Home
News

வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் கொண்டுவரும் ஒரு தரமான அம்சம்.! என்ன தெரியுமா?

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான அம்சங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய அம்சமும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியின் உள்ளே வண்ணங்களை மாற்ற அனுமதிக்கும் புதிய அம்சத்தில் அந்நிறுவனம் வேலை செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது.

வெளிவந்த தகவலின்படி, விரைவில் வரும் புதிய அம்சம் ஆனது வாட்ஸ்அப்

அதாவது ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, விரைவில் வரும் புதிய அம்சம் ஆனது வாட்ஸ்அப் பயனர்களை Chat Box வண்ணங்களை மாற்றவும், பின்பு திரையில் text-க்கு பச்சை நிறத்தில் dark shade தேர்வுசெய்யவும் அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.

தனியுரிமைக் கொள்கையை

வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை அறிவித்த உடனே பல்வேறு மக்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த துவங்கி விட்டனர். அதிலும் டெலிகிராம் செயலியை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். ஆனாலும் வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு புதிய புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது.

 நிறுவனம் தனது

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஆடியோ மெசேஜை FAST FORWARD செய்ய புதிய வசதியை கொண்டுவர உள்ளது.. அதாவது நீண்ட ஆடியோ மெசேஜ்களை கேட்பதை எளிதாக்கும் புதிய அம்சத்தை தான் இந்நிறுவனம் கொண்டுவர உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு

ABetaInfo தகவலின்படி, வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை சோதிக்கிறது, இது ஐஒஎஸ்-ல் ஆடியோ பேக்கிரவுண்ட் ஸ்பீடை மாற்ற அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், நீங்கள் ஒரு வீடியோவை பாஸ்ட் பார்வேட் செய்வது போல, ஒரு வாட்ஸ்அப் ஆடியோ மெசேஜை 1.5எக்ஸ் அல்லது 2எக்ஸ் வேகத்தில் பிளே செய்து இயக்க முடியும். மேலும் வாடிக்கையாளர்கள் ஸ்டாண்டர்ட் 1 எக்ஸ் வேகத்திலும் ஆடியோ மெசேஜ்களை கேட்டகாலம் என்று கூறப்பட்டுள்ளது.

உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள்

அதிலும் உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் மிகவும் மெதுவாகப் பேசும் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜை உங்களுக்கு அனுப்பினால், அந்த மெசேஜை நீங்கள் விரைவாகப் புரிந்துகொள்ள இந்த FAST FORWARD அம்சம் அருமையாக உதவும்.

புதிய வசதி தற்போது பீட்டாவில்

ஆனால் இந்த புதிய வசதி தற்போது பீட்டாவில் இருப்பதாகவும், வாட்ஸ்அப் வெர்ஷன் 2.21.60.11 இந்த அம்சத்துடன் வரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு WABetaInfo- தளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு WhatsApp Web Beta எனும் திட்டம் உருவாக்கம் பெறுவதாகவும், இது உங்கள் ஸ்மார்ட்போனை இணையத்துடன் இணைக்காமல் வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்த உதவும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New feature to change colors in WhatsApp soon.!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X