புது ரூல்ஸ்.. டிச.8 அமல்.. Google அக்கவுண்ட் இருக்கா.. உடனே இதை பண்ணுங்க.. இல்ல, அப்படியே காலி.. மேப்ல வருது!
கூகுள் (Google) அக்கவுண்ட் இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொரு கஸ்டமர்களும் கூகுள் அக்கவுண்ட் இல்லையென்றால், இமெயில் முதல் மேப் வரையில் எந்த ஆப்களையும் பயன்படுத்த முடியாது. இப்படிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்டில் டிசம்பர் 8ஆம் தேதி புது விதிகள் வர இருக்கின்றன. சொல்லப்போனால், அந்த தேதிக்குள் இதை செய்யாவிட்டால், உங்களது ஹிஸ்டரி நீக்கம் செய்யப்பட்டலாம். இந்த விதிகள் யாருக்கு பொருந்தும்? நீக்கம் செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.
கூகுள் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களிடம் கூகுள் மேப்ஸ் (Google Maps) இல்லாமல் இருக்காது. லோகேஷன் மட்டுமல்லாமல், பெட்ரோல் பங்க், ஏடிஎம், ஹாஸ்பிட்டல் போன்ற முக்கிய இடங்களையும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும். இதனால், கோடிக்கணக்கான யூசர்களின் தவிர்க்க முடியாத ஆப்-ஆக இந்த கூகுள் மேப்ஸ் வளர்ந்துவிட்டது. இப்போது, வரும் விதிகளும் கூகுள் மேப் யூசர்களுக்கே வருகிறது.

இந்த விதிகள் மூலம் கூகுள் மேப்ஸ் லோகேஷன் ஹிஸ்டரி-ஐ (Google Maps Location History) ஆட்டோமேட்டிக் முறையில் நீக்கம் செய்ய இருக்கிறது. அதாவது, மூன்று மாதங்களுக்கு மேலான லோகேஷன் ஹிஸ்டரி உங்களது அனுமதி இல்லாமலேயே நீக்கப்பட இருக்கிறது. ஆகவே, இனிமேல் உங்களது மேப்பில் மூன்று மாத ஹிஸ்டரியில் கவனமுடம் இருக்க வேண்டும். இதை பேக்கப் எடுக்கலாம்.
இல்லையென்றால், உங்களது டைம்லைன், ரூட்கள் மற்றும் சென்ற இடங்களின் டேட்டாக்கள் திரும்ப கிடைக்காது. இருப்பினும், செட்டிங்ஸ் மூலம் குறிப்பிட்ட டைம்லைனை அவ்வப்போது சேமித்து கொள்ளலாம். சேமிக்கப்பட்ட டைம்லைன் அப்படியே இருக்கும். ஆனால், சேமிக்கப்படாத லோகோஷன் ஹிஸ்டரி மூன்று மாதங்களில் நீக்கம் செய்யப்படும். ஆகவே, அதற்கு முன்னதாகவே பேக்கப் எடுத்து கொள்ளலாம்.
அப்படியேவிட்டால், ஆட்டோமேட்டிக் முறையில் நீக்கம் செய்யப்படுவதை தடுக்க முடியாது. உங்களது கூகுள் மேப்ஸ் லோகோஷன் ஹிஸ்டரி டேட்டாவை சேமிக்க முதலில் ஆப்-ஐ அப்டேட் செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு கூகுள் மேப்ஸ் லோகோஷன் ஹிஸ்டரி நீக்கம் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும். மூன்று மாத லோகோஷன் ஹிஸ்டரியை சேமிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

சொல்லப்போனால், இப்போது, கூகுள் மேப்பின் லோகேஷன் ஹிஸ்டரி விவரங்களை 3 மாதம் அல்லது 18 மாதம் அல்லது 36 மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டோமேட்டிக் முறையில் நீக்கம் செய்து கொள்ளும் ஆப்ஷன்கள் இருக்கிறது. இதுபோக ஆட்டோமேட்டிக் டெலிட் செய்ய வேண்டாம் என்ற ஆப்ஷனும் இருக்கிறது. டிசம்பருக்கு பிறகு இதில் 3 மாதங்கள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, லோகேஷன் ஹிஸ்டரியை இப்போதே சேமிப்பது நல்லது.
முதலில் கூகுள் நிறுவனம், டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஆட்டோமேட்டிக் ஹிஸ்டரி நீக்கம் செய்யப்படும் என்று ஜூன் மாதத்தில் மேப் யூசர்களுக்கு இமெயில் மூலம் தெரிவித்தது. ஆனால், இப்போது டிசம்பர் 8ஆம் தேதி 2024ஆம் ஆண்டு முதல் ஹிஸ்டரி நீக்கம் செய்யப்படும் என்று இமெயில் வந்திருக்கிறது. ஆகவே, எப்படிப் பார்த்தாலும், டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.
எப்படி சேமித்து கொள்வது? முதலில் கூகுள் ஆக்டிவிட்டி (Google Activity) பக்கத்தை ஓப்பன் செய்து கொள்ளுங்கள், அதில் வெப் மற்றும் ஆப் ஆக்டிவிட்டி (Web & App Activity) டேப்-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, கூகுள் மேப், பிளே ஸ்டோர் போன்ற ஆப்களின் லோகோவுக்கு அருகில் வியூ ஆல் (View All) டேப் தோன்றும். அதை கிளிக் செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
இப்போது, சேவிங் ஆக்விட்டி (Saving Activity) டேப் மற்றும் ஆட்டோ-டெலிட் (Auto Delete) டேப் தோன்றும். இதில் சேவிங் ஆக்டிவிட்டியை கிளிக் செய்து உங்களது விவரங்களை சேமித்து கொள்ளலாம். இதில் மேப் மட்டுமல்லாமல், மற்ற ஆப்களின் டேட்டாவும் சேமிக்க கிடைக்கும். கூகுள் யூசர்களுக்கு மெயில் மூலம் மட்டுமே அலெர்ட் செய்துள்ளது. வரும் நாட்களில் முழு விவரம் தெரியவரும்.


Click it and Unblock the Notifications