Home
News

புது ரூல்ஸ்.. விமான டிக்கெட் Refund-ல் அதிரடி மாற்றம்.. இனி 48 மணி நேரத்திற்குள் CANCEL செய்தால்?

விமான போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு ஆன டிஜிசிஏ (DGCA - Directorate General of Civil Aviation) ஆனது, விமான நிறுவனங்களுக்கான டிக்கெட் ரீபண்ட் (டிக்கெட் பணத்தை திரும்ப பெறுவதற்கான - Flight Ticket Refund) செயல்முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

புதிய விதிகளின் கீழ் - டிக்கெட்களை புக் செய்த 48 மணி நேரத்திற்குள் விமான பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிறுவனத்தின் வலைத்தளம் மூலம் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் போது, ​​முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் பயணிகளால் "பிழை" சுட்டிக்காட்டப்பட்டால், அதே நபரின் பெயரில் திருத்தம் செய்வதற்கு, விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புது ரூல்ஸ்.. விமான டிக்கெட் Refund-ல் அதிரடி மாற்றம்!

ஒருவேளை டிராவல் ஏஜென்ட் / போர்ட்டல் மூலம் டிக்கெட் வாங்கினால், பணத்தை திரும்ப பெறும் பொறுப்பு விமான நிறுவனங்களிடமே இருக்கும், ஏனெனில் ஏஜென்ட்கள் அவர்களால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளே ஆவார்கள் என்றும், பணத்தைத் திரும்ப பெறும் செயல்முறை 14 வேலை நாட்களுக்குள் முடிவடைவதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.

விமான டிக்கெட்டுகளை திரும்பப் பெறுவதற்கான திருத்தப்பட்ட சிவில் விமான போக்குவரத்துத் தேவைகள் (CAR) கீழ், விமான நிறுவனங்கள் 48 மணிநேர "லுக்-இன் விருப்பத்தை" வழங்க வேண்டும். இதன் போது பயணிகள் திருத்தப்பட்ட விமானத்தில் கட்டண வேறுபாட்டை தவிர அபராதம் இல்லாமல் முன்பதிவுகளை ரத்து செய்யலாம் அல்லது திருத்தலாம்.

இருப்பினும், முன்பதிவு செய்த நாளிலிருந்து உள்நாட்டு விமானங்களுக்கு ஏழு நாட்களுக்குள் அல்லது சர்வதேச விமானங்களுக்கு 15 நாட்களுக்குள் புறப்பட்டால், விமான நிறுவனத்தின் இணையதளத்தில் நேரடியாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இந்த வசதி பொருந்தாது. 48 மணி நேர காலத்திற்கு பிறகு ரத்து செய்வதற்கான நிலையான கட்டணம் அல்லது திருத்த கட்டணங்கள் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு மருத்துவ அவசரநிலை காரணமாக விமான பயணிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களால் டிக்கெட் ரத்து செய்வதற்கான விதிமுறைகளிலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, மருத்துவ அவசரநிலை காரணமாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், அதே பிஎன்ஆர்-ல் பட்டியலிடப்பட்டுள்ள பயணி அல்லது குடும்ப உறுப்பினர் பயணக்காலத்தில் அனுமதிக்கப்பட்டால் /மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், விமான நிறுவனங்கள் ரீபண்ட் கொடுக்கலாம் அல்லது கிரெடிட் ஷெல்லை வழங்கலாம்.

சிஏஆர் (CAR) என்கிற சிவில் விமானப் போக்குவரத்து தேவைகளில் ( Civil Aviation Requirements) அறிவிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் ஆனது சரியான நேரத்தில் பணத்தை திரும்ப பெறாதது குறித்த பயணிகள் புகார்கள் அதிகரித்து வருவதன் பின்னணியில் இருந்து வருகின்றன. திருத்தப்பட்ட இந்த சிஏஆர் ஆனது 2026 பிப்ரவரி 24 அன்று வெளியிடப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 2025 இல், திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்கள் பயணிகள் தொடர்பான மொத்தம் 29,212 புகார்களை பெற்றன, அவற்றில் 7.5 சதவீதம் பணத்தைத் திரும்ப பெறுவது தொடர்பான புகார்கள் ஆகும். அந்த மாதத்தில், உள்நாட்டு விமான நிறுவனங்கள் 1.43 கோடிக்கும் அதிகமான பயணிகளை கொண்டு சென்றதாக டிஜிசிஏ தரவுகள் தெரிவிக்கின்றன. உலகின் வேகமாக வளர்ந்து வரும் சிவில் விமானச் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும், மேலும் 2025 ஆம் ஆண்டில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் 16.69 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கொண்டு சென்றன என்றும் தரவுகள் கூறுகின்றன.

Best Mobiles in India

English summary
New Flight Ticket Refund Rules From DGCA Now Passengers can cancel without extra charge within 48 hours
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X