Home
News

அக்டோபர் 31 கடைசி.. இது தெரியாம TOLL GATE பக்கம் போயிடாதீங்க.. FASTag-ல் புதிய மாற்றம்.. என்னென்ன தெரியுமா?

பாஸ்டேக் (FASTag) பயன்பாட்டில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி சில முக்கியமான மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாகப் பழமையான பாஸ்டேக்குகள் மாற்றம், கே.ஓய்.சி அப்டேட் உள்ளிட்ட பல நடைமுறைகள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் (NPCI) அறிவித்த தகவலின்படி, பாஸ்டேக் புதிய விதிமுறைகள், மின்னணு கட்டண வசூல் முறை இன்று முதல் (ஆகஸ்ட் 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதுவும் கணினி எளிதாக பாஸ்டேக்குகளை அடையாளம் காணும் வகையிலும், அதிக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அக்டோபர் 31 கடைசி.. இது தெரியாம TOLL GATE பக்கம் போயிடாதீங்க..

தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் அறிவித்த புதிய விதிகளின்படி பாஸ்டேக் பயன்படுத்துவோர் கேஒய்சி விவரங்களை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக அக்டோபர் 31-ம் தேதிக்குள், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு பாஸ்டேக்குகளை வாங்கியவர்கள் தங்கள் கேஒய்சி (KYC) விவரங்களை இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 5 ஆண்டுகள் பழமையான பாஸ்டேக்குகள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றால் பாஸ்டேக்குகளை முழுமையாக மாற்ற வேண்டும். இதைக் கூட வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு முக்கியமான மாற்றங்கள் இந்த பாஸ்டேக் வசதியில் கொண்டுவரப்பட்டுள்ளன.

அக்டோபர் 31 கடைசி.. இது தெரியாம TOLL GATE பக்கம் போயிடாதீங்க..

அதன்படி இன்று முதல் பாஸ்டேக் பயன்படுத்துபவர்கள், பாஸ்டேக் உடன் வாகனத்தின் பதிவு எண் மற்றும் சேஸ் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். அதுவும் புதிய வாகன உரிமையாளர்கள் தங்கள் பதிவு எண்ணை வாங்கிய 90 நாட்களுக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாஸ்டேக் பயன்படுத்தும் மக்கள் அதனை சுங்கச்சுவாடிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில் வாகனத்தின் முன்பக்கத்தில் கண்டிப்பாக தங்கள் பாஸ்டேக்குகளை ஒட்ட வேண்டும். அதேபோல் பாஸ்டேக்கை மொபைல் நம்பர் உடன் இணைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 31 கடைசி.. இது தெரியாம TOLL GATE பக்கம் போயிடாதீங்க..

இப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள் பாஸ்டேக் பயன்படுத்துவோருக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அதுவும் பழைய வாகனங்கள் அல்லது பழைய பாஸ்டேக் பயன்படுத்துவோரைக் கணிசமாகப் பாதிக்கும். மேலும் இந்த விதிமுறைகளுக்கு மாறாவிட்டால் சுங்கச்சாவடிகளில் தேவையற்ற சிரமங்கள் ஏற்படும்.

குறிப்பாக நீங்கள் பாஸ்டேக் வாங்கிய தேதியைப் பாருங்கள். ஒருவேளை 3 முதல் 5 வருடத்திற்குள் பாஸ்டேக் வாங்கி இருந்தால், வரும் அக்டோபர் 31-க்கு முன் KYC அப்டேட் செய்து முடித்துவிடுங்கள். ஆனால் 5 வருடங்களுக்கும் மேலான பாஸ்டேக் என்றால் அதனை அடியோடு மாற்றிவிடுங்கள். அதேசமயம் பாஸ்டேக் பயன்படுத்துவோர், உங்கள் வாகனத்தின் பதிவு மற்றும் சேஸ் எண்களை பாஸ்டேக் உடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New FASTag rules come into force on August 1 2024: Everything you need to know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X