Home
News

புது Flight ரூல்ஸ்.. இனி விமானத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது? 3000 மீட்டர் உயரத்துக்கு போன பின்னரே?

1 மணிநேர பயணமாக இருந்தாலும் சரி 8 மணி நேர பயணமாக இருந்தாலும் சரி.. விமான பயணத்தின் போது கையில் ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப் இல்லையென்றால் 1 நொடி, 1 யுகம் போல செல்லும். எனவே தான் விமான நிறுவனங்கள் வழங்கும் மிகவும் பிரபலமான உள் சேவைகளில் ஒன்றாக பொழுதுபோக்கு சேவைகள் உள்ளன!

இதன்கீழ் விமான பயணிகள் இண்டர்நெட் ப்ரவுஸிங், திரைப்படங்களை பார்ப்பது மற்றும் இமெயில்களை செக் செய்வது போன்ற விஷயங்களை செய்வார்கள். இப்படியாக தங்களுடைய விமான பயணமானது சலிப்படையாமல் இருப்பதையும் அல்லது மிகவும் பயனுள்ளதாக இருப்பதையும் விமான பயணிகள் உறுதி செய்கிறார்கள்.

புது Flight ரூல்ஸ்.. இனி விமானத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது?

இது தொடர்பான ஒரு விஷயத்தில் தான் ஒரு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய அரசாங்கம் ஆனது, விமான பயணத்தின் போதான வைஃபை பயன்பாட்டிற்கான புதிய கட்டுப்பாடுகளை (New rule for Wi-Fi usage in Flight) அறிவித்து, அவைகளை நடைமுறைக்கும் கொண்டுவந்து உள்ளது.

இனிமேல், விமானத்தில் உள்ள பயணிகள், இந்திய வான்வெளியில் குறைந்தபட்சம் 3000 மீட்டர் உயரத்தை கடந்த பின்னரே வைஃபை-ஐ அணுக முடியும். இதன் மூலம் தரைவழி மொபைல் நெட்வொர்க்குகளில் குறுக்கீடுகள் (Interference with terrestrial mobile networks.) ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று இந்திய அரசாங்கம் நம்புகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த விதியானது விமானம் மற்றும் கடல்சார் இணைப்பு திருத்ப்பட்ட விதிகள் 2024 (Flight and Maritime Connectivity Amendment Rules, 2024) என அழைக்கப்படுகிறது. 2018 விமானம் மற்றும் கடல்சார் இணைப்பு விதிகள் ஆனது இந்திய வான்வெளியில் "குறைந்தபட்சம் 3,000 மீட்டர் உயரத்தில்" உள்ள விமானங்களில் தான், விமானம் மற்றும் கடல்சார் இணைப்பு சேவை வழங்குநர்கள் (In-flight and Maritime Connectivity service providers) மொபைல் தகவல் தொடர்பு சேவைகளை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.

ஆனால் புதிய விதிகள் ஆனது 3000 மீட்டர் உயரத்தை தாண்ட வேண்டும் என்று கூறுகிறது. இது ஒரு புறப்பாடு மற்றும் தரையிறக்கம் போன்ற ஒரு விமானத்தின் முக்கியமான கட்டங்களில் டிவைஸ் பயன்பாட்டை (Restrict device usage in Flight takeoff and landing.) கட்டுப்படுத்தும் தற்போதைய பாதுகாப்பு நெறிமுறைகளை இன்னும் கடுமையாக்குகிறது.

விமானங்களில் எலெக்ட்ரானிக் டிவைஸ்களை பயன்படுத்துவது தொடர்பான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கனெக்டிவிட்டி சேவைகளும் சீரமைக்கப்படுவதை உறுதி செய்வதே இந்த திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த மாற்றங்கள் இந்திய வான்வெளியில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தரங்களை பராமரிப்பதன் அவசியத்துடன் கனெக்டிவிட்டி தேவையை சமநிலைப்படுத்துவதையும் உறுதி செய்கிறது.

இந்த புதிய விமான விதிகளோடு சேர்த்து, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எக்கச்சக்கமான புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. புதிய உள்நாட்டு பணப் பரிமாற்ற விதிகள் (Domestic Money Transfer Rule) அமலுக்கு வந்தன. இதன்கீழ் உள்நாட்டு பணப் பரிமாற்றத்திற்கான பல டிஜிட்டல் விருப்பங்கள் அணுக கிடைக்கின்றன .இதேபோல ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய விதி (New IRCTC Train Ticket Booking Rules) அமலுக்கு வந்தது.

இதன்கீழ் இரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முன்பிருந்த 120 நாட்கள் ​தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றை விட முக்கியமான யுபிஐ லைட் சேவையில் 3 முக்கிய மாற்றங்கள் (New UPI Lite Rules) கொண்டுவரப்பட்டன. இதன்கீழ் யுபிஐ லைட் பண பரிவர்த்தனை வரம்பு ரூ.500 இல் இருந்து ரூ.1000 ஆக அதிகரிப்பு, யுபிஐ லைட் வாலட் [பேலன்ஸ் ரூ.2000 ஆக அதிகரிப்பு, யுபிஐ லைட் சேவைக்கான புதிய ஆட்டோ டாப்-அப் அம்சம் ஆகியவைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

Best Mobiles in India

English summary
New Flight Rules From Indian Government Passengers Access Onboard WiFi After Height of 3000 Metres
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X