புதிய கேலக்ஸி எஸ்8 லீக், அதிர்ச்சி தரும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துகிறது.!

பெரிய அளவிலான பேட்டரி வெடிப்பு புகார்களில் சிக்கி தவித்த சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி கருவியில் ஆச்சரியமான தொழில்நுட்பங்களை திணித்துள்ளது.

|

சிறிது காலத்திற்கு முன்புவரை சாம்சங் என்றாலே ஒரு நல்ல மதிப்பிற்குரிய பிராண்ட் என்று பெயர் வாங்கி இருந்தது. ஆனால் இப்போதோ சாம்சங் என்றால் வெடிகுண்டு பிராண்ட் என்று கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. அதற்கு காரணமாய் அதன் கேலக்ஸி கருவிகளின் பேட்டரி வெடிப்பு சம்பவங்கள் மூலக்கரணமாய் திகழ்ந்தன. விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்கும் அளவிற்கு சாம்சங் நிறுவனத்தின் பெயர் சுத்தமாய் 'தரைமட்டமானது'.

ஆனால், சாம்சங் பிரியர்கள் மத்தியில் நிறுவனத்தின் பெயர் பெரிய அளவில் பாழாகிப் போகவில்லை என்பது போல் தான் தெரிகிறது. ஏனெனில் சாம்சங் கருவிகள் ஒன்றும் முழுமையாக புறக்கணிக்கப்படவில்லை. அம்மாதிரியான ஒரு நிலைப்பாட்டை சாம்சங் நிறுவனம் உருவாக்கி கொள்வது போலவும் இல்லை. அதன் அடுத்த கேலக்ஸி கருவி மூலம் மீண்டும் அதன் பிராண்ட் பெயரை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது உடன் அயராது உழைத்தும் வருகிறது.

அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த கேலக்ஸி எஸ்8 கருவின் லீக்ஸ் தகவல்கள்.!

முதன்முறையாக

முதன்முறையாக

ஏற்கனவே கேலக்ஸி எஸ்8 ஒரு பவர்ஹவுஸ் கருவியாக இருக்கும் என்ற வதந்திகள் குவிந்துகொண்டுள்ள நிலையில் இப்போது பல அம்சங்கள் 'முதன்முறையாக' இக்கருவியின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்ற லீக் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ப்ளூடூத் 5.0

புதிய ப்ளூடூத் 5.0

அதாவது கேலக்ஸி எஸ்8 கருவி தான் புதிய ப்ளூடூத் 5.0 வெர்ஷன் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற மற்றொரு முக்கிய மைல்கல்லை நிகழ்த்தவுள்ளது. கடந்த வாரம் தான் ப்ளுடூத்தின் சமீபத்திய பதிப்பான ப்ளுடூத் 5.0 அறிமுகம் செய்யபட்டது. இந்த புதிய ப்ளூடூத் 5 ஒரு லாங் ரேன்ஞ் கொண்ட, மிக வேகமான அதே போல் பெரிய ஒளிபரப்பு செய்தி திறன் வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

அதுமட்டுமின்றி ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே அம்சமானது சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் என்றும் கூறப்படுகிறது. அதாவது இக்கருவியில் கைரேகை சென்சார் மற்றும் கருவியை மிக மெல்லிதாக வடிவமைக்க உதவும் புதிய டிஸ்ப்ளே பேனல் யுக்தி இடம் பெறலாம்.

டிஸ்ப்ளே பேனல்

டிஸ்ப்ளே பேனல்

சாம்சங் ஸ்மார்ட்போன் திரையில் கூறப்படுகிறது ஒய்-ஆக்டா பயன்படுத்தபடும். அதாவது தொடு உணரிகள் ஆனது கிளாஸ் கவர் மற்றும் டிஸ்ப்ளே பேனல் இடையே வைக்கப்பட்டிருக்கும். இம்முறையை பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பத்தில் தொடு உணரிகள் டிஸ்ப்ளே பேனலிலேயே வைக்கப்படும்.

ஹோம் பொத்தான்

ஹோம் பொத்தான்

ப்ளூடூத் 5.0, கைரேகை சென்சார், புதிய டிஸ்ப்ளே பேனல் மட்டுமின்றி இந்த பதிப்பில் சாம்சங் அதன் ஹோம் பொத்தானை நீக்குகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் கேலக்ஸி எஸ்8 கருவி ஒரு முழு அளவிலான புதிய வடிவமைப்பை பெற்று ஒரு உண்மையான தலைமை சாதனமாக வெளிவரும் என்று லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க

மேலும் படிக்க

2016-ஆம் ஆண்டில் 'வெளிப்படையாகவே' பல்ப் வாங்கிய ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
New Galaxy S8 Leak Reveals Stunning Technology. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X