புது ரூல்ஸ்.. இனி மாசத்துக்கு ரூ.340 பாஸ் கிடையாது.. FASTag பயனர்களே ரூ.3000 ரெடி பண்ணுங்க.. எப்போது அமல்?
2025 ஆம் ஆண்டில் ஃபாஸ்டேக் (FASTag) சேவையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை அமலுக்கு கொண்டுவர இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது போல் தெரிகிறது. இதன் கீழ் 2 வகையான புதிய ஃபாஸ்டேக் பிளான்கள் (2 New FASTag Plans) முன்மொழியப்பட்டுள்ளது. அதென்ன பிளான்கள்? இதன்கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? எவ்வளவு நாள் வேலிடிட்டி? இந்த மாற்றம் எப்போது முதல் அமலுக்கு வரும்? இதோ விவரங்கள்:
இந்திய அரசாங்கமானது ஒன் டைம் பேமண்ட் (One time payment) செயல்முறையின் கீழ், அதாவது ஒருமுறை கட்டணம் செலுத்தும் செயல்முறையின் கீழ் - வருடாந்திர ஃபாஸ்டேக் பிளான் (FASTag Annual Plan) மற்றும் வாழ்நாள் ஃபாஸ்டேக் பிளானை (FASTag Lifetime Plan) அறிவித்துள்ளது. இவ்விரு ஃபாஸ்டேக் திட்டங்களுமே இந்தியா முழுவதும் அன்லிமிடெட் பயணங்களை (Unlimited Travels) வழங்கும் திட்டங்களாக இருக்கும்.

பெயர் குறிப்பிடுவது போலவே ஃபாஸ்டேக் வருடாந்திர திட்டமானது, 1 ஆண்டு என்கிற வேலிடிட்டி (1 Year Validity) உடன் வருகிறது. இதற்கு ரூ 3,000 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு, இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நெடுஞ்சாலையிலும் பயணிப்பதற்கான சுதந்திரம் கிடைக்கும்
அடுத்ததாக உள்ள ஃபாஸ்டேக் வாழ்நாள் திட்டமானது, 15 ஆண்டுகள் என்கிற வேலிடிட்டி (15 Years Validity) உடன் வருகிறது. இதற்கு ரூ 30,000 கட்டணம் செலுத்த வேண்டும். இதன் கீழ் 15 வருடத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் அன்லிமிடெட் பயணங்களை மேற்கொள்ளலாம்.
இதில் ஃபாஸ்டேக் வருடாந்திரத் திட்டம் மிகவும் எளிமையான முறையில் செயல்படுகிறது. பயனர்கள் ரூ.3,000 க்கு தங்கள் ஃபாஸ்டேக்குகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும் மற்றும் அது செல்லுபடியாகும் வரை (அதாவது 1 ஆண்டு வரை) எந்தவொரு தேசிய நெடுஞ்சாலை அல்லது எக்ஸ்பிரஸ்வேயையும் (National Highways and Expressways) பயன்படுத்த முடியும்.
இந்த பாஸ்கள் தற்போதைய ஃபாஸ்டேக் அமைப்பில் (Current FASTag system) ஒருங்கிணைக்கப்படும் மற்றும் செல்லுபடியாகும் காலம் முடிந்ததும், பயனர்கள் அடுத்த 1 ஆண்டுக்கு அல்லது சாதாரணமாக ரீசார்ஜ் (FASTag Recharge) செய்ய வேண்டும். ஃபாஸ்டேக்கின் வாழ்நாள் திட்டமும் கூட இதே வழியில் தான் செயல்படும்.
தற்போது, பயனர்கள் மாதத்திற்கு ரூ.340 செலவாகும் மாதாந்திர பாஸ்களை (FASTag Rs.340 Monthly Pass) வாங்க முடிகிறது. இது ஆண்டுக்கு ரூ.4,080 க்கு சமம். மேலும் இது ஒரு சுங்கச்சாவடிக்கு மட்டுமே செல்லுபடியாகும். கூடிய விரைவில் இதில் சில மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது. புதிய வருடாந்திர திட்டத்துடன், ஃபாஸ்டேக்கிற்கான செலவு கணிசமாக குறையும். மேலும் இது இந்தியா முழுவதும் எந்த டோல் பிளாசாவையும் பயன்படுத்தும் சுதந்திரத்தை அளிக்கும்.
எப்போது அமலுக்கு வரும்? கடந்த மாதம், நிதின் கட்கரி, மொத்த டோல் வருவாயில் 26 சதவீதமாக உள்ளதால், தனியார் வாகனங்களுக்கான ஃபாஸ்டேக் அமைப்புடன் மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ்களை அறிமுகப்படுத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். ஆனால் சரியாக எப்போது அறிமுகம் செய்யப்படும் மற்றும் எப்போது முதல் அமலுக்கு வரும் என்கிற விவரங்களை அவர் பகிர்ந்துகொள்ளவில்லை.
மோர்த் (MoRTH) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (Ministry of Road Transport and Highways of India) வழியாக கிடைத்த தரவுகளின்படி, FY23 - 24 தனியார் வாகனங்கள் மூலம் மட்டும் ரூ.8,000 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. சுங்கச்சாவடிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 60 சதவீத போக்குவரத்திற்கு தனியார் வாகனங்கள் பங்களிக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








