Tinder அறிமுகம் செய்த புது அம்சம்! இளசுகளின் ஆர்வம் எதன் மீது உள்ளது? அதிகரிக்கும் ஓபன் ரிலேஷன்ஷிப்!
இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கைத் துணையைப் பார்த்து, பேசி, பழகி பின்னர் தேர்ந்தெடுக்கத்தான் இளைய தலைமுறையினர் விரும்புகின்றனர். ஆரம்பகாலத்தில் திருமண சேவைக்காக இயங்கி வந்த சேவைதளங்கள் போலவே இப்போது காதலர்களை கண்டறிவதற்காக பிரத்தியேக இணையதளங்கள் இயங்கி வருகின்றன.
இத்தகைய தளங்கள் மூலம் முகம் தெரியாதவருடன் பழகி ஏமாறும் சிலர் இருந்தாலும், பலர் தனக்கு ஏற்ற துணையை கண்டறிந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த டேடிங் (Dating) முறையை பிரபலமாக்கியதில் முக்கிய பங்கு டின்டருக்கு (Tinder) உண்டு. டின்டர் என்பது ஒரு டேட்டிங் செயலியாகும்.

இங்கு ஒருவரை பற்றிய விபரங்களையும், அவர் எந்த மாதிரியான துணையை எதிர்பார்க்கிறார் என்பதையும் செலுத்தி பதிவு செய்தால், அவருக்கு ஏற்றவர்களின் கணக்குகளை டின்டர் பரிந்துரை செய்யும். பல்வேறு கவர்ச்சிகரமான சேவைகளை டின்டர் வழங்கி வரும் நிலையில் இப்போது மேலும் சில புதிய அம்சங்களை தனது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு இணங்க சேர்த்துள்ளது.
டின்டரின் தாய் நிறுவனமான மேட்ச் க்ரூப்பின் (Match Group) மற்றொரு டேட்டிங் தளம் ஹிஞ் (Hinge). டின்டரின் இந்த புதிய அம்சங்களானது அதன் சகோதரியான ஹிஞ் தளத்திடம் இருந்து கவரப்பட்ட அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு டின்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு ரிலேஷன்ஷிப் கோல்ஸ் (Relationship Goals) என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து இப்போது மேலும் இரண்டு அம்சங்களை டின்ட்ர் சேர்த்துள்ளது.
இந்த அம்சங்கள் மூலம் தனது எதிர்பார்ப்பை தெளிவாக ஒருவர் குறிப்பிட முடியும். டின்டர் நிறுவனம் மக்கள் மத்தியில் பல கருத்துக்கணிப்பில் இறங்கி அதன் முடிவைப் பொறுத்து தான் இந்த புதிய அறிமுகங்களை சேர்த்துள்ளது. முதல் அம்சமாக டின்டர் தனது வாடிக்கையளர்களுக்கு அறிமுகம் செய்திருப்பது, தான் என்ன மாதிரியான ரிலேஷன்ஷிப்பை எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிடும் அம்சத்தை தான்.

இன்றைய சூழ்நிலையில் பல வகையான ரிலேஷஷிப்கள் புலக்கத்தில் உள்ளன. இதுவரை மேனோகேமி (Monogamy) மற்றும் எதிக்கல் மோனோகேமி (Ethical Monogamy) என்ற இரண்டு மட்டும் தான் அதிகமாக இருந்தது. எதிலுமே ஆராய்ந்து பார்த்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் இன்றைய தலைமுறையினர் ரிலேஷன்ஷிப்பையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறாலம். ஓப்பன் ரிலேஷன்ஷிப் (Open Relationship), ஓப்பன் டு எக்ஷ்ப்லோர் (Open to explore) போன்றவற்றை எதிர்பார்க்கிறார்கள்.
பாலி அமோரி (Polyamory) என்று பல விதமான ரிலேஷன்ஷிப்புகளை டின்டர் பட்டியலிட்டுள்ளது. டின்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் சுமார் 41% இளைய தலைமுறையினர் ஒரே ஒரு துணையை கொண்டிருக்கும் மேனோகேமி உறவிமுறையில் இருக்க விரும்புவது இல்லை என்று தெரியவந்துள்ளது. தான் எந்த வகையான ரிலேஷன்ஷிப்பை எதிர்பார்க்கிறோம் என்று வெளிப்படையாக தெரிவிக்கும் போது அவருக்கு ஏற்ற, ஒத்த சிந்தனையுடைய துணையை கண்டறிவது மிகவும் சுலபமானதாக இருக்குமாம்.
டின்டர் தளத்தின் பெரும்பாலான பயனாளர்கள் இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய துணைக்கு தனக்கு என்ன வேண்டும் என்ற தெளிவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். டின்டர் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைல் மில்லர் வெளியிட்ட குறிப்பில், 72% டின்டர் பயனாளர்கள் தனக்கு என்ன வேண்டும் என்ற தெளிவு இருப்பவர்களையே தங்களது துணையாக தேர்ந்துடுக்க ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளாதாக கூறியுள்ளார்.
டின்டர் அறிமுகப்படுத்திய மற்றொரு அம்சமாக தன்னைப்பற்றிய ப்ரொனௌன்னையும் (Pronoun) அதன் பயனாளர்கள் தங்களது பக்கத்தில் பதிவு செய்ய முடியும். டின்டர் தனது பட்டியளில் குறிப்பிட்டுள்ள ப்ரொனௌன்களில் ஏதாவது நான்கை தன்னை குறிக்கும் வகையில் தேர்ந்தெடுத்து தனது பக்கத்தில் வைத்துக்கொள்ளலாம். டின்டரின் இந்த இரண்டு புதிய அம்சங்கள் மூலம் அதன் பயனாளர்கள் தங்களுக்கான துணையை இன்னும் சிறப்பாக கண்டறிய முடியும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








