TOLL GATE-ல் அம்பானியின் புதிய தொழில்.. FASTag-ல் புது ஆட்டோமெட்டிக் நம்பர் பிளேட்.. இனி நிற்க வேண்டாம்!
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸின் (Jio Financial Services) துணை நிறுவனமான ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் (Jio Payments Bank) ஆனது டோல்கேட்களில் "தடையற்ற சுங்கச்சாவடி கட்டண வசூல் முறை" ஆன ஃப்ரீ-ப்ளோ டோல் சிஸ்டமை (Free-flow toll system) செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இரத்தினச் சுருக்கமாக சொன்னால் - இதுவொரு மேம்பட்ட மின்னணு சுங்க வசூல் தொழில்நுட்பம் ஆகும். கொஞ்சம் விளக்கமாக சொன்னால் இது - பாஸ்டாக் ஏஎன்பிஆர் (FASTag ANPR) என்கிற ஃபாஸ்டேக் ஆட்டோமெட்டிக் நம்பர் பிளேட் அங்கீகாரம் (Automatic Number Plate Recognition) அடிப்படையிலான மல்டி-லேன் ஃப்ரீ ப்ளோ டோல் சிஸ்டம் (Multi-Lane Free Flow Toll System) ஆகும்.

இந்த மல்டி-லேன் ஃப்ரீ ப்ளோ டோல் சிஸ்டம் ஆனது பயணிக்கும் வாகனங்களை மெதுவாக்கவோ, நிறுத்தவோ அல்லது நியமிக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை பயன்படுத்தவோ தேவையில்லாமல் துல்லியமாக அடையாளம் கண்டு, வகைப்படுத்தி, கட்டணம் வசூலிக்கும் என்று ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் செய்துள்ள பிஎஸ்இ தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு இந்த சிஸ்டம், குருகிராம்-ஜெய்ப்பூர் பாதையில் உள்ள ஷாஜகான்பூர் மற்றும் மனோகர்புரா ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் - எம்எல்எப்எப் (MLFF) திட்டத்தின் கீழ் சுங்கச்சாவடி செயலாக்கத்தை நிர்வகிப்பதற்காக, அரசுக்கு சொந்தமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) சுங்கச்சாவடி வசூலிக்கும் பிரிவான இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவன லிமிடெட் (IHMCL) வழங்கி உள்ளது
ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி இதுவரை வழங்கப்பட்ட ஐந்து எம்எல்எப்எப் ஒப்பந்தங்களில் இரண்டை பெற்றுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனம் ஜூலை 2025 இல் பாஸ்டாக் அடிப்படையிலான சுங்க வசூலை தொடங்கியது, தற்போது நாடு முழுவதும் பல்வேறு நெடுஞ்சாலைகளில் உள்ள 11 சுங்கச்சாவடிகளில் சுங்கச் செயல்பாடுகளை நிர்வகித்து வருகிறது.
டோலிங் ஈகோசிஸ்டமிற்குள்ளான எங்கள் விரிவாக்கம், அன்றாட கட்டணங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஸ்மார்ட் பைனான்ஸ் உள்கட்டமைப்பை உருவாக்குதல் என்ற எங்கள் நோக்கத்தின் இயல்பான முன்னேற்றமாகும் என்று ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO) வினோத் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
பாஸ்டாக் தொடர்பான மற்ற முக்கிய அப்டேட்களை பொறுத்தவரை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) ஆனது ஃபாஸ்டாக் கட்டணம் தொடர்பான முக்கிய மாற்றம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் வருகிற 2025 நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த மாற்றத்தின் கீழ் - செல்லுபடியாகும் ஃபாஸ்டாக் (Valid FASTag) மற்றும் செயல்பாட்டில் உள்ள ஃபாஸ்டாக் (Functional FASTag) இல்லாமல் சுங்கச்சாவடிக்குள் (Toll plaza) நுழையும் வாகனங்களுக்கான - தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (National Highways Fee) திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.
அதாவது நவம்பர் 15, 2025 முதல், ஃபாஸ்டாக் பயன்படுத்தாத வாகன உரிமையாளர்கள் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தி பணம் செலுத்த தேர்வுசெய்யும்போது வழக்கமான சுங்கத்தொகையை விட 1.25 மடங்கு அதிகம் செலுத்த வேண்டும். இந்த தொகை ரொக்கமாக செலுத்துபவர்களை விட ஒப்பீட்டளவில் குறைவு ஆகும் அறியாதோர்களுக்கு - ரொக்கமாக செலுத்தினால், செல்லுபடியாகும் ஃபாஸ்டாக் இல்லாத வாகன உரிமையாளர்கள் பொருந்தக்கூடிய பயனர் கட்டணத்தை விட இரு மடங்கு செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








