ரூ.3000-ஐ காப்பாற்றி கொள்ளுங்கள்.. புதிய FASTag எச்சரிக்கை.. கார், ஜீப், வேன் ஓனர்கள் குறி.. NHAI வார்னிங்!
கார், ஜீப், வேன் போன்ற வாகனம் வைத்திருப்பவர்கள் மற்றும் பாஸ்டாக் (FASTag) வருடாந்திர பாஸ் வாங்க திட்டமிட்டு உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கை ஆக இருக்கும் படி என்எச்ஏஐ (NHAI) என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏனென்றால் சைபர் குற்றவாளிகள் ஒரு புதிய மோசடி முறையை உருவாக்கி, பாஸ்டாக் வருடாந்திர பாஸ் வாங்குபவர்களை குறிவைத்து வருவதை என்எச்ஏஐ கண்டறிந்துள்ளது. இதன்கீழ் வாகன உரிமையாளர்கள் செய்யும் ஒரு எளிய தவறு அவர்களுக்கு ரூ.3,000நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தொடர்பான எச்சரிக்கையில், ஒரு வருடம் செல்லுபடியாகும் பாஸ்டாக் வருடாந்திர பாஸ்களை விற்பனை செய்வதாக கூறும் பல போலி வலைத்தளங்கள் மற்றும் இணைப்புகள் உள்ளன என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது. அறியாதோர்களுக்கு - பாஸ்டாக் வருடாந்திர பாஸ்-ஐ ராஜ்மார்க்யாத்ரா மொபைல் ஆப் (Rajmargyatra mobile app) மூலம் மட்டுமே வாங்க முடியும்.
ஏதோவொரு வலைத்தளம் அல்லது இணைப்பு வழியாக பாஸ்டாக் வருடாந்திர பாஸை விற்க முயற்சிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று என்எச்ஏஐ பயனர்களை எச்சரித்துள்ளது, ஏனெனில் இது ஒரு மோசடி வேலையாகும். இதன் கீழ் ஏமாற்றப்பட்டால் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவாகும் என்றும் எச்சரித்துள்ளது.
எக்ஸ் (X) தளம் வழியாக என்எச்ஏஐ வெளியிட்டுள்ள ஒரு பதிவின்படின் பாஸ்டாக் வருடாந்திர பாஸை விற்பனை செய்வதாகக் கூறும் போலி வலைத்தளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத இணைப்புகளுக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை பயனர்களை என்எச்ஏஐ எச்சரிக்கிறது. பாஸ்டாக் வருடாந்திர பாஸை அதிகாரப்பூர்வ ஆப் மூலம் மட்டுமே வாங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
வருடாந்திர பாஸ்களை வழங்கும் வேறு எந்த வலைத்தளம் அல்லது தளமும் அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் நிதி மோசடி அல்லது தனிப்பட்ட விவரங்களை தவறாக பயன்படுத்த வழிவகுக்கும். பாதுகாப்பாக இருக்க, தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்கவும், உங்கள் வாகனம் அல்லது பாஸ்டாக் விவரங்களை தெரியாத ஆதாரங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
பாஸ்டாக் வருடாந்திர பாஸ் என்றால் என்ன? தெரியாதவர்களுக்கு, இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவன லிமிடெட்டின் கூற்றுப்படி, பாஸ்டாக் வருடாந்திர பாஸ் ஆனது தனியார் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரொக்க கட்டணம் இல்லாமல் டோல் பிளாசாக்கள் வழியாக சுமூகமாக செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த பாஸ் ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள், எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும்.
பாஸ்டாக் யுபிஐ: கடந்த ஆண்டு அமலுக்கு வந்த புதிய விதிகளின்படி செல்லுபடியாகும் ஃபாஸ்டாக் (Valid FASTag) மற்றும் செயல்பாட்டில் உள்ள ஃபாஸ்டாக் (Functional FASTag) வைத்து இருப்பவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல, வழக்கமான கட்டணத்தின் கீழ் டோல் கேட்களை கடக்கலாம்.
ஆனால் யாரிடமெல்லாம் பாஸ்டாக் இல்லையோ, அவர்களுடைய வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணம் (தேசிய நெடுஞ்சாலை கட்டணம்) திருத்தி அமைக்கப்பட்டு இருந்தது. இதன்கீழ் பாஸ்டாக் பயன்படுத்தாத வாகன உரிமையாளர்களிடம் பாஸ்டாக் வைத்து இருக்கும் உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தை விட 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ரொக்கமாக பணம் செலுத்தினால் தான் பொருந்தும்.
ஒருவேளை பாஸ்டாக் இல்லாதவர்கள் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 2 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டாம். மாறாக 1.25 மடங்கு கட்டணம் செலுத்தினால் போதும். இது ஒப்பீட்டளவில் குறைவு தான். ஆனாலும் பாஸ்டாக் வைத்து இருந்தால், இந்த அளவு கூட அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








