இனிமேல் இப்படிதான்.. வீடியோ டவுன்லோட் செய்வதில் முக்கிய மாற்றம்.. Netflix போட்ட போடு!
நெட்பிளிக்ஸ் ஓடிடி (Netflix OTT) தளமானது ஐபோன் மற்றும் ஐபாட் பயனர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் கீழ் பயனர்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளின் முழு சீசன்களையும் ஒரே கிளிக்கில் டவுன்லோட் (Download entire seasons) செய்ய அனுமதிக்கிறது.
முன்னதாக இந்த அம்சம், ஆண்ட்ராய்டு (Android) டிவைஸ்களுக்கு பிரத்தியேகமானதாக இருந்தது. முன்னதாக தனித்தனியாக எபிசோட்களை பதிவிறக்கம் செய்துகொண்டு இருந்த ஐஓஎஸ் பயனர்களுக்கு இதுவொரு முக்கிய அப்டேட் ஆகும். நெட்பிளிக்ஸ்-ன் இந்த புதிய சீசன் டவுன்லோட் ஆப்ஷன் ஆனது குறிப்பிட்ட ஷோவின் டிஸ்பிளே பக்கத்தில் ஷேர் பட்டனுக்கு அடுத்ததாக இருக்கும்.

இதைக்கொண்டு நீங்கள் டவுன்லோட் செய்யும் கன்டென்ட்களை, நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும் போது பார்க்லாம். அதாவது பயணங்கள், விமானங்கள் அல்லது இணைய அணுகல் நம்பகத்தன்மையற்ற இடங்களில் ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்திருக்கும் கன்டென்ட்களை பார்த்து மகிழலாம். நினைவூட்டும் வண்ணம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆஃப்லைன் வியூவிங் முதன்முதலில் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பிறகு, இந்நிறுவனம் ஸ்மார்ட் டவுன்லோட்ஸ் போன்ற அம்சங்களையும் சேர்த்தது.
இந்த புதிய அம்சத்துடன் சேர்த்து, நெட்பிளிக்ஸ் அதன் எல்லா நேரத்திலும் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட சீசன்களின் பட்டியலையும் பகிர்ந்துள்ளது. இந்த பட்டியலின் முதலிடத்தில் ஸ்க்விட் கேம் சீசன் 1 மற்றும் 2 உள்ளது, அதை தொடர்ந்து மான்ஸ்டர்: தி ஜெஃப்ரி டாஹ்மர் ஸ்டோரி, ஒன் பீஸ் மற்றும் குயின் சார்லோட்: ஏ பிரிட்ஜெர்டன் ஸ்டோரி ஆகியவைகள் உள்ளன.
ஒரே கிளிக்கில் அனைத்து எபிசோட்களையும் டவுன்லோட் செய்ய அனுமதிக்கும் இந்த புதிய அம்சம் அமெரிக்காவில் நெட்பிளிக்ஸ்-ன் ன் விலை அதிகரிப்பை தொடர்ந்து வருகிறது. தற்போது அமெரிக்காவில், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்கள் உடனான 1 மாத கால சந்தா திட்டம் $7.99 (தோராயமாக ரூ.690) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது $6.99 (தோராயமாக ரூ. 605) ஆக இருந்ததது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.85 விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் லைவ் ஆக ஒளிபரப்பாகும் நிகழ்வுகளின் மீது நெட்பிளிக்ஸ் செய்த முதலீடுகள் ஆனது பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. கடந்த நவம்பர் மாதம் ஜேக் பால் மற்றும் மைக் டைசன் இடையே நடந்த ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டி 65 மில்லியன் ஸ்ட்ரீம்களை ஈர்த்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் நெட்பிளிக்ஸ் சந்தா திட்டங்களின் விலைகள் அதிகரிக்குமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் அமெரிக்காவில் விளம்பரங்களுடன் வரும் சந்தா திட்டத்தின் விலை உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் தற்போது மொத்தம் 4 நெட்பிளிக்ஸ் சந்தா திட்டங்கள் அணுக கிடைக்கிறது - மொபைல் (Mobile), பேஸிக் (Basic), ஸ்டாண்டர்ட் (Standard) மற்றும் பிரீமியம் (Premium).
நெட்பிளிக்ஸ் மொபைல் திட்டத்தின் (Netflix Mobile Plan) விலை மாதத்திற்கு ரூ.149 ஆகும். இது 480பி ரெசல்யூஷனின் கீழ் வீடியோ தரத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் ஒரு வீட்டிற்குள் ஒரு நேரத்தில் ஒரு மொபைல் அல்லது ஒரு டேப்லெட்டை என்கிற சிங்கிள் டிவைஸ் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் பேஸிக் திட்டத்தின் (Netflix Basic Plan)) விலை மாதத்திற்கு ரூ.199 ஆகும். இது 720பி ரெசல்யூஷனின் கீழ் டிவி, லேப்டாப், மொபைல் மற்றும் டேப்லெட் டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்குகிறது. இருப்பினும், இந்த சாந்தாவின் கீழ் ஒரு வீட்டிற்குள் ஒரே நேரத்தில் ஒரு டிவைஸின் வழியாக மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.
நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்ட் திட்டத்தின் (Netflix Standard Plan)) விலை மாதத்திற்கு ரூ.499 ஆகும். இது 1080பி ரெசல்யூஷனின் கீழ் டிவி, லேப்டாப், மொபைல் மற்றும் டேப்லெட் டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்குகிறது. இந்த சாந்தாவின் கீழ் ஒரு வீட்டிற்குள் ஒரே நேரத்தில் 2 டிவைஸ் வழியாக மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.
நெட்பிளிக்ஸ் பிரீமியம் திட்டத்தின் (Netflix Premium Plan)) விலை மாதத்திற்கு ரூ.649 ஆகும், இது 4கே ரெசல்யூஷன், ஸ்பேஷியல் ஆடியோ, ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களின் வழியாக ஸ்ட்ரீமிங் செய்யும் ஆதரவு, எந்த நேரத்திலும், எந்தவொரு கன்டென்ட்டையும் 7 டிவைஸ்களில் பதிவிறக்கம் செய்யும் ஆதரவு ஆகியவைகளை வழங்கும்.


Click it and Unblock the Notifications








