புது FASTag ரூல்ஸ்.. இனி வாகன ஓட்டிகளுக்கு 2 ஆப்ஷன் தான்.. ரூ.3000-ஐ எடுத்து கையில் ரெடியா வைங்க.. இல்லனா?
இந்திய அரசாங்கமானது, தேசிய நெடுஞ்சாலைகளுக்கான சுங்கச்சாவடி வசூல் முறையில்.. அதாவது பாஸ்டாக் (FASTag) தொடர்பான செயல்முறையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இத மாற்றம் இன்னும் 2-3 வாரங்களில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதென்ன மாற்றங்கள்? புதிதாக முன்மொழியப்பட்ட கொள்கையின்படி (New Proposed Policy Regarding FASTag), வாகன உரிமையாளர்களுக்கு பாஸ்டாக் கட்டணம் தொடர்பாக 2 ஆப்ஷன்கள் இருக்கும். ஒன்று - வாகன உரிமையாளர்கள் வருடாந்திரமாக ரூ.3,000 செலுத்தும் முறையை (One-time annual payment of Rs.3000) தேர்வுசெய்யலாம்.

இது ஓட்டுநர்கள் ஆண்டு முழுவதும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் மற்றும் மாநில விரைவுச் சாலைகளில் வரம்பற்ற தூரம் பயணிக்க அனுமதிக்கும். அதாவது ரூ.3000 மதிப்பிலான "ஒரு ஆண்டு பாஸ்" முறை அமலுக்கு வந்த பின்னர், இந்தியா முழுவதும் பயணிக்க அனுமதிக்கும் பாஸ்டாக் ரீசார்ஜ்களுக்கு அவசியம் இருக்காது!
இரண்டாவது - தூரம் அடிப்படையிலான விலை நிர்ணயம் (Distance Based Pricing) இருக்கும். இது 100 கிமீ-க்கு ரூ.50 என்கிற நிலையான கட்டணத்துடன், ஒவ்வொரு பயணத்திற்கும் ஏற்ற மாதிரியான விலை நிர்ணயத்தை கொண்டிருக்கும். இது அடிக்கடி பயணம் செய்யாதவர்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.
உங்களிடம் ஏற்கனவே உள்ள பாஸ்டாக் இனி செல்லுபடியாகுமா? புதிதாக முன்மொழியப்பட்ட பாஸ்டாக் கொள்கையின்படி, வாகன உரிமையாளர்கள் எந்த புதிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை அல்லது புதிய பாஸ்டாக் அக்கவுண்ட்-ஐ உருவாக்க வேண்டியதில்லை என்பதால் இது ஒரு தொந்தரவு இல்லாத மாற்றமாக இருக்கும்.
அதாவது ஏற்கனவே உள்ள பாஸ்டாக் பயனர்கள் தங்கள் நடப்பு கணக்குகளை பயன்படுத்தி புதிய கொள்கையை தேர்வுசெய்யலாம். இதோடு சேர்த்து "வாழ்நாள் முழுவதுமான பாஸ்டாக்"-ஐ அறிமுகப்படுத்தும் முந்தைய திட்டத்தை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது. இதன்கீழ் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.30,000 என்கிற கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
தற்போதைக்கு இந்த புதிய பாஸ்டாக் கொள்கை இன்னும் பரிசீலனையில் தான் உள்ளது. இருப்பினும், செயல்படுத்தப்படும்போது, இந்த புதிய அமைப்பு இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான ஓட்டுநர்களுக்கு திறமையான மற்றும் பயனர் நட்பு-மிக்க பயண அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விதிகள் கடந்த 2025 பிப்ரவரி முதலே விவாதத்தில் இருந்துவருகிறது. நேரத்தில் ஒன் டைம் பேமண்ட் (One time payment) செயல்முறையின் கீழ், அதாவது ஒருமுறை கட்டணம் செலுத்தும் செயல்முறையின் கீழ் - வருடாந்திர ஃபாஸ்டேக் பிளான் (FASTag Annual Plan) மற்றும் வாழ்நாள் ஃபாஸ்டேக் பிளானை (FASTag Lifetime Plan) இந்திய அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஃபாஸ்டேக் வருடாந்திர திட்டமானது, 1 ஆண்டு என்கிற வேலிடிட்டி (1 Year Validity) உடன் வரும் என்றும், இதற்கு ரூ 3,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், இந்த திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு, இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நெடுஞ்சாலையிலும் பயணிப்பதற்கான சுதந்திரம் கிடைக்கும் என்றும் பேசப்பட்டது. தற்போது இதுதான் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்ததாக உள்ள ஃபாஸ்டேக் வாழ்நாள் திட்டமானது, 15 ஆண்டுகள் என்கிற வேலிடிட்டி (15 Years Validity) உடன் வரும் என்றும், இதற்கு ரூ 30,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், இதன் கீழ் 15 வருடத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் அன்லிமிடெட் பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது செயல்முறைக்கு வராது என்பது போல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








