Flipkart பிக் சேவிங் டேஸ் விற்பனை தேதிகள் அறிவிப்பு.. iPhone 14 உட்பட 6 போன்கள் மீது அடேங்கப்பா ஆஃபர்!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் தனது ஹோலி விற்பனையை முடித்த கையோடு அதன் அடுத்த சிறப்பு விற்பனைக்கான (Next Sale) தேதிகளை அறிவித்துள்ளது. பிக் சேவிங் டேஸ் சேல் (Big Saving Days Sale) என்கிற பெயரின் கீழ் நடக்கவுள்ள இந்த சிறப்பு விற்பனையானது வருகிற மார்ச் 11 முதல் மார்ச் 15 வரை நடக்கவுள்ளது.
ஒருவேளை நீங்கள் பிளிப்கார்ட் பிளஸ் (Flipkart Plus) மெம்பராக இருந்தால், இந்த பிக் சேவிங் டேஸ் விற்பனைக்கான ஆரம்ப அணுகலை ஒரு நாள் முன்பே, அதாவது மார்ச் 10 ஆம் தேதியன்றே பெறுவீர்கள். அறியாதோர்களுக்கு பிளிப்கார்ட் பிளஸ் என்பது அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை போலவே செயல்படும்; இலவச டெலிவரி, தள்ளுபடிகளுக்கான ஆரம்ப அணுகல் மற்றும் பல நன்மைகளை வழங்கும்.
Flipkart Big Saving Days விற்பனையின் போது மொபைல்கள் மீது பெரும் தள்ளுபடி!
பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையின் போது பல வகையான தயாரிப்புகளின் மீது பல்வேறு வகையான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அணுக கிடைக்கும். குறிப்பாக இந்த விற்பனையின் போது மொபைல் போன்கள் மீது பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும் என்பதை பிளிப்கார்ட் வலைத்தளமே உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள டீசரின்படி, பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் உட்பட மொத்தம் 6 ஸ்மார்ட்போன்களின் மீது பெரிய அளவிலான ஆஃபர் கிடைக்கும். அதென்ன ஸ்மார்ட்போன்கள்? எந்தெந்த போன் மீது என்னென்ன ஆபர் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

iPhone 14 மற்றும் iPhone 14 Plus மீதான சலுகைகள்
பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகிய இரண்டின் மீதும் பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கும் என்று பிளிப்கார்ட் வெளிப்படுத்தி உள்ளது. பிளிப்கார்ட் டீஸரின்படி இந்த ஐபோன்கள் ரூ.70,000 க்குள் வாங்க கிடைக்கும். கூடவே வங்கி சலுகைகளும் இருக்கும்.
Samsung Galaxy S21 FE மீதான சலுகைகள்
பிளிப்கார்ட் டீசரின் படி, சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ மாடலானது நடக்கவிருக்கும் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ரூ.12,990 க்கு வாங்க கிடைக்கும். இருப்பினும், இந்த சலுகையில் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கும் என்பதையும் பிளிப்கார்ட் டீஸர் வெளிப்படுத்துகிறது.
Redmi Note 12 Pro Plus 5G மீதான சலுகைகள்
பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் மீது பிளாட் ஆஃபர் கிடைக்கும் என்பதை மட்டுமே பிளிப்கார்ட்டின் டீஸர் வெளிப்படுத்துகிறது. ஆனால் சரியாக எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்கிற விவரம் வெளிப்படுத்தப்படவில்லை. இந்த போனின் மீது வங்கி சலுகைகளும் கிடைக்கும்.
Google Pixel 7 மீதான சலுகைகள்
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது, சில மாதங்களுக்கு முன்பு ரூ.59,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் மீதும் தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகள் கிடைக்கும். பிளிப்கார்ட்டின் கூற்றுப்படி பிக்சல் 7 மாடலானது ரூ.50,000 க்குள் வாங்க கிடைக்கும் கூடுதலாக பிக்சல் 7 ப்ரோ மீதும் தள்ளுபடி இருக்கும்.
Nothing Phone 1 மீதான சலுகைகள்
கடைசியாக பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையில் நத்திங் போன் 1 மீதும் தள்ளுபடி கிடைக்கும். வெளியான டீஸரின் படி இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,000 க்குள் வாங்க கிடைக்கும். வழக்கம் போல இந்த ஸ்மார்ட்போனின் மீதும் கூட கூடுதலாக சில வங்கி சலுகைகள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








