கோடு போட்டா ரோடு போடும்.. வாய்பிளக்க வைக்கும் Gen AI.. Samsung போன்களுக்கு வரும் புதிய Galaxy AI அம்சங்கள்!
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 (Samsung Galaxy Unpacked 2025) நிகழ்வு நடக்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், சாம்சங் நிறுவனமானது ஜெனெரேட்டிவ் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Generative Artificial Intelligence - gen AI) அடிப்படையிலான புதிய கேலக்ஸி ஏஐ அம்சங்கள் (New Galaxy AI Features) தொடர்பான டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த டீஸர் வீடியோவில், ஒரு கேலக்ஸி எஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன் உரிமையாளர் கேலக்ஸி ஏஐ உடன் உரையாடுகிறார். அவர் கேலக்ஸி ஏஐ-யிடம் அருகிலுள்ள செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற இத்தாலிய உணவகத்தை கண்டுபிடித்து, வெளிப்புற இருக்கைகளுடன் கூடிய விவரங்களைத் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள சொல்கிறார்.

மேலும், அதை ரிமைண்டர் ஆக காலண்டரில் வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறார். அதாவது இரண்டு நபர்கள் ஒருவர் ஒருவருடன் பேசிக்கொள்வது போல கேலக்சி ஏஐ உடனான உரையாடல் மிகவும் இயல்பானதாக இருப்பதை அந்த டீஸர் வீடியோ வெளிப்படுத்துகிறது. மேலும் அந்த டீசர் வீடியோ வழியாக, மேம்பட்ட யூசர் எக்ஸ்பீரியன்ஸை வழங்குவதற்காக கேலக்ஸி எஸ்25 சீரிஸ்-ல் கேலக்ஸி ஏஐயின் ஆழமான ஒருங்கிணைப்பு நிகழ்த்தப்படும் என்பதையும் சாம்சங் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
மேலும், கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யுஐ 7 ஓஎஸ் மூலம் கேலக்ஸி ஏஐ-பவர்டு ஸ்கெட்ச் டு இமேஜ் திறனானது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதையும் சாம்சங் வெளிப்படுத்தியுள்ளது. பயனர்கள் ஒரு தோராயமான ஓவியத்தை வரைந்தால், ஸ்கெட்ச் டு இமேஜ் அம்சமானது அதை முழு வரைபடமாக வரைந்து முடிக்க அனுமதிக்கும்.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் அறிமுகமாகும் அனைத்து புதிய கேலக்ஸி ஏஐ அம்சங்களும் முதலில் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கும், பின்னர் கேலக்ஸி எஸ்24, கேலக்ஸி எஸ்24 பிளஸ், கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா, கேலக்ஸி இஸட் போல்ட் 6 (Galaxy Z Fold 6), கேலக்ஸி பிளிப் 6 (Galaxy Flip 6) ஆகிய மாடல்களுக்கு கிடைக்கும். பின்னர் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பழைய சாம்சங் மாடல்களுக்கும் வந்து சேரும்.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு எப்போது நடக்கும்? 2025 சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வானது வருகிற ஜனவரி 22 ஆம் தேதி அன்று நடக்கவுள்ளது. இந்நிகழ்வு இந்திய நேரடி இரவு 11.30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வை - சாம்சங்.காம் (Samsung.com), சாம்சங் நியூஸ்ரூம் (Samsung Newsroom) மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் (Samsung YouTube) வழியாக லைவ் ஆக பார்க்கலாம்.
கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்? வழக்கம் போல 3 மாடல்கள் அறிமுகமாகும்: கேலக்ஸி எஸ்25 (Galaxy S25), கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Galaxy S25 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra). லீக்ஸ் தகவல்களில் மட்டுமே சிக்கி வந்த கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் (Galaxy S25 Slim) மாடல் ஆனது இப்போதைக்கு அறிமுகம் ஆகாது என்பது போல் தான் தெரிகிறது.
சமீபத்தில் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் வரும் 3 மாடல்களின் ஐரோப்பிய விலை விவரங்கள், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் கலர் ஆப்ஷன்கள் ஆன்லைனில் லீக் ஆகின என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி எஸ்25 மாடலானது 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி ஆகிய ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வரும் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலில் 128ஜிபி வேரியண்ட் ஆனது அறிமுகம் செய்யப்படாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. எல்லாவற்றை விட முக்கியமாக கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவில் அதிகபட்சமான 1டிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்ட வேரியண்ட்அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்25-ன் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.85,000 க்கும், கேலக்ஸி எஸ்25 பிளஸ்-ன் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.1,09,000 க்கும் மற்றும் கேலக்ஸி எஸ்25அல்ட்ராவின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.1,37,000 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். Photo Courtesy: Samsung.


Click it and Unblock the Notifications








