அலெர்ட் செய்யும்.. ரெட் கலர் நோட்டிஃபிகேஷன் காட்டும்.. Truecaller ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ள புதிய இலவச அம்சம்!
"ஸ்கேம் (Scam) மற்றும் பிராடு (Fraud) என்று வரும்போது, நீங்களொரு தனியாளாக பாதிக்கப்படவில்லை. ரூகாலர் ஆப்பை பயன்படுத்தும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கடந்த மூன்று மாதங்களில் குறைந்தபட்சம் ஒரு மோசடி எஸ்எம்எஸ்-ஐ பெற்றுள்ளனர் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்" என்று ட்ரூகாலர் (Truecaller) நிறுவனமே கூறியுள்ளது.
மேலும் " பெரும்பாலும் இதுபோன்ற மோசடிகள் மின்சார கட்டணம் செலுத்துவது, வங்கி தொடர்பான சேவைகள், வேலை வாய்ப்புகள், கேஒய்சி, ஆதார், பான் தொடர்பான வேலைகள், கடன் கொடுப்பது, தொண்டு (Charity) நிறுவனமென்று கூறுவது, லாட்டரி பரிசு போன்றவைகளுடன் தொடர்புடையதாக இருக்கின்றன" என்பதையும் ட்ரூகாலர் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

இதுபோன்ற மோசடி மெசேஜ்கள் / பிராடு எஸ்எம்எஸ்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு, காவல் துறையினர் மற்றும் சைபர் செல்கள் தொடர்ந்து மக்களை எச்சரித்து வரும் நிலையில், ட்ரூகாலர் ஆப்பில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இலவசமாக கிடைக்கும் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுவாரசியமாக, ட்ரூகாலர் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சமானது ஏஐ (AI) அடிப்படையிலான, அதாவது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையிலான ஒரு அம்சமாகும். ட்ரூகாலர் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அம்சம் சாத்தியமான மோசடி மெசேஜ்கள் / பிராடு எஸ்எம்எஸ்களிடம் இருந்து பயனர்களை எச்சரிக்கும் மற்றும் காப்பாற்றும்.
ட்ரூகாலர் நிறுவனம் இந்த அம்சத்தை பிராடு ப்ரொடெக்ஷன் (Fraud Protection) என்று அழைக்கிறது. இது யூசர் ஃபீட்பேக் (User Feedback) மற்றும் இயந்திர கற்றலை (Machine Learning) பயன்படுத்தி மோசடி மெசேஜ்கள் / பிராடு எஸ்எம்எஸ்களை கண்டறியும் ஒரு ஏஐ-ட்ரைவன் ப்ரொடெக்ஷன் டூல் (AI-driven Protection Tool) ஆகும்.
இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்? நீங்களொரு ட்ரூகாலர் ஆப் பயனராக இருந்தால், நீங்கள் ஒரு மோசடி மெசேஜை பெறுகிறீர்கள் என்றால், ட்ரூகாலர் ஆப் ஆனது அந்த மெசேஜை ரெட் நோட்டிஃபிகேஷன் உடன் காண்பிக்கும். அதாவது குறிப்பிட்ட மெசேஜை திறக்கவோ, படிக்கவோ அல்லது அதிலுள்ள இணைப்புகளை கிளிக் செய்யவோ வேண்டாம் என்று உங்களை எச்சரிக்கும்.
மேலும் குறிப்பிட்ட ரெட் நோட்டிஃபிகேஷன் ஆனது கைமுறையாக நிராகரிக்கப்படும் வரை உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நீங்கள் ட்ரூகாலரின் ரெட் நோட்டிஃபிகேஷன் அலெர்ட்டை கவனிக்கவில்லை என்றால், தெரியாமல் அந்த மெசேஜை திறந்து விட்டீர்கள் என்றால்.. கவலைப்பட வேண்டாம்.
ஏனென்றால், ட்ரூகாலரின் புதிய ஏஐ டூல் ஆனது குறிப்பிட்ட எஸ்எம்எஸ் உடன் இணைக்கப்பட்ட அனைத்து இணைப்புகளையும் தானாகவே முடக்கிவிடும், இதனால் பயனர்கள் தீங்கிழைக்கும் இணைப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள். இருப்பினும், உங்களுக்கு வரும் எஸ்எம்எஸ் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை கைமுறையாக சரிபார்ப்பது எப்போதுமே ஒரு நல்ல பழக்கம் தான்!
முன்னரே குறிப்பிட்டபடி, ட்ரூகாலர் ஆப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிராடு ப்ரொடெக்ஷன் அம்சமானது முற்றிலும் இலவசமாக கிடைக்கும் ஒரு அம்சமாகும்; அதாவது சந்தா கட்டணத்தின் கீழ் கிடைக்கும் பிரீமியம் அம்சம் அல்ல. மேலும் இந்த அம்சம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








