ஆகஸ்ட் 9 வரை ஆர்டர் அள்ளும்.. Flipkart-ல் iPhone 14 வெறும் ரூ.26,399 க்கு.. வேற என்ன போன்கள் மீது சலுகை?
பிரபல ஈ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart), 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு (மறுபடியும்) பிக் சேவிங் டேஸ் (Big Saving Days) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்து. இது ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி முடிவடையும்.
வழக்கம் போல் இம்முறையும் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்களின் (Best Selling Smartphones) மீது, அதாவது நன்றாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் மீது பல வகையான பிரம்மாண்ட சலுகைகள் கிடைக்கும் என்று பிளிப்கார்ட் டீஸ் செய்துள்ளது. அவைகளில் தவறவிட கூடாத சில பெஸ்ட் டீல்கள் (Best Deals) பற்றிய விவரங்கள் இதோ:

பிளிப்கார்ட்டின் புதிய பிக் சேவிங் டேஸ் விற்பனையில் நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14) மாடலைத்தான். தற்போதைக்கு இதுதான் மிகவும் மலிவான விலையில் வாங்க கிடைக்கும் ப்ரீமியம் ஆப்பிள் மாடலாகும். பிளிப்கார்ட் இதை இன்னும் மலிவான விலைக்கு விற்பனை செய்யவுள்ளது.
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஆகஸ்ட் 4 தொடங்கும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 14 ஆனது வெறும் ரூ.26,399 க்கு வாங்கலாம். அதாவது ஐபோன் 14 மீது பிளிப்கார்ட் வழங்கும் பல்வேறு வகையான சலுகைகளின் கீழ் உங்களுக்கு ரூ.43,600 தள்ளுபடி கிடைக்கும்.
பிளிப்கார்ட்டில் ஐபோன் 14 மாடலானது ரூ.10,901 என்கிற நேரடி தள்ளுபடிக்கு (Intial Discount) பின்னர் ரூ.68,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதவிர்த்து எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.4000 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஐபோன் 14-ன் விலையை ரூ.64,999 ஆக குறைக்கலாம்.
இது தவிர, பிளிப்கார்ட் உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.38,600 வரையிலான எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியை (Exchange Offer) வழங்குகிறது. அதாவது அனைத்து வங்கி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுக்கு பிறகு, ஆப்பிள் ஐபோன் 14 மீது உங்களுக்கு ரூ.43,600 வரையிலான தள்ளுபடி கிடைக்கும்; கடைசியாக அதை வெறும் ரூ.26,399 க்கு வாங்க முடியும்.
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மீதும் தள்ளுபடி மற்றும் சலுகைகள் கிடைக்கும். மேற்கண்ட 2 ஐபோன்கள் தவிரத்து, பிளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனையின் போது சாம்சங்கின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ்22+ (Galaxy S22+) மாடலும் கூட மலிவு விலையில் வாங்க கிடைக்கும். தற்போது இது ரூ.59,999 பட்டியலிடப்பட்டுள்ளது; விற்பனையின் போது இதன் விலை இன்னும் குறையும்.
இதே போல கூகுளின் பிக்சல் 6ஏ (Google Pixel 6a), சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 (Samsung Galaxy Z Flip 3) போன்ற பிற ஸ்மார்ட்போன்கள் மீதும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி கிடைக்கும். எந்தெந்த ஸ்மார்ட்போன்ங்கள் மீது சரியாக என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்கிற விவரங்கள் வரும் நாட்களில் அல்லது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை நிகழ்வுக்கு சற்று முன்பு வெளியிடப்படும்.
பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் ஆனது ஆகஸ்ட் 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும் என்பதை மீண்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். அந்த நேரத்தில், வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்படும். நீங்களொரு பிளிப்கார்ட் பிளஸ் மெம்பராக (Flipkart Plus Member) இருந்தால் வழக்கம் போல சிறப்பு விற்பனைக்கான முன்கூட்டிய அணுகலை பெறுவீர்கள்.
ஒருவேளை நீங்கள் பழைய ஐபோன்களை வாங்க விரும்பவில்லை, ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) மாடலுக்காக காத்திருப்பீர்கள் என்றால்,அது இந்த ஆண்டு செப்டம்பர் தொடக்கத்தில் அறிமுகம செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது செவ்வாயில் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








