓஎஸ் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களின் எண்ணிக்கையானது 1% க்கும் கீழேதான் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு கிட்கேட், அந்த நேரத்தில் மிகவும் பிரபலமான ஓஎஸ் ஆக திகழ்ந்தது. இருப்பினும் பல ஆண்டுகளாக, தொழில்நுட்ப உலகில் ஏற்பட்ட விரைவான முன்னேற்றங்களால் கிட்கேட் ஓஎஸ் ஆனது தற்போது காலாவதியான ஒன்றாகி விட்டது; புதிய தொழில்நுட்பம் தொடர்பான பாதுகாப்பு மற்றும் மேம்பாடுகளை இனிமேலும் ஆதரிக்க முடியாத நிலைக்கு வந்துள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கான ஆதரவு இல்லாத பட்சத்தில், பழைய கிட்கேட் ஓஎஸ்-ஐ பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு சாத்தியமான பாதுகாப்பு அபாயங்கள் (Security Dangers) ஏற்படலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூடவே ஆண்ட்ராய்டுக்கான பல புதுமையான மேம்பாடுகளையும் அம்சங்களையும் கூட அதனால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதில் இருந்து தப்பிக்க இருக்கும் ஒரே வழி, பழைய கிட்கேட் ஓஎஸ்-ஐ பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு போன்களை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்வது மட்டுமே ஆகும். முடிந்தவரை ஆண்ட்ராய்டு 10 (Android 10) அல்லது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 11 க்கு (Android 11) அப்டேட் ஆகுமாறு கூகுள் பரிந்துரைக்கிறது. இது உகந்த செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வெர்ஷன்கள் ஆகும்.

மேலும் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-க்கு மேம்படுத்துவதன் மூலம், பயனர்கள் சமீபத்திய ஆண்ட்ராய்டு அம்சங்களையும், பக்ஸ் ஃபிக்ஸஸ்களையும் (Bug Fixes) பெற முடியும். எல்லாவற்றையும் விட முக்கியமாக அவர்கள் தொடர்ந்து கூகுள் பிளே சேவைகளை பயன்படுத்த முடியும்.

ஒருவேளை நீங்கள் மிகவும் பழைய மொபைல் போனை பயன்படுத்தினால், அதில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷனை கொண்டு வர முடியாது என்றால், நீங்கள் மேம்படுத்தப்பட்ட அல்லது சமீபத்திய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை ஆதரிக்கும் புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதை கருத்தில் கொள்ளுமாறும் கூகுள் பரிந்துரைக்கிறது. நினைவூட்டும், இதேபோல கடந்த 2021 ஆம் ஆண்டில் ஜெல்லி பீன் ஓஎஸ்-க்கான (Jelly Bean OS) ஆதரவும் நீக்கப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Asked to Update Immediately From Old Android OS Before August 2023 To Avoid Losing Play Store
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X