Home
News

ரூ.59 கட்டணும்.. Google அக்கவுண்ட்.. மாசத்துக்கு 15 ஜிபிக்கு மேல் யூஸ் பண்ணும் கஸ்டமர்கள்.. இதை பாத்துக்கோங்க!

கூகுள் (Google) அக்கவுண்ட் மூலம் ஜிமெயில் (Gmail), கூகுள் போட்டோஸ் (Google Photos) மற்றும் கூகுள் டிரைவ் (Google Drive) பயன்படுத்தும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் புதிய கூகுள் ஒன் திட்டங்கள் (New Google One Plans) களமிறக்கப்பட்டுள்ளன. இனிமேல் 15 ஜிபிக்கு அதிகமாக டேட்டாவை பயன்படுத்தினால், ரூ.59 கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். இந்த புதிய திட்டங்கள் இந்திய யூசர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்களுக்கு செல்லவில்லை என்றால் என்னவாகும்? ஜிமெயில் மற்றும் போட்டோஸ் பயன்படுத்த முடியாதா?

இப்போதெல்லாம், பேங்க் அக்கவுண்ட் முதல் ஆதார் கார்டு வரையில் அனைத்து முக்கியமான ஆவணங்களுக்கும் ஜிமெயில் கட்டாயமாக தேவைப்படுகிறது. சொல்லப்போனால், மொபைல் வெரிபிகேஷனுக்கு அடுத்தபடியாக ஜிமெயில் வெரிபிகேஷன் வந்துவிட்டது. ஆகவே, ஜிமெயில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டத்தை மறுக்கவும் முடியவில்லை. இப்படிப்பட்ட ஜிமெயில் இலவசமாகத்தான் கிடைக்கிறது.

ரூ.59 கட்டணும்.. Google அக்கவுண்ட்.. மாசத்துக்கு 15ஜிபிக்கு மேல் போனா!

இது வித்தியாசமாக தோன்றலாம். அப்புறம் எப்படி கூகுள் நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கும் என்ற கேள்வி உங்களிடம் எழுவதில் ஆச்சர்யமில்லை. இப்போது, அதற்காகான விடை கிடைத்துவிட்டது. இந்தியாவில் ஜிமெயில், கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் டிரைவ் பயன்படுத்தும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் புதிய கூகுள் ஒன் திட்டங்களை அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்த திட்டங்கள் அனைத்து யூசர்களுக்கும் பொருந்துமா? நீங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் ஜிமெயில், கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் டிரைவ் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும், 15 ஜிபிக்கு மேல் அதில் டேட்டாக்களை வைத்திருந்தால், கட்டாயம் கூகுள் ஒன் திட்டங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த திட்டங்கள் ரூ.59 விலையில் இருந்து தொடங்குகின்றன.

ஒருவேளை நீங்கள் 15 ஜிபிக்குள் டேட்டாக்களை வைத்திருந்தால் எந்தவித கட்டணம் கிடையாது. ஆகவே, இந்த 15 ஜிபிக்கு அடுத்த 30 அல்லது 100 ஜிபி என்று பிரிக்கப்பட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கூகுள் ஒன் திட்டங்களை பெறும் யூசர்களுக்கு முதல் 1 மாதம் இலவசமாக சேவை கொடுக்கப்படுகிறது. அதன்பிறகு கட்டணம் செலுத்த வேண்டும்.

கூகுள் ஒன் திட்டங்கள் எப்படி? இந்த புதிய திட்டங்கள் கூகுள் ஒன் லைட் (Google One Lite) மற்றும் கூகுள் ஒன் பேசிக் (Google One Basic) என்று பிரிக்கப்பட்டுள்ளன. கூகுள் ஒன் லைட் திட்டத்தில் 30 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். கூகுள் ஒன் பேசிக் திட்டத்தில் 100 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். இதை கிளவுட் டேட்டாக்களாக யூசர்கள் ஸ்டோர் செய்து வைத்து, தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

ஜிமெயில், கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் டிரைவ் ஆகியவற்றின் டேட்டாக்களுக்கு மட்டுமே இந்த திட்டங்கள் பொருந்தும். கூகுள் ஒன் லைட் திட்டத்தின் விலை ரூ.59ஆக இருக்கிறது. அதேபோல கூகுள் ஒன் பேசிக் திட்டத்தின் விலை ரூ.130ஆக இருக்கிறது. இந்த கிளவுட் டேட்டாக்களை வேறொரு ஜிமெயில் அக்கவுண்ட்டுக்கு பகிர விரும்பினால், கூகுள் ஒன் பேசிக் திட்டத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

அதிகபட்சம் 5 பேருக்கு உங்களது டேட்டாக்களை ஷேர் செய்து கொள்ளலாம். அதாவது, உங்களது கூகுள் போட்டோஸ் அல்லது டிரைவ் டேட்டாக்களை ஆன்லைனில் மற்றொரு கூகுள் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர் பகிர வேண்டும் என்றால், நீங்களே அனுமதி வழங்க முடியும். கிட்டத்தட்ட 5 பேர் ஒரே நேரத்தில் அந்த டேட்டாக்களை அணுக முடியும். இதற்கு கூகுள் ஒன் பேசிக் திட்டம் சரியாக இருக்கும்.

ஆகவே, இந்த கூகுள் ஒன் திட்டங்கள் 15 ஜிபிக்கு மேல் கிளவுட் டேட்டா ஸ்டோரேஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். வழக்கமாக 15 ஜிபிக்கும் குறைவாக பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு எந்தவொரு கட்டணமும் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த திட்டங்களை பெறும்போது முதல் மாதத்துக்கு இலவசம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Google One Lite Plans For Indian Users Who Need More Than15GB Data Spend Costs Rs 59 Per Month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X